இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா???

சரியான புரிதல் இருக்கிறதா 3….         18 7 2020

நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா?

என்றாவது நான் சரியான புரிதலில் இருக்கிறேனா என்று எனக்குள் கேட்டதுண்டா?

சரியான புரிதல் இருக்கிறதா 3

பார்த்தது ஒரே விஷயம், புரிந்தது வெவ்வேறு விதம்பாகம் 2…சரியான புரிதல் இருக்கிறதா?

ஒரு வியாபாரி, ஒரு கட்டுமான என்ஜினீயர் மற்றும் ஒரு நீதிபதி நண்பர்களாக உலக நாடுகள் பலவற்றை சுற்றி விட்டு வந்தனர். மூவரிடமும் உலகம் சுற்றிய அனுபவங்களை பற்றி விசாரித்த போது மூவருடைய புரிதலும் அவரவர் தொழில் சம்பந்தமானதாக இருந்தது.

நீதிபதி கூறினார்:

” என் என்ஜினீயர் நண்பன் ஒரு மடையன். இந்தியா மற்றும் மலேசியாவில் கார் ஓட்டுபவன் முன் ஓடும் வாகனத்தை மோதினால் குற்றம்.

தாய்லாந்து சட்டப்படி பின் வருபவன் மோதினால் முட்டு வாங்கியவன் குற்றம். இதை அவனால் ஏற்க முடியவில்லை.”

“அவன் தாய்லாந்தில் கட்டுமான பணிக்கோ, அந்நாட்டில் குடியிருக்கவோ தகுதி அற்றவன்.”

கதையை  சுருக்கி சொன்னால்,  அதன் சாரம்,வியாபாரி, நீதிபதி மற்றும் என்ஜினீயர் சுற்றிய நாடுகள் சேர்ந்துதான் சென்றனர். ஒரே நேரத்தில்தான் சென்றனர். ஆனால் அனுபவங்கள் மட்டும் வேறு.

நீதிபதி தன் நாட்டு நீதியும் கலாச்சாரமும் மட்டுமே சிறப்பு வாய்ந்தது என்று ஆழ்ந்த நம்பிக்கையில் உலகம் சுற்றினால் அவர் ஒரு கிணற்று தவளையாக தான் இருக்க முடியும்.

என்ஜினீயர் உலகத்தில் தன் நாட்டு கட்டுமானம் சிறந்தது என்று உலகம் சுற்றினால், அவரின் மூளை திறக்கப்படவில்லை. மூடப்பட்டு விட்டது. அவரும் ஒரு கிணற்றுத்தவளை தான்.

வியாபாரி வெளிநாடு சென்று புதிய நுட்பங்களையும், புதிய கண்ணோட்டங்களையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அவரும் ஒரு கிணற்றுத்தவளைத்தான்.

Open Mind vs Closed Mind—-சரியான புரிதல் இருக்கிறதா 

ஓபன் மைண்ட் மற்றும் கிளோஸ்ட் மைண்ட் மனிதர்க்கும் நிறைய வேற்றுமை இருக்கிறது. இதை எத்தனை பேர் அறிவார்கள்?

மூடிய அல்லது திறக்கப்படாத, திறக்கமுடியாத, ஒரு மலரை போல் இயற்கையாக பூக்க இயலாத மனம் கொண்டவர்கள் தனது கிணற்று வட்டத்தை தாண்டி புரிந்து கொள்ளும் ஆற்றல் வராது என்பது உண்மைதான்.

உலகத்தில் மிக சிறந்த மனிதனாக இருக்கலாம். ஆனால் அவருக்கு  மருத்துவம் தெரியாது. அவரிடம் நமது உடல் உபாதைக்கு தீர்வு கேட்க மாட்டோம். இது சர்வ சாதாரணமா குழந்தைக்கும் தெரிந்த உண்மை.

ஆனால் நீதி அறியாதவரிடம் பஞ்சாயம் செய்து வைத்ததில் எத்தனை  பேர் வாழ்வு வீணாகி இருக்கும்?

எனது நிஜ வாழ்வில் நான் பெரிதும் மதிக்க கூடிய நபர்கள் கூட என்னிடம் பஞ்சாயம் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று மறுத்திருக்கேன்.

ஒரு சூழ்நிலையில் வயதில்  பெரியவர் என்றோ அல்லது அந்தஸ்த்தில் பெரியவர் என்றோ நியாயம் சொல்ல வருகிறேன் என்று வருபவர்களுக்கு, முதலில் எனது பிரச்சனை சம்பந்தமாக சிந்திக்க எவ்வளவு நேரம் செலவு செய்ய இயலும்?

அப்படி சிந்திக்க போதிய நேரம் எடுக்க இயலாதவரிடம்  அல்லது போதிய சிந்திக்க நேரம் இல்லாதவரிடம் என் வாழ்வு சம்பந்தமான முடிவுகளை அவர் கையில் கொடுப்பது அறிவற்ற செயலாகத்தான் இருக்கும்.

நான் கற்ற பாடத்தின் சுருக்கம்:-

நுட்பமாக, பல கண்ணோட்டத்தின் பார்வையில் பார்க்க முடியாதவர் திறமையாக சிந்திக்க முடியாது. இவர்களின் ஆலோசனை  அதிஷ்டவசமாக நன்மையாக அமைந்தால்தான். ஆனால் மிகவும் ஆபத்தானது.

பெரும்பகுதி மக்கள் அவர் அவர் சுய அனுபவங்கள் சார்ந்து முடிவுகள் எடுப்பார்கள் அல்லது ஆலோசனை கூறுவார்கள்.

அவர்கள் அனுபவத்துக்கு அப்பால் படித்தோ அல்லது மற்ற பலதரப்பட்ட அனுபவம் நிறைந்தவர்களிடம் பழகி தெரிந்தோ இருக்க மாட்டார்கள்.

இவர்களின் ஆலோசனையை கேட்டு கடைபிடிப்பது தற்கொலை செய்துகொள்வதும் சமம்.

எனது  நிஜ வாழ்வில் ஆலோசனை நான் சொல்கிறேன், நான் சொல்வதை கேள் என்றும் தனது ஆலோசனை வேதத்துக்கு சமம் என்றும் எனக்கு ரூபாய் 2க்கு டி வாங்கி கொடுத்து கேட்கும் படி வற்புறுத்திய நபர்களை  நான் பார்த்து இருக்கிறேன்.

அவர்களுக்கு சில விஷயம் புரியவில்லை என்று கூறினால் வயதை அடிப்படையாக வைத்து கடுமையாக கண்டிப்பார்கள், வற்புறுத்துவார்கள், அல்லது அவசியம் என்றால் சபிப்பார்கள்.

அனால் சாணக்கியன் கூறுவது போல் எதோ ஒரு சுயநலம் இருக்கலாம்.உனக்கு என்ன வேண்டும், உன் பிரச்சனையை எப்படி தீர்க்க வலி வகுக்கும் என்ற ஆழமான விருப்பம் இருக்காது என்பது மட்டும் உண்மை.

  • இது போன்ற கண்ணோட்டத்தில் செயல்படுபவர்கள், அவர்கள் வாழ்விலும் பெரிய சாதனையோ அல்லது சுபீட்சமோ ஏற்படுவதில்லை. இது இயற்கை அன்னையின்.
  • நான் மிகவும் மதித்து  பழகிய தொழிலில் வெற்றி கண்டவர்கள், மற்றவர்க்கு பஞ்சாயம் பண்ணுவது இல்லை. அவர்களின் முழுக்கவனமும் செய்யும் தொழிலில் வைத்து இருப்பார்கள். மாமியார், மைத்துனன் என்று பஞ்சாயம் செய்ய நேரம் அவர்களுக்கு  இருப்பது இல்லை.
  • மலேஷியா நாட்டுக்கு இந்தியாவிலிருந்து வந்தவர்கள் பிழைப்பை பாப்போம் என்று மற்றவர்க்கு பஞ்சாயம் செய்ய விரும்புவதில்லை. இருந்தாலும் சிலர்க்கு கப்பலா அல்லது பஞ்சாயத்து தலைவர் என்ற கர்வத்தில், ஆணவத்தில் வாழ்ந்தவர்கள் மலேஷியா வந்த நோக்கத்தை கோட்டை விட்டது தான் மிச்சம்.
  • முழுகவனத்தை தொழிலில் போட்டவர்கள் பல பல சொத்துக்கள் வாங்கி குவித்தனர்.
  • ஓஷோ கூருவது போல் அஹங்காரம் அல்லது எனது “நான்” அல்லது “ஈகோ” (EGO) நம்மை எப்படி செயல்படவைக்கிறது அல்லது செயல் படுத்திகிறது என்பதை சற்று கூர்ந்து கவனித்தால் நாமே நிறைய புரிந்து கொள்ளலாம்நிறைய நபர்களுக்கு தனக்கு சிந்திக்க தெரியாது என்பது அந்நபர்களுக்கு தெரியாது. ஆனால் தான் சரியாக சிந்திப்பதாக அடுத்தவர் நம்பவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

Leave a Reply