இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா? III

நாம் சிந்தித்து பார்த்ததுண்டா III???

நமக்கு சரியான புரிதல் இருக்கிறதா?

வாருங்கள் மற்றவர்களை வாய்க்கூசாமல் குறை பேசி பேரின்பம் காண்போம்!!! – PART 4

அமிஷ் எழுதிய சிவா முத்தொகுதி பற்றியா 3 பாகங்கள் கொண்ட புத்தகங்களை பிடித்து வருகிறேன். https://rsubramani.wordpress.com/2017/10/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/

நாம் சிந்தித்து பார்த்ததுண்டா III???

சிவன், அந்த நீலகண்டர் இந்துக்களின் பொதுவாக அளிப்பவர் என்று நம்பிக்கை. அப்படி என்றால் என்ன என்ற முடிச்சுக்கள் அல்லது ரகசியம் இவைகளை படித்தால் புரியும்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF

தீமையை அளிக்கவல்லவர் என்பதை நம்புகிறோம். முதல் பாகத்தில்  சிவன் இளைஞன். மூணாவது பக்கத்தில் கார்த்திக் எனும் முருகன் போர் யுக்தி தரும் இளைஞன். அனால் இந்த சிவன் மூன்றாம் பக்கத்தில் தான் “எது உண்மையான தீமை என்பதை” அடையாளம் காண்கிறார்.

சிவன்  கூறுகிறார்:  நன்மையே சில அதிக பயன் படுத்துதல் தீமையாகிறது.

நமக்கு எதுக்கு புராணம். நடைமுறை வாழ்க்கைக்கு வருவோம்.

“நான் உனது நல்லதுக்கு சொல்கிறேன்”.

“எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்”

இது போன்ற வசனங்கள் நிறைய பார்த்திருப்போம். அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?  நான் அறிந்து அதில் உண்மையும் இல்லை,அந்த அறிவுரை சொல்பவருக்கு போதிய விழிப்புஉணர்வு இல்லை என்றே நான் சொல்வேன்.

நான் கடைப்பிக்கிறேனா என்ற ஒரு கேள்வி தனக்குள் கேட்டுக்கொள்வதில்லை. குழந்தையிடம் புகைப்பவன் புகைபிடிக்காதே என்றும், குடிகாரன் பிள்ளையிடம் குடிக்காதே என்றும் அறிவுரை சொல்வதற்கு சமம்.

நெட்பிலிக்ஸ் யில் சுவாமி ராம் தேவ் என்ற ஹிந்தி வாழ்க்கை வரலாறு பார்த்தால் தெரியும். ராம் தேவ் இளவயதில் தனது தந்தை நீ ஏன் செத்து தொலையவில்லை என்று கேட்பார். நாம் கீழ் ஜாதி ஆகையால் நாம் ஒதுக்கப்பட்டவர் என்ற அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்பார்.

ராம் தேவ் வீட்டை விட்டு ஓடி குருகுலத்தில் சேர்ந்து பலவிஷயங்கள் கற்றுக்கொள்ளும் காலத்தில் அப்பா அம்மா குருகுலம் வந்து வா வீடு செல்வோம் என்பார்கள். அது எதற்காக? ராம் தேவின் ஒன்று  விட்ட  சகோதரி  திருமணமாகி வந்த கிராமத்தில் குருகுல முறைப்படி ராம் தேவ் பிட்சை எடுத்ததால் சகோதரிக்கு மானம் போய்விட்டதாம்.

ஏன் ராம் தேவ் செத்துவிட்டதாக நினைத்து தகப்பனார் கருமாதி செய்யாமல் குருகுலம் தேடிய நோக்கம் அவமானமாம்.

என் மனைவி என்னிடம் அடிக்கடி கேட்பாள்:

ஏன் என் பிள்ளைக்கு முதல் மொட்டை போடும்போது என் சகோதரர்களை உங்கள் குடும்பம் ஒதுக்கி வைத்தது? ஏன் உங்கள் தம்பி பிள்ளைக்கு முதல் மொட்டைக்கு திருவிழா போல் செய்யப்பட்டது?

ஏன் எனது சகோதரர்களுக்கு தாய் மாமன் உரிமை ஏன் மறுக்கப்பட்டது. பண ஏற்ற தாழ்வை தவிர்த்து வேறு ஒன்றும் காரணமாக இருக்க முடியாது.

நாங்கள் ஒதுக்கப்பட்ட குடும்பமா? உங்கள் குடும்பத்தார் வசதிக்கு, தகுந்த பெண் பார்த்துக்கொண்டு இருக்கலாமே? பண வசதி யில் சரி சமமாக பார்க்க முடியவில்லையா?

கேவலமான சிடிஸின் கடிகாரம் சீர் கொடுத்த எங்கள் குடும்பத்தாரையும் (மூத்த சம்பந்த்யையும்), ராடோ கடிகாரமும் பல்வித வைர  தோடு போட்ட இளைய சம்பந்தியை சமமாக பார்க்க முடியாத சமுதாயம் நமது சமுதாயம். முக்கியமாக நமது குடும்ப உறுப்பினர்கள்.

என் மனைவி நிறையவே கேட்டகிறாள். இறுதியில் உனக்கு நிறையவே எங்கள் குடும்பம் சிரமம்  கொடுத்து  இருக்கிறது. மறுப்பதற்கு இல்லைதான்.

குடும்ப உறுப்பினர்கள் சீர், மற்றவர்கள் சீருடன் ஒப்பிட்டு மனதை புண்படுத்தி புண்படுத்தி சமமாக எல்லா மருமகள் மகள்கள் என்று பார்க்கவில்லைதான். நான் என்ன சீர் கொண்டு சென்றேன். நீ என்ன சீர் கொண்டு வந்தாய் போன்ற ஒப்பிடும் மனோவியலில் நமது மட்டும் அல்ல நமது சமுதாய பிரச்னையாக இருக்கிறது.

என் பெற்றோர்கள் நான் விரும்பிய படி மலேஷியா பெண்ணை பார்க்காமல், உன்னை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். நீ சரி இல்லை என்று நான் கூறியதில்லை. எனது தந்தையார் தனது கெளரவம் முக்கியம் என்பதை வைத்துதான் என்னை திசை திருப்பினார். அதாவது என் தேவை என்ன என்று எந்த குடும்ப உறுப்பினரும் கண்டுகொள்ளவில்லை. என் தந்தை கவரவுத்துக்காக என்னை பலவந்த படுத்தி ஒத்துக்கொள்ள வைத்தார். இப்போதைய காலம் வேராகிவிட்டது.

இது போன்ற பிரச்சனைகள் இல்லை என்றால் நமக்கு பெரியார், ஸ்வாமி ராம் தேவ், ஓஷோ, இன்னும் பலர் கிடைத்து இருக்க மாட்டார்கள். அவர்கள் சமுதாயத்துக்கு தேவைப்பட்டு இருக்க மாட்டார்கள்.

ராம் தேவ் காலத்தில் உள்ள தீண்டாமை, ஒதுக்கிவைத்தல், அடிமையாகி வாழ்தல் போன்ற கொடுமையை ஒலித்தது இவர்கள் போன்ற மஹான்கள்தான்.

கோடிக்கணக்கான மக்களுக்கு அறிவில் வெளிச்சம் கொண்டு வந்த இது போன்ற மகான்களுக்கு எனது வணக்கங்கள் கோடி.

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா? III

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா? II

இதை பற்றி நாம் சிந்தித்து பார்த்ததுண்டா-I

Leave a Reply