You are currently viewing நாணயஸ்தம் என்றால் என்ன? LKG முதல் PHD வரை புரிதல் பற்றிய ஒரு கண்ணோட்டம் 
Maturity

நாணயஸ்தம் என்றால் என்ன? LKG முதல் PHD வரை புரிதல் பற்றிய ஒரு கண்ணோட்டம் 

நாணயஸ்தம் என்றால் என்ன? LKG முதல் PHD வரை அவர் அவர் தகுதி புரிதல் பற்றிய ஒரு கண்ணோட்டம் -ஒரு ஆராய்வு

LKG வகுப்பு நிலையின் புரிதல் தகுதி.

நாணயம் என்றால், பல அர்த்தம் இருக்கலாம். இதில் விவாதிக்கப்படுவது, வாங்கிய பணம் திருப்பி கொடுத்தால்.

நாணயஸ்தம் என்றால் என்ன? LKG நிலையில், கடன் வாங்கினால் திருப்பி செலுத்த வேண்டும். திருப்பி செலுத்துபவர் நல்லவர், என்பது மட்டும் புரியும். ஆழமாக புரியாது.

3ம் வகுப்பு நிலையின் புரிதல் தகுதி

LKG யில் ஏபிசி படிக்க ஆரம்பித்து, அந்த adcd வைத்து, ஒருவன் டாக்டர் ஆகிறான், ஒருவன் வக்கீல், ஆடிட்டர், என்று உருவாகின்றனர். ஒருவன் கடவுள் உண்டு என்கின்ற நம்பிக்கையிலும், இன்னொருவன் நாஸ்திகன் ஆகவும் உருவாகிறான்.

ஒரே பள்ளி ஒரே வகுப்பில் படித்தவன் கூட ஒரே நம்பிக்கையில் வளர்வது இல்லை. படித்தது அதே ஏபிசி.

LKG முடித்து, படிப்படியாக, நாணயஸ்தம் என்றால் கருத்துக்கள் உருவாகும், மாறும்.

உதாரணம் குடும்பத்து ஹீரோ வாகிய, தந்தை அல்லது தாய், அல்லது நெருங்கிய நண்பர்கள் வாங்கிய கடனை கொடுப்பது எப்படி என்று கற்பிப்பது அவரின் நம்பிக்கை பிரதி பலிக்கும். 3ம் வகுப்பில் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை கள் உருவெடுக்கும்.

LKG முடித்து, படிப்படியாக, நாணயஸ்தம் என்றால் கருத்துக்கள் உருவாகும், மாறும்.

உதாரணம் குடும்பத்து ஹீரோ வாகிய, தந்தை அல்லது தாய், அல்லது நெருங்கிய நண்பர்கள் வாங்கிய கடனை கொடுப்பது எப்படி என்று கற்பிப்பது அவரின் நம்பிக்கை பிரதி பலிக்கும். 3ம் வகுப்பில் ஒரு குறிப்பிட்ட நம்பிக்கை கள் உருவெடுக்கும்.

டிப்ளமோ-காலேஜ் நிலையின் புரிதல் தகுதி

இந்த வயது வந்த பிறகு, நிறைய சினிமா பார்த்து இருப்போம். சோசியல் மீடியாவில் இருப்போம். இன்னும் நம்பிக்கையை ஆழப்படுத்தும்.

உன் அப்பா வாங்கிய கடனை கொடுக்கவில்லை என்றால் தவறு. என் அப்பா வாங்கிய கடன் கொடுக்கவில்லை என்றால் அதற்கு பல ஞாயமான காரணம் இருக்கும். என் அப்பா எனக்கு ஹீரோ.

அகராதிகள்

புலி.புளி, சிங்கம், சூரியன், என்ற வார்த்தைகளை, அகராதியில் தேடினால், ஒஸ்போர்ட அகராதி ஒரு மாதிரி விளக்கும். Lifco அகராதி, லோங்க்மான் அகராதி வெவ்வேறு வகையில் விளக்கும். ஆனால், எந்த பிராண்ட் அகராதியில் கற்றுக்கொண்டாலும், மேற்சொன்ன வார்த்தையின் அர்த்தம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கும்.

சிங்கம் என்ற வார்த்தையை, LIFCO அகராதியை பார்த்தவன் அது ஒரு பறவை என்று நிச்சயமாக சொல்ல மாட்டான்.

PHD நிலையின் புரிதல் தகுதி

அப்படியானால், நாணயஸ்தம் என்றால் என்ன? ஒரு அர்த்தம் உள்ளதா? பல அர்த்தம் உள்ளதா?

எனக்கு பதில் தெரியவில்லை.

நான் புதிதாக தொழில் ஆரம்பித்த பிறகு, சில நபர்கள் வாங்கிய சரக்குக்கு, பணம் கொடுக்க நெருங்கினார்கள். உடனே கொடுக்க இயலவில்லை.

ஆனால் அந்த பிரச்னையை கையாண்ட அல்லது நிர்வகித்த முறை, இன்று எங்களை சரக்கு நிறைய வாங்க சொல்லி அன்புத்தொல்லை தருகின்றனர்.

நான் தனியாக தொழில் ஆரம்பிக்கும் முன்பே, எனது தந்தை தொழிலில் இருந்த போதும், இது போன்ற பெரிய பெரிய சிக்கல் வந்ததுண்டு. அதே தொழில், நான் பிரிந்து விட்டாலும், அத்தொழிலுக்கும், நிறைய வரவு செலவு நடத்துகின்றனர்.

அதாவது, அத்தொழில் பார்ட்னர்களின் வயது அதிகம் என்று வருந்துவார்கள் ஒழிய, கடனுக்கு சரக்கு தர மாட்டேன் என்று நினைக்க கூட மாட்டார்கள்.

“நான் பணம் உன்னிடம் வாங்கவே இல்லை. உனக்கு தெரிந்ததை பார்த்துக்கொள்” இது அயோக்கிய தனம்.

“நான் பணம் வாங்கியது உண்மை, ஆனால் வைத்துக்கொண்டே இல்லை என்று சொல்லவில்லையே. வந்ததும் தறுவேன்” இது ஓரளவு சில விஷயங்களுக்கு காட்டப்படுகின்றனர் என்று பொருள்.

மலேஷியாவில் மேற் சொன்ன 2 விதத்திலும் வரவு செலவு செய்வதில்லை.

பணம் வாங்கியது நான். எனது சூழ்நிலை இப்படி & அப்படி என்ற காரணங்கள் இதோ. ஆக நான் கொடுக்கும்போது கொடுப்பேன். இந்த தொகைதான் கொடுப்பேன், இந்த தொகைதான் கொடுக்க முடியும்.

இது போன்ற கதைகளை கேட்டு கேட்டு, மலேசிய வியாபாரிகள் நிறைய பேர் பணத்தை மண்ணிலும், பொன்னிலும் போட ஆரம்பித்து பல வருடங்கள் ஆகி விட்டது. நம்பிக்கை என்பது இல்லாமல் போய் விட்டது.

சமீபத்தில் ஒரு வியாபாரியிடம் விசாரித்தேன். “முன்பு பைனான்ஸ் இந்தியாவில் செய் தீர்களே, இன்னும் செய் கிறீர்களா?”.

“ஐயோ 10 நபரிடம் கொடுத்தால் 7 பேர் சரியாக கொடுப்பது இல்லை.”

“இவனுங்கள் கிட்டே இருந்து கொடுத்து விட்டு அலைந்து வாங்க வேண்டும். இவனுங்கள் கிட்டே தொங்கிக்கிட்டு இருப்பதய்விட, நமது தொழிழை இன்னும் விரிவு படுத்தி விடலாம்.”

முன்பு மலேசியாவில் சம்பாதித்து, இந்தியாவில்தான், குடும்பம் நடத்த வேண்டும், இந்தியாவில் தான் பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற மூட நம்பிக்கையில் இருந்த காலம்.

குறுகிய மனம் உள்ள காலம், விரிவான மனம் இல்லாத காலம்.

நெம்புகோல்

நெம்புகோள் எனும் கடன்

அதிகமான எடை உள்ள ஒரு கல்லை நடத்த நெம்புகோலாக, நீண்ட கடப்பாறை பயன் படுத்தி நகட்டுவார்கள்.

நம்மை நம்பி கடன் கொடுக்கும் வங்கிகள், போன்ற நெம்புகோலை பயன் படுத்தினால் தான் உயர்வு. நமது கடன் வாங்கும் தகுதியே நமது பொருளாதார உயர்வை நிர்ணயிக்கும்.

நாம் டாட்டா, பிர்லா போன்ற பணக்கார குடும்பத்தில் வாரிசானால் ஒழிய, நமக்கு முதலீடு பற்றாது.

நாணயஸ்தம் என்பது ஒரு நீண்ட கால பலன்.

நாணயம், நாணயமாக நடப்பது என்பது ஒரு செயல் முறை. சோறு, சாம்பார், காய்கறிகள் சமைப்பது ஒரு செயல் முறை. சமைத்த பிறகு அதை உண்ணலாம்.

நன்றாக சமைத்தது சாப்பிடப்படும். நன்றாக சமைக்கப்படாதது, குப்பைக்கு போகும்.

சமைத்தால், பலன் உடனே தெரியும். உண்ணப்படுமா, குப்பையில் போடப்படுமா என்பது.

நாணயமாக நடத்தல் நீண்ட கால செயல் முறை. எங்கள் தொழில் 3 தலைமுறையாக இருக்கிறது என்றால், மற்றவர் எங்களை நம்புகிறார்கள் என்று பொருள்.

தரமானவர்களின் நம்பிக்கையை பெருகிறோமா?

கந்த வட்டிக்காரன் போன்ற நபர்கள் மட்டும் நம்மை நம்புவது, தரமான நம்பிக்கையை சம்பாதிக்கவில்லை என்று பொருள்.

வங்கி, உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், பெரும் பெரும் வியாபாரிகளின் நம்பிக்கையை பெறுவது, தரம் வாய்ந்த நம்பிக்கை என்று பொருள்.

நாணயமான நேர்மையான, நடத்தை வாழ்வில் பல அம்சங்களை தொடுகிறது.

டாட்டா தலைமுறையில் செய்த வரவு செலவு, பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் வரை தொடர்கிறது. எனது சிறிய வியாபாரத்துக்கு 3வது தலைமுறையாக நம்பி வரவு செலவு செய்யும் நபர்கள் உண்டு.

இந்த குடும்பத்துக்கு பெண்/மாப்பிள்ளை கொடுக்கலாம் எடுக்கலாம், வரை இன்னும் பல பல காரியங்கள் வரை நாணயஸ்தம் ஒரு முக்கிய அளவுகோள் என்பது குறிப்பிட தக்கது.

1000 பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணி வைப்பது நல்லது நேரு நம்பப்பட்டது. உண்மை அர்த்தம் வேறு என்று சிலர் வாதாடினாலும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்று மிக நாணயமாக வாழ்பவர்களுக்கே, யாரும் பரிந்துரைக்க வருவது இல்லை. விவாகரத்து எண்ணிக்கை கூடுவதால், அவர் அவர் தான் உண்டு தனது வேலை உண்டு என்று ஒதுங்கிக்கொள்கின்றனர்.

தொழில் விஷயத்திலும் ஒதுங்கிக்கொள்கின்றனர். அக்காலம் மாதிரி, இவர் எனது பெரியப்பா மகன், சித்தப்பா மகன் என்று யாரும் அறிமுகப்படுத்த முன் வருவதில்லை. விவாகரத்து மாதிரி நாணயஸ்தமும் அழிந்து வருகிறது.

சுப செலவுகளும், அமங்கல செலவுகளும்

அவன் அவன் கர்ம பலனுக்கு தக்கபடிதான் செலவுகள் வரும். பண செலவுகள் மற்றும் நேர செலவுகள்.

யாரும் 100% செலவு செய்யாமல் சேர்த்து வைக்க முடியாது. நாம் செய்யும் பண செலவுகள், கல்வி, வீட்டு சுப காரியங்கள், வழி பாடு பூஜைகள், ஹோமங்கள் செய்ய அமைந்தால் சுபம்.

பணத்தை டைவோர்ஸ் செய்யவும், நேரத்தை இது போன்ற பஞ்சாயத்தில் மனஉளைச்சலுடன் செலவு செய்வது அமங்களம் என்று சொல்லப்படுகிறது.

வாங்கிய கடன் கொடுக்க இயலாமை எல்லாம் ஒரு வகை நெகடிவ் கவர்ச்சியாக கூட இருக்கலாம்.

வேறு மாதிரி சொல்ல வேண்டும் என்றால்,கொடுத்த கடனை வாங்கவோ, வாங்கிய கடன் கொடுக்க இயலாமல் வக்கீல், கோர்ட், என்றும் அலைவது அமங்கலம் காரியங்களில் வாழ்வை கழிக்கிறோம்.

ராவணன் ராமனிடம் தோற்கும் நிலையில் இருந்ததை “கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று வர்ணித்தார் கம்பர் பெருமான். கடன் வாங்குவது எளிது. திருப்பிக்கொடுப்பதற்குள் வட்டி குட்டி போட்டு குடும்பம் என்ற கப்பலே மூழ்கிப்போகும்.

16 செல்வம் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்வு மங்களம் நிறைந்தது. 16 செல்வங்கள் என்பது கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நம்பிக்கை, நோயின்மை, முயற்சி, வெற்றி என்பவைதான்.

மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்பார்கள். மனைவியை வைத்துதான் நன் மக்களை பெறுவது, போன்ற தொடர்பு உள்ளது வாழ்வு.

வாழ்வை அமைக்கும் எண்ணங்கள்

இன்னும் தொடரும்…..