You are currently viewing பாலக்ரிஷ்ணனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு  யாறும் பதில் சொல்ல வருகிறீர்களா
பாலஸ்தானம் நிகழ்வுகள்

பாலக்ரிஷ்ணனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு யாறும் பதில் சொல்ல வருகிறீர்களா

எனக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு எது நஷ்ட ஈடு?

நான் பட்ட மன உளைச்சலுக்கு எது நஷ்ட ஈடு? யாரிடம் கேட்கலாம்? யார் பொறுப்பு ஏற்பார்கள்? பதில் சொல்ல முடியும்.

எனது மோட்டிவ்

பாலகிருஷ்ணன் என்னிடம் வாங்கிய சொத்து சம்பந்தமான விஷயங்கள் பற்றி பேசும் முன் எனது மன உளைச்சல் பற்றி ஒரு முழமை யான புரிதல் இருக்க வேண்டும்.

அந்த பகுதி புரிந்தால் தான் எனது மோட்டிவ் என்ன என்பது புரியும்.

எது எனது மன உலைச்சல்? என்ன மன உளைச்சல்?

நம்பிக்கை துரோகம் என்றால் என்ன? எப்படி இருக்கும்?

மீண்டும் அத்தியாயம் ஒன்று முதல்…

மேலமருங்கூர் நான் வந்து வெறும் சாமி கும்பிட்டு போக வேண்டியவனை, முதல் முதலில் கோவில் கட்டி கொடுக்க சொன்னது பாலகிருஷ்ணன்.

மேலமருங்கூரில் எனக்கு கோவில் தேவை இல்லாதது.

எனக்கு துண்டு, தேங்காய் மூடி அனைத்தும் தேவை இல்லாதது.

அப்பா கட்டிய கோவில் பராமரிப்பு இல்லையே என்று சரி கட்டி கொடுப்பது தவறு இல்லைதான் என்று நினைத்தேன்.

அன்றய நிலையில், பாலகிருஷ்ணன், மலர்க்கொடி அம்மாள், தனபாலன் ஐயா, தனசேகரன் ஐயா,மோகன் அண்ணன் போன்ற பலர் வந்து பிறகு பேசினார்கள் என்றாலும் யாரையும் நான் நம்ப வில்லை என்பதுதான் உண்மை.

நம்ப வேண்டும் என்ற அவசியமும் இல்லை. எனது தந்தையார் கோவில் கட்டிய சரித்திரம் மிக கொஞ்சமே தெரிந்தாலும், நான் நம்பி விட கூடாது என்று மிகத் தெளிவாக இருந்தேன்.

பாலகிருஷ்ணன் கோவில் கட்ட கேட்டுக்கொண்டதும் தவறவில்லை. கட்டி கொடுப்பதிலும் தவறு இல்லை என்று தோன்றினாலும், பல காரியங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தால் மட்டுமே செயல் படுத்த முடியும் என்றும் தோன்றியது. முழுமையான

நம்பிக்கை எனக்கு வரவில்லை.

எப்படி நம்பினேன்?

பாலஸ்தானம் நிகழ்வுகள் அன்று ஸ்தபதியிடம், அத்தனை பெரியவர்கள் ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போட்டபிறகு தான் ஓரளவு நம்பிக்கை வந்தது. நம்பினேன்.

என்ன நம்பினேன். ஒவ்வொரு நபரிடமும் பணம் கொடுத்து, பைனான்ஸ் வியாபாரம் செய்யலாம் என்று நம்பவில்லை.

கோவில் காரியம் செய்யலாம் என்று நம்பினேன்.

அந்த ஊரை நம்பி தர்மம் செய்பவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள் என்று நம்பினேன்.

காரணம் அத்தனை பெரிய மனிதர்கள், கிராமத்தில் பெரிய மனிதர்கள் என்று மதிக்கப்படுபவர்கள், நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டார்கள் என்று நம்பினேன்.

அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவர்களை நம்பி, எனக்கு தெரிந்த பெரிய வியாபாரிகளிடம் வசூல் செய்யலாம், என்று நம்பினேன்.

கோவில் கட்ட கையெழுத்து போட்டவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நம்பினேன்.

கையெழுத்து போட்டவர்கள், கும்பாபிஷேகம் நடைபெறுவதை தடுக்க, ஐயர்களை மிரட்டி, வரவிடாமல் தடுக்க முயற்சிக்க மாட்டார்கள் என்று நம்பினேன்.

கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருக்க போலீஸ் நிலையம் போக மாட்டார்கள் என்று நம்பினேன்.

அந்த மாதிரி நம்பிக்கை துரோகம் செய்ய மனம் இல்லாத பெரிய மனிதர்கள் தான் கையெழுத்து போட்டு இருப்பார்கள் என்று அனுமானித்தேன்.

எனது தந்தையாரை நினைக்கும் போது பல நேரங்களில் சிரிப்பு வருகிறது.

நான் அத்தனை பெரிய மனிதர்கள் கையெழுத்து போட்ட பிறகு நம்பியதே தவறு என்று இருக்கையில்,

அப்பா ஊர் பெரிய மனிதர்களின் வெறும் வார்த்தையை வைத்து எப்படி  கோவில் காட்டினார்?

அந்த ஊர் மக்களின் எந்த தகுதியை வைத்து கட்டினார்?

இப்பொழுது, வாக்கு கொடுத்த, கையெழுத்து போட்ட எத்தனை பெரிய மனிதர்கள் சமீப கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டு ஒத்துழைக்கின்றனர்?

 

பாலாலய நிகழ்வுகள்

எங்கள் பகை தீர்ந்த பின் கோவில் கட்டலாம்-இப்போது வேண்டாம். ஏன் இப்படி சொல்லி எனக்கு மன உளைச்சல் இல்லாமல் சுலபமாக ஏன் செய்யவில்லை.

1) ஒரு முறை பாலகிருஷ்ணன், கோவில் வேலை நடந்த பொழுது, அவர் சொன்னார்:
நான் கொடுக்க ஒப்புக்கொண்ட ரூபாய் 20000/- தொகையை, இந்த ஊரில் நம்பும் படி எவனும் இல்லை. நீங்கள் வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறார்.

அவர் நம்பாத ஊரில் என்னை ஏன் கோவில் கட்ட சொல்ல வேண்டும்?

கையெழுத்து போட வேண்டும்?

இவரின் ருபாய் 20000/ வாங்கி ஸ்தபதியிடம் நான் வந்து கொடுக்க, நான் ரூபாய் 50000 – 100000 பிரயாணம் செய்து வர வேண்டுமா?

2)பாலகிருஷ்ணன் மகன் ஒரு முறை சொன்னது:

ஊரில் எங்களுக்குள் உள்ளூரில் பலவித பகைமைகள் இருக்கிறது.

அதனால் கோவிலுக்கு பல கெடுதல்கள் செய்ய வேண்டி வந்து விட்டது.

உங்கள் ஊரில் சர்வ சுதந்திரமாக, பகைத்துக்கொள்ளுங்கள்.

சண்டை போட்டுக்கொள்ளுங்கள்.

இது உங்கள் பிரச்னை.

எனக்கு தேவை இல்லாதது.

கோவில் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட மாட்டேன்.

எனக்கு மாலை வேண்டும்.

பதவி வேண்டும். எங்கள் கோழி, நில பிரச்னை தீர வேண்டும்.

இப்படி சொல்லி எனது மன உளைச்சலை தடுத்து இருக்கலாமே.

நீங்கள் கோவில் காட்டினாலும் ஒத்துழைக்க மாட்டோம்.

திருவிழாக்களில், வீட்டை பூட்டி விட்டு போவோம்.

இப்படியெல்லாம் சொல்லி கையெழுத்து போடாமல் இருந்து இருக்க வேண்டியது தானே?

தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள நேர்மை, துரோகம் செய்யாமை போன்ற நற்குணங்கள், படித்த மக்களுக்கு இல்லையா?

கோவில் வேண்டாம் என்று சொல்லவும், கோவில் கட்டிக்கொடு என்று கேட்காமல் இருக்க முழு சுதந்திரம் இருக்கும்போது, என்னை ஏன் இதில் இணைக்க வேண்டும்?

இந்த ஊர் பெரிய மனிதர்கள் ?

தான் பாலாலயத்தில் கலந்து கொண்டு, கோவில் கட்ட அனைவரும் இணைந்து, அதில் சில பெரியவர்கள் கையெழுத்து போட்டுவிட்டு, அந்த தான் போட்ட கையெழுத்துக்கு தானே மதித்து நடக்காதபோது, மற்றவர் எப்படி மதிப்பது?

தலைவர் பதவி கொடு என்று வாங்குவது ஒரு தரமான தலைவன் இல்லை. பதவியே வேண்டாம் என்று கோவிலுக்கு தொண்டு செய்து, கோவிலை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் திறமை உள்ளவர் மட்டுமே நல்ல, உயர்ந்த தலைவர்.

நமக்குத்தான், தேங்காய் மூடிக்கு அடித்துக்கொண்டு, கோவிலை பராமரிக்காமல், 36 வருடம் போட்டு விட்டது நமது தகுதியை, வெளிப்படுத்துகின்றதே. பிரதிபலிக்கின்றதே!

பாலஸ்தானம் நிகழ்வுகள்

செட்டியார் குடும்ப நிலம்

ஒரு கோவில் கட்ட, ஏகப்பட்ட மர்மமும் மொல்லை மாறித்தனமும் பல ரூபத்தில் வெளிப்படுகிறது.

பழைய காலங்களில், தாழ்த்த பட்ட சமூகத்தினரை, அடக்கி, தான் சொல்வதே ஞாயம் என்று அடக்கி வழிநடத்தப்பட்டனர்.

இன்று நிறைய பேர் படித்து, அவர்கள் நல்ல காரியம் செய்ய தொடங்கி விட்டனர்.

எங்கள் நிலத்தை வாங்கினதில் நிறைய மொல்லை மாறித்தனம் நடந்து உள்ளது என்பது மிக தெளிவாக படுகிறது.

கீழே வாட் சப்பில் சகோதர சகோதரி மற்றும் எனது அருமை தம்பி MKG ஷண்முகத்திடம் எழுதியது கீழே இணைத்துள்ளேன்

பாலாலய நிகழ்வுகள்

9 4 2022 ல் எங்களின்  உரையாடல்

இன்று காலையில் MKG ஷண்முகத்திடமும், பத்மாவிடமும் மருங்கூர் நிலம் பற்றி பேசியது தெரிந்ததே.

1)  ஷண்முகத்திடம் நான் பேசிய நோக்கம், அவன் பாலக்ரிஷ்ணனிடம் பேச்சுவார்த்தை இருக்கிறது என்ற ஒரே காரணம் தான்.

2) மேலமருங்கூரில், பாலக்ரிஷ்ணனிடம் எனக்கு அறிமுகமான யாரும் பேசிக்கொள்வது இல்லை என்று கேள்வி.

3) ஷண்முகம் எனது நோக்கம் தெளிவாக புரிந்து செயல் படுவதானால் சண்முகத்தின் உதவி கண்டிப்பாக தேவை. எனது நோக்கம் படி சமரசம் செய்ய முன்வல்லை என்றால், ஷண்முகம் உதவி நமக்கு தேவை படாது.

உரையாடல் தொடர்கிறது

* கோவில் கட்டும் முன்பே ஷ்ணமுகத்தை, கமிட்டி அமைக்க உதவ சொன்னேன். ஷண்முகம், பாலகிருஷ்ணனின் கருத்துக்கும், மற்றும் சிலர் கருத்துக்கும் முன்னுரிமை கொடுத்து பேசியது, எனது நோக்கத்துக்கு முன்னுரிமை கொடுக்காமல் பேசியது தெரிந்த விஷயம். எனது கோவிலை, எனது திட்டப்படி தான் கமிட்டீ அமைக்க ஏற்பாடு பிறகு நடந்தது. அந்த கமிட்டீ அமைக்க தவறி இருந்தால், இந்நேரம், கோவில் இருக்காது. மருங்கூரில் செட்டியார் குடும்பத்துக்கு வேளை இருக்காது.

  • மேலமருங்கூரில், அப்பாவுக்கு சொந்தமான சொத்தை, 25% எனது ஈவை மட்டும் விற்று விட்டேன் என்பது தெரிந்த விஷயம்.

 ( அந்த விற்ற தொகை எனக்கு நினைவு இல்லை. ஆனால் முழுத்தொகையும் கீறுகுடி கோவிலுக்கு கொடுத்து விட்டேன் என்பது தெரிந்த விஷயம். அந்த கோவில் கும்பாபிஷக அழைப்பும் எனக்கு வரவில்லை. கோவிலில் மு கி பாலுசாமி செட்டியார் பெயரோ, அவரின் வாரிசின் பெயரோ கீறுகுடி கோவிலின் கல்லில் பெயர் பதிக்கவில்லை)

2)என்னிடம் வாங்கியவர் 25% போக மீதம் 75% அவர் அனுபவித்து வருகிறார்.

3) இதை நான் கடுமையாக, எனது 3 சகோதர சகோதரிகளை ஆட்சேபிக்கிறேன்.

உரிமையாக்கிக்கொள்ளல்

1) 3 சகோதர சகோதரிகளுக்கு ஒரு கோரிக்கை.

2)அந்த இடம் சுமார் 10 லட்சம் மதிப்புள்ளதாக, ஷண்முகம் மூலம் தெரிந்து கொண்டேன்.

3) மூன்று சகோதர சகோதரிகள், அப்பாவின் இறந்த  சட்டிபிகேட், மற்றும், வாரிசு சட்டிபிகேட் வைத்து, உங்கள் 3 பேரின் பெயருக்கு, அவர் அவர் சதவிகித படி 31 5 2022க் குள் மாற்றி கொள்ள கோரிக்கை விடுகிறேன். அதற்கு தேவையான, உதவியும் நான் செய்ய முன் வருகிறேன்.

4) அப்படி நீங்கள் அலட்சியமாக, அந்த இடத்தை விவசாயம், கால்நடை வளர்த்தல், வாடகைக்கு விடுதல் போன்ற எந்த செயலும் செய்ய வில்லை என்றால், நீங்கள் பூர்விக சொத்தை அலட்சியம், அல்லது உங்களுக்கு உரிமையாக்கிக்கொள்ள ஆர்வம் இல்லாத பட்சத்தில், அப்பாவின் வாரிசான நானே எடுத்துக்கொள்ள முழு உரிமை எனக்கு இருக்கிறது. அந்த சட்டப்படியான உரிமை இருப்பதால், நான் எனது பேரில் பட்டாவை மாற்றிக்கொள்ள 1 6 2022ல் ஏற்பாடு செய்கிறேன்.

5) சகோதர சகோதரிகள், நான் பட்டாவை, எனது பேரில் மாற்றிக்கொள்ள ஆட்சேபம் இல்லை என்று நோட்டரி பப்லிகில், கையெழுத்து போட்டு கொடுத்தால் போதுமானது. 10 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கு, உங்கள் மூவரின் நோட்டரி பப்லிக் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

6) அல்லது எனக்கு கொடுக்க விருப்பம் இல்லை என்றாலும், நீங்கள்  விரும்பம் நபருக்கோ, ஸ்தாபனத்துக்கோ, கோயிலும் எழுதி வைக்கலாம்.

7) எனது கோரிக்கை 31 5 2022 க்குள், நீங்கள் உரிமையாக்கிக்கொண்டாலும், யாருக்கும் தானம் செய்தாலும் அல்லது என்னை எனக்கு பட்டா போட்டுக்கொள்ள அனுமதித்தாலும் அனைத்துக்கும் ஒத்துழைக்கிறேன். எதாவது 31 5 2022 க்குள்  செய்து விடுங்கள் அதுதான் எனது கோரிக்கை.

11/4/2022 ல் எங்களின்  உரையாடல்

தம்பி சிவஞானம், மேலமருங்கூர் பூர்வீக சொத்தை, அவர் அவர் உரிமை படி பட்டா செய்து எடுத்து உதவ என்னிடம் கோரிக்கை செய்துள்ளார். சகோதரிகள் எனது பெயருக்கு பட்டா செய்து கொள்ள சம்மதித்து விட்டாலும் சிவஞானம் வேண்டுகோள். 50 வயது எல்லா MKP வாரிசுகளுக்கும் தாண்டி வந்து விட்டதால், சர்வ சுதந்திரமாக, அவர் அவருக்கு சேர வேண்டியதை, அவர் அவர் பெயருக்கு வேண்டுமாம்.
அவரவர் சர்வ சுதந்திரமாக, விவசாயம் செய்யவோ, கால்நடை வளர்க்கவோ, தானம் செய்யவோ சுதந்திர முடிவு எடுக்க விரும்புவதால், சிவஞானம் கோரிக்கையை நான் ஏற்று எடுக்க உதவுகிறேன்.

சகோதரிகளும் சிவஞானம் விரும்பும் வழியை ஏற்றுக்கொள்ள வலியுறுத்துகிறேன். அதாவது எடுக்க, உங்கள் பேரில் பட்டா போடும் வரை மட்டும் நான் உதவுகிறேன். மற்றவை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் விரும்பும் வண்ணம் செய்துகொள்ளுங்கள்.

MKG ஷண்முகம், எங்கள் குடும்ப நிலத்தில் பாலக்ரிஷ்ணனிடம் நான் விற்ற 25% போக, மற்ற வாரிசின் பங்கை வக்கீல் வைத்து, திரும்ப எடுக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறார்.

மற்ற MKP வாரிசுகள், அவர்கள் பங்கு வேண்டும் என்று நினைக்கின்றனர். அவர்கள் கையால் எதோ தானம் செய்ய விரும்புவதாக கேள்வி.

ஏன்?

எங்கள் சொத்தின் பின் உள்ள புறம்போக்கு சொத்து பரிவர்த்தனை செய்துள்ளதாகவும், அதற்கு பாலகிருஷ்ணன் வாங்கியதாக பத்திரத்தை காண்பித்ததாக தகவல் வருகிறது.

என்ன என்ன மர்மங்கள் இருக்கிறது என்றும் புரியவில்லை.

பாலாலய நிகழ்வுகள்

சமாதானம்

MKG ஷண்முகம், பாலகிருஷ்ணனிடம் சொத்தை எடுக்க வேண்டாம், விட்டு விடுங்கள், போன்று சமாதானம் செய்ய முயல்வது ஒரு நல்ல விஷயம்தான்.

பாலகிருஷ்ணனும் அவர் பின்னாடி சென்ற கோஷ்டியும், அதாவது ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு கும்பாபிஷகத்தை தடை செய்ய ஒத்துழைத்த மனிதர்களை எப்படி அதை விடு இதை விடு என்கிறார் இந்த MKG ஷண்முகம்.

மிக முக்கிய கேள்வி, எனது மன உளைச்சலுக்கு. தீர்வு மட்டும் சொல்ல தயாராக இல்லை.

கமிட்டீ அமைக்க சொன்ன காலத்தில், அதன் அவசியம் என்ன என்று கூட அறிந்து கொள்ள கூட முயற்சி எடுக்க வில்லை.

கமிட்டி வேண்டாம், பாலகிருஷ்ணன், ஒத்துப்போக மாட்டார் என்று எனக்கு அறிவுரை தான் ஷண்முகம் கூறினார்.

விவசாயிக்கு, விதை போட்டு தண்ணி ஊற்றுவதன் அவசியம் நாம் சொல்லிக்கொடுக்க தேவை இல்லை.

மதுரையில், ஆயிர வைசிய ஆலயம், கல்லூரி காட்டும் பணியில் அல்லது, தொண்டு செய்யும் மனிதர்களிடம் பழகி இருந்தால் அனுபவம் கிடைத்து இருக்கும்.

மதுரை ஆயிர வைசிய சமூக தலைவர்கள், பல சேவைகளுக்கு, மலேஷியா வந்து, எங்களை போன்ற வியாபாரிகளிடம் வசூல் செய்தது தெரிந்த்தே.

ஒரு காலத்தில், ஆந்தை கூடி சாமியார், எங்கள் மலேஷியா கடைக்கு வந்து, கையில் வீபூதி எடுத்து கொடுத்து, சில வசூல் கொடுத்ததாக நினைவு. எனது இளம் பிராயத்தில்.

அதற்க்கு பதில் சொன்னால், ஓரளவு சமாதானம் செய்ய யோசிக்கலாம்.

கோவில் செயலாளர் பதவி இல்லாவிட்டால், தலைவர் பதவி இல்லாவிட்டால், மூன்று தலைமுறைக்கு முன் உள்ள உள்ளூர் குடும்ப பகைமை தீராவிட்டால், ஒப்பந்தத்தில், கையெழுத்து போடும் முன் நான் கோவில் கட்ட தடை செய்வேன் என்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் போதுமே.

ஒப்பந்தத்தில் ஒத்துழைக்க கையெழுத்து போட்டு விட்டு, கெடுதல் செய்தது எனது மன உளைச்சலுக்கு காரணம். அது ஒரு நம்பிக்கை துரோகம்.

வரவேற்புக்கள்

முக்கிய பிரச்சினை அல்லது உணர்வு

சின்ன வீடு என்ற சினிமாவில், மனைவி சொல்லுவாள். மனைவியை அணுகுவது,
கணவனனின் ஆசையை தீர்த்துக்கொள்ள அணுகலாம்
மனைவியின் ஆசையை தீர்க்க அணுகலாம்

ஆனால் இரக்கப்பட்டு அனுதாபப்பட்டு அணுக கூடாது.

இது சற்று ஆபாசமாக இருந்தாலும் எனக்கு இது ஒரு கல்லூரி பாடம் மாதிரி.

அதை அப்படியே சற்று அடாப்ட் செய்தால்:

இடம் வாங்கல் கொடுத்தாள், வியாபாரம் செய்தல் இருக்கலாம். அதில் நேர்மை இருக்கிறதா என்பது முக்கிய உணர்வு/பிரச்சனை.

கோவில் கட்டலாம், கட்டித்தர சொல்லலாம். அதில் மொட்டை போட, பால்குடம் எடுக்க, பூஜை செய்தல், சேவை செய்தல் போன்ற பக்தி சார்ந்த உணர்வு இருக்கிறதா என்பது முக்கிய பிரச்னை/உணர்வு.

பரிவர்த்தனையில் நேர்மையில்லாமை, கோவில் கட்டுவதில் பதவி நோக்கம் சார்ந்த செயலில் இருப்பவர்கள் நீண்ட காலம் சிறந்து வாழவில்லை. அனுபவத்தில் நிறைய பார்த்து விட்டேன்.

சுருக்கம்:மையப் பகுதி /மைய நோக்கம் என்ன தரம் வாய்ந்தது?

விஷயத்தை சுருக்க சொன்னால், உனது மைய நோக்கம் என்ன?

சின்ன வீட்டு சினிமாவில், கணவனே உனது மைய நோக்கம் என்ன? அதுதான் மனைவியின் கேள்வி.

எந்த மாதிரியான மைய நோக்கத்தில் என்னை அணுகுகிறாய்? பரிதாபப்பட்டா? உனது கள்ளக்காதலியை நினைத்தா? அடுத்தவன் மனைவியை நினைத்தா?

உனது பொருள் விநியோகத்தில், நேர்மையானதா? சிமென்டில் சாம்பலை, அரிசியில் கல்லை கலப்படம் செய்யும் நோக்கம் உள்ளதா?

இடம், நிலம் வாங்குவதில் விற்பதில் நேர்மையான மைய நோக்கம் இருக்கிறதா? ஒருவர் ரூபாய் 10000 கேட்கும் சொத்தை, 20000, 30000 வாங்கினால், அதன் பின் உள்ள நோக்கம் நேர்மையான மைய நோக்கம் என்று நம்ப வாய்ப்பு உண்டா?

ஒரு மனிதனின் தரத்தை அவனின் நோக்கமே நிர்ணயிக்கிறது. 36 வருடம் கழித்து பல பல மோசடி தகவல் கிடைக்கிறது. நேர்மையின்மை வெளிப்படுகிறது.

அரை நூற்றாண்டு ஒரு தொழில் இருக்கிறது என்றால், நேர்மை தான் மிக முக்கிய அம்சம். அது இன்றி எந்த திறமை இருந்தாலும் அது தாற்காலியம் தான்.

நேர்மையாக இருப்பது கஷ்டம் இல்லை. நேர்மையற்றவர்களை ஒதுக்கி விட்டு நமது வழியில் நடப்பது தான் கஷ்டம்.

இப்படிக்கு.

MKP பாண்டுரெங்கன்.

Balakrishnan bought a land
Balakrishnan bought a land
Balakrishnan bought a land