You are currently viewing பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 1
பார்வை

பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 1

பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 1-இது பற்றி ஒரு ஆய்வு.

பிரச்சனைகளின் மூலாதாரம் என்ன – 1  பற்றி எனது அனுபவத்தில் உணர்ந்ததை பகிர்கிறேன்.

பிரச்சனை என்றால் நிறைய அர்த்தம் இருக்கும். நாம் வாங்கிய பொருளில் பிரச்னை, உறவில் பிரச்னை, இப்படி எத்தனையோ இந்த பிரச்சனை என்ற வார்த்தைக்கு உபயோகம் உண்டு.

நான் இந்த கட்டுரையில் அலசுவது, குடும்பத்தில், உறவுகளில் வரும் பிரச்னை மூலாதாரம் எது, ஆணி வேர் எது, அல்லது அதன் ப்ரின்ஸிபல் என்ற கோட்பாடு எது எனறு என்னால் முடிந்ததை பகிர்கிறேன்.

எது சரி எது தப்பு/தவறு?

So…

எது சரி எது தவறு என்ற கேள்விகளுக்கு, சரியான பதில் இருப்பதில்லை. அப்படி இருந்து விட்டால், நீதிமன்றம் தேவை இல்லை.

தண்ணிபோடுவது, தவறு என்பர் சிலர். அதில் ஒன்றும் தவறில்லை என்பர் பலர். ஒரு கேள்விக்கு பல மாதிரி பதில்கள்.

மகள் தனிக்குடித்தனம் போவது சரி என்பர். மருமகள் போவது தவறு என்பர்.

மகளை பார்க்கும் விதத்திலும், மருமகளை பார்க்கும் விதத்திலும் நிறைய வேற்றுமைகள் இருக்கிறது.

இது அவர் அவர் சுய நலம், பற்று சம்பந்த, விஷயங்கள் நமது முடிவு எடுக்கும் விதத்தை பாதிக்கும்.

உனக்கு என்ன வேண்டும்? உனக்கு எது சந்தோஷம் தரும்?

Saying another way…

வேறு மாதிரி சொன்னால், கீழ் கண்ட கேள்விகளுக்கு மிக்க சந்தோசம், அதுவே சரி, என்ற பதில் வந்தால் ஏற்கனவே எடுத்த முடிவுகள் மற்றவர் நலன் கருதி எடுத்ததாக நம்பலாம்.

பல மகன்களிடம், மகள்களிடம், உங்களை கட்டுப்படுத்த, இளம் வயது திருமணம் போன்ற காரியம் செய்த்தது சரிதானா?

உங்கள் நாத்தனார், மாமியார், உங்களை கொன்றோல் (அல்லது கட்டுப்படுத்த, தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, ) செய்த முறை சரியா?

தலித் சமூகத்தில் ஒரு இன்றய தலைமுறையினர் கேட்கறார்கள்:

இன்று நீங்கள், செருப்பு போட்டு நடக்கிண்றீர்கள். மேலாடை போடுகிண்றீர்கள். உங்கள் பாட்டி தாத்தா போட அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே உங்களை ஒடுக்கிய தலைமை தான் சரி என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?

யார் அதுவே சரி என்று கூற முன்வருகின்றனர்?

30, 40 வருடங்கள் கழிந்து அவை சரியில்லை என்றால், பல தலைமுறை கடந்து அது சரியில்லை என்றால், சுய நலன் சார்ந்த முடிவாகத்தான் இருக்க வேண்டும்.

ஜாதி, மதம், கௌரவம் போன்ற அடிப்படையில், எடுத்த முடிவுகள். எனது வாழ்விலும், எனது மனைவியின் வாழ்விலும் இது போன்ற விஷயங்கள் பெரிய லிஸ்ட் போட முடியும்.

உனக்கு என்ன வேண்டும்? உனக்கு எது சந்தோஷம் தரும்? அதற்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன். இப்படி யாரும் கேட்டு உதவியது இல்லை.

நான் சொல்வதே சரி. சம்பாத்தியம் உன்னுடையதாக இருந்தாலும், என்னை கேட்டு முடிவுக்கு வா. நானே எல்லாம் தெரிந்தவன். என் பேச்சை கேட்டால் நல்லது. இது போன்ற அங்கீகார, ஆக்ரமிப்பு மிகுந்த இந்த உருப்படாத கலாச்சாரம் சுய முடிவு எடுக்கும் திறமையை கொன்று விடுகிறது.

MS உதயமூர்த்தி, நெப்போலியன் ஹில் எழுதிய புத்தகங்கள் என் கண்ணை நன்றாக திறந்து விட்டது உண்மை. இவர்கள் போன்ற மனித தெய்வங்கள் இல்லை என்றால், நான் இந்நேரம் வீணாய் போயிருப்பேன். இன்னொரு மனித தெய்வம் புரட்சி தலைவர் MGR அவர்கள்.

நிர்வாகம் & சிஸ்டம்

Thus…

23 4 2022ல் ஒரு வெப்பினாரில் கலந்தேன். அது, ஒரு டுரியான் பல உற்பத்தி பற்றியது.

விவசாயம் என்றால் ஜெயிக்காது என்ற ஒரு பக்கம் நம்பிக்கை இருந்தாலும், அந்த வெபிணாரில், அந்த பழ மரங்களை, எப்படி நிர்வாகம் செய்கின்றனர் என்று கூறி, பொது மக்களிடம் முதலீடும் செய்ய வைத்தனர்.

டுரியான் இப்பொழுது, இந்தியாவில் கொஞ்சம் கிடைக்கிறது. சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து, இறக்குமதி செய்யும் நாடுகளில், முதல் வரிசையில் உள்ளது.

அதி நுட்பத்துடன், விவசாயம் செய்யும் முறையில், தைவான் நாட்டு  நிபுணர் உட்பட, மலேசிய லாயர்கள், விவசாய நுட்பவாதிகள். பூச்சி கொல்லி நிபுணர்கள் வைத்து, வளர்க்கின்றனர்.

ட்ரான் எனப்படும் ஹெலிகாப்டர் போன்ற இயந்திரத்தை பயன் படுத்தி பூச்சி கொல்லி மருந்து, இலைகளுக்கு, தண்ணி செலுத்துகின்றனர்.

இத்தனை நுட்பம் பயன் படுத்தும் நோக்கம் என்ன? ஆரோக்கியமான, மரம் மற்றும், தரமான பழம் கிடைப்பதற்காக. இது எல்லா விவசாயிகளுக்கும் தேர்ந்த உண்மை.

இத்தனை சாதனை செய்ய, ஆரோக்கியமான உறவு வேண்டும் என்பது தெரியும் அனால் புறக்கணிக்கும் விஷயமாக பார்க்கப்படும்.

அந்த டுரியான் நிர்வாக குழு உறவை மிக பெரிதாக, நினைத்து, அந்த உறவை மிக சிறப்பாக நிர்வாகம் செய்யும்.

அதுதான், அதன் வெற்றியின் முதன்மை ரகசியம்.

நமது தலைப்புக்கும், டுரியான் எஸ்டேட் நிர்வாகத்துக்கும் தொடர்பு இருக்கிறதா?

சிஸ்டம்.

டுரியான் வளர்க்க, விதை முதல், மண், போன்ற ஒவ்வொன்றுக்கும் சிஸ்டம் நியமிக்கின்றனர்.

பிஸ்சா சிஸ்டம்

பிஸ்ஸா போன்ற நிறுவனங்கள் இந்த சிஸ்ட்டத்தை சார்ந்து உலக அளவில் வளர்கிறது.

அந்த ஸிஸ்டத்தில், மனித உறவு மேம்பாட்டுக்கு, முக்கியத்துவம் கொடுக்கிறது.

வேறு மாதிரி கூறினால், மனித உறவுகளை எப்படி நிர்வகிப்பது என்ற  பாடங்கள் நிரம்பித்தேவை படுகிறது. எந்த சிஸ்டம் உறவை பாதுகாக்கிறது, என்று பாடங்கள் தேவைப்படுகிறது.

உறவு மேம்பாட்டு சிஸ்டம் எவைகளாக இருக்கும்? இதன் அவசியம் என்ன? உறவு சம்பந்த விஷயத்தில் நமது குறிக்கோள் என்ன?

உறவுகள் வேண்டும் என்றால் அதற்க்கு தகுந்த பொறுப்பிலிருந்து, யாரும் தப்ப முடியாது. உறவே வேண்டாம் என்ற குறிக்கோள் இருந்தால், மற்றவர் கட்டுப்படுத்தவும் முடியாது.

இது சர்வ சுதந்திரமாக வாழ விரும்பும் காலம். இன்று விவாகரத்து நிறைய நடக்கும் காலம்.

இப்படித்தான் இருக்க வேண்டும், அப்படிதான் நடக்க வேண்டும் என்று கேட்க நமது சொந்த குடும்ப உறுப்பினர் கூட தயாராக இல்லை.

In result..

நமது குடும்ப கலாச்சாரம், எந்த மாதிரி சிஸ்டம் அல்லது நிர்வாக அமைப்பின் அடிப்படையில் அமைந்து இருக்கிறது?

Remove Idea Osho
மகள் vs மருமகள்

மூட நம்பிக்கைகள்-1

Firstly…..
 

அந்த காலத்தில், அப்படி வாழ்ந்தனர், இப்படி வாழ்ந்தனர். கலாச்சாரத்துக்கு கட்டுப்பட்டனர், என்றெல்லாம் பெருமை அடிக்கும் கூட்டம் ஒரு பக்கம் இருக்கிறது.

Thus..எத்தனை பேர் நாங்கள் கீழ் சமூகத்தை சார்ந்தவர்கள். எனது முன்னோர்கள், ஆண்கள் இடுப்பில்தான் துண்டு கட்டி நடந்தனர். பெண்கள்/ஆண்கள் செருப்பு போட அனுமதி இல்லை. பெண்கள்/ஆண்கள் மேலாடை போட அனுமதி இல்லை. அதுவே சரி என்று பெருமை கொள்கின்றனர்?

எத்தனை பேர், எனது பாட்டிகள், உடன் கட்டை ஏரினாகள். மிக சிறந்த ஒரு சிஸ்டம், என்று  பெருமை கொள்கின்றனர்?

So..எத்தனை மருமகள்கள், நர்த்தனார்கள், தனது மாமியார் அல்லது கணவனின் உறவுகள் இப்படி, அப்படி என்னை ஆட்டி வைத்தது பிரமாதம் என்று என்று ஏற்றுக்கொள்கின்றனர்?

புகார்

Another way of saying..

வேறு மாதிரி சொன்னால், கீழ் கண்ட கேள்விகளுக்கு மிக்க சந்தோசம், அதுவே சரி, என்ற பதில் வந்தால் ஏற்கனவே எடுத்த முடிவுகள் மற்றவர் நலன் கருதி எடுத்ததாக நம்பலாம்.

பல மகன்களிடம், மகள்களிடம், உங்களை கட்டுப்படுத்த, இளம் வயது திருமணம் போன்ற காரியம் செய்த்தது சரிதானா?

உங்கள் நாத்தனார், மாமியார், உங்களை கொன்றோல் செய்த முறை சரியா?

தலித் சமூகத்தில் ஒரு இன்றய தலைமுறையினர் கேட்கறார்கள்:

இன்று நீங்கள், செருப்பு போட்டு நடக்கிண்றீர்கள். மேலாடை போடுகிண்றீர்கள். உங்கள் பாட்டி தாத்தா போட அனுமதிக்கப்படவில்லை. ஏற்கனவே உங்களை ஒடுக்கிய தலைமை தான் சரி என்று ஏற்றுக்கொள்கிறீர்களா?

யார் அதுவே சரி என்று கூற முன்வருகின்றனர்?

30, 40 வருடங்கள் கழிந்து அவை சரியில்லை என்றால், பல தலைமுறை கடந்து அது சரியில்லை என்றால், சுய நலன் சார்ந்த முடிவாகத்தான் இருக்க வேண்டும்.

ஜாதி, மதம், கௌரவம் போன்ற அடிப்படையில், எடுத்த முடிவுகள். எனது வாழ்விலும், எனது மனைவியின் வாழ்விலும் இது போன்ற விஷயங்கள் பெரிய லிஸ்ட் போடா முடியும்.

உனக்கு என்ன வேண்டும்? உனக்கு எது சந்தோஷம் தரும்? அதற்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன். இப்படி யாரும் கேட்டு உதவியது இல்லை.

நான் சொல்வதே சரி. சம்பாத்தியம் உன்னுடையதாக இருந்தாலும், என்னை கேட்டு முடிவுக்கு வா. நானே எல்லாம் தெரிந்தவன். என் பேச்சை கேட்டால் நல்லது. இது போன்ற அங்கீகார, ஆக்ரமிப்பு மிகுந்த இந்த உருப்படாத கலாச்சாரம் சுய முடிவு எடுக்கும் திறமையை கொன்று விடுகிறது.

MS உதயமூர்த்தி, நெப்போலியன் ஹில் எழுதிய புத்தகங்கள் என் கண்ணை நன்றாக திறந்து விட்டது உண்மை. இவர்கள் போன்ற மனித தெய்வங்கள் இல்லை என்றால், நான் இந்நேரம் வீணாய் போயிருப்பேன். இன்னொரு மனித தெய்வம் புரட்சி தலைவர் MGR அவர்கள்.

மூட நம்பிக்கைகள் 2:

 Secondly..

எனது வயது மூப்பு. நான் சொல்வதே சரி. நான் எடுக்கும் முடிவே இறுதியானது.

வயதில் மூப்பு என்ற ஒரு விஷயம் நான் சொல்லுவது எல்லாம் சரியாகி விடாது.

அப்படியானால், வயதில் மூப்பு என்ற போர்வையில், எடுக்கும் முடிவுகள் எதை அடிப்படையாக வைத்து எடுக்க வேண்டும் என்று தெரியாமல், மற்றவர் சந்தோஷத்தை கெடுத்துவிடும்.

மலேசியாவில், சிலரின், தந்தையார் ஜாதி, கௌரவம் என்ற அடிப்படையில் தனது பிள்ளைக்கு வற்புறுத்தி தமிழகத்தில் திருமணம் செய்து வைத்தனர். பிறகு பையன், பக்குவம் வந்த பிறகு, மலேசிய பெண்ணை மணந்த கதை நிறைய உண்டு.

வயதில் மூப்பு என்று எடுத்த முடிவின் பலன், ஒரு பெண்ணின் வாழ்வை நாசப்படுத்தியது தான் மிச்சம்.

சிலர் போராடி, தனது மனைவியை, மலேஷியா கொண்டு வந்து வாழ்ந்த கதைகளும் உண்டு.

தனது பிள்ளைகளே கடை பிடிக்க விரும்பாத முடிவுகள், எப்படி மதிக்கப்பட வேண்டிய சிறந்த  முடிவு என்று ஏற்பது?

வயதில் பெரியவர் அல்லது குடும்பத்தலைவன்/தலைவி என்ற போர்வையில், இளையோருக்காக, எடுத்த முடிவு தனது ஜாதி பற்று, மத பற்று, கௌரவ பற்றில் எடுத்த முடிவுகள் இளையோர் நலனுக்காக எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகிறது என்று ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

பொங்கும்

மூட நம்பிக்கைகள் 3:

 Thirdly..

எனது நம்பிக்கையே உலகத்தில் மிக மேன்மையான நம்பிக்கை. எனது நம்பிக்கையை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் உருப்பட வாய்ப்பு அதிகம்.

எனது தந்தையார், தொழில் கணக்கின் முக்கியம் பற்றி நிறைய சொன்னதுண்டு.

இன்று கணக்கு கணினியில் வந்து விட்டது. கணக்கில், பணம் உற்பத்தியாகாது. கணக்கு தொழிலுக்கு தேவையான ஒரு ஆயுதம் தவிர அதில் பணம் கிடையாது.

கணக்கு பார்க்க இன்று கிளார்க் மற்றும் கணினி உபயோகப் படுத்துபவர்கள் தான், தொழிலில் வளர்கின்றனர்.

காலத்துக்கு தக்க மாற முடியாவிட்டால், நீண்ட தூரம் பின்னடைந்து இருப்பது நிச்சயம்.

புதுப்பிக்காத, காலத்துக்கு தகுந்த நம்பிக்கையை, தத்து எடுக்க முடியாதவர்கள் முன்னேறுவது முடியாத காரியம்.

தொழில் நிர்வாகம், குடும்ப நிர்வாகம், உறவுகள் நிர்வாகம் போன்ற பல பகுதிகளில், நமது நம்பிக்கையை மறு பரிசீலனை செய்ய முடிபவர்கள் மட்டுமே, துணிவுள்ளவர்கள் மட்டுமே, உலகத்தோடு ஒட்டி வாழ இயலும்.

மேலே சொன்ன டுரியான் மரம் அப்பா செய்த முறையை, படித்த மகன், பல வித தொழில் நுட்பங்களை பயன் படுத்தி பொது மக்களின் முதலீட்டை கவறுகிறார். அப்பா சொன்ன முறையை கட்டிக்கொண்டு அழுகவில்லை, நவீன அறிவு கொண்ட மகன்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

மூட நம்பிக்கைகள் 4:

Fourthly..

மற்றவர்களின் அங்கீகாரம் வாழ்வில் முக்கியம். ஒவ்வொருவரும் மற்றவரின் அங்கீகாரத்தை பெற வேண்டும்.

சமீபத்தில் ஒருவர், இளையராஜாவை, அங்கீகாரம் பெறுபவராக வர்ணித்தார். அவருக்கு பிராமணர்களின் அங்கீகாரம் தேவை என்பதால்…என்று வன்மையாக பேசினார். எதோ பிரச்னை போல்.

இன்றய உலகில் வாழ யாருக்கும், யாருடைய அங்கீகாரமும் தேவை இல்லை.

குழந்தைகளுக்கு அதன் வளர்ச்சிக்கு பெரியவர்களின் அங்கீகாரம் தேவை படிகிறது. சின்ன சின்ன விஷயங்களுக்கும், பாராட்டும், அங்கீகாரமும் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.

ஆசிரியர்கள், பரிசுகள் அல்லது மார்க் கொடுத்து அங்கீகரிக்கின்றனர். பெற்றவர்கள், முத்தம் மற்றும் அணைத்து அங்கீகரிக்கின்றனர்.

குறிப்பிட்ட வயது வந்ததும் அங்கீகாரம் தேடுவது மன முதிர்ச்சி இல்லை என்று அர்த்தம்.

திருமண வீட்டில், நானே மணமகன் அல்லது மனமகள். கேத வீட்டில் நானே பிணம். இரண்டு வீட்டிலும் எனக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்றால், மன முதிர்ச்சி வரவில்லை என்று பொருள்.

நீ என்னை நல்லவன் அல்லது உன்னை நான் நல்லவன் என்ற அங்கீகாரம் அவசியமற்றது. யாரும் எனக்கு மரியாதை செலுத்தினால், அது எந்த அளவுக்கு சரி, தப்பு என்ற யாரின் அங்கீகாரமும் தேவை இல்லாதது. கருத்து கணிப்பு, அபிப்பிராயம், தீர்ப்பு எதுவும் அவசியம் இல்லாதது.

மூட நம்பிக்கைகள் 5:
Fifthly..

நான் நம்பும் பழக்க வழக்கம், சட்டம் திட்டம்,கோட்பாடுகள் போன்றவற்றுக்கு எல்லாரும் கட்டுப்படுவார்கள்.(மற்றவர்களின் எண்ணங்களை கட்டுப்படுத்தும் திறன் கடவுள் மனித இனத்துக்கு இன்னும் கொடுக்கவில்லை)

முதல் இரவில் பெண் எந்த சேலை கட்டவேண்டும்?

(இன்றய நாகரீகத்தில், ஆடை நிறைய மாறி விட்டது. ஒவ்வொரு குடும்பம், ஜாதி, மதத்துக்கு தக்கபடி நிறைய வேற்றுமைகள் உள்ளது. எனது குடும்ப வழக்கமே சிறந்தது என்று பிரச்சாரம் செய்வது பைத்தியக்கார தானம்.)

கூட்டு குடும்பமே சிறந்தது

(கடைக்குட்டி சிங்கம் என்ற சினிமா பார்த்து கூட்டு குடும்பம் சிறந்தது என்று முடிவுக்கு வரலாம் என்று தோனும். ஆனால் ஆழ்ந்து யோசித்தால், நடைமுறைக்கு சரிவராது என்று முடிவுக்கு வரலாம்.

அந்த படத்தில், அப்பனுக்கு ஒரு உருப்படாத ஆண் பிள்ளை வாரிசு வரும் வரை பல கல்யாணம் செய்வது ஒரு நம்பிக்கை. மகளும், மனைவியும் மாசமாக இருப்பது ஒன்று.

ஏகப்பட்ட பிரச்சனை, பிரச்சனை. கதாநாயகன், அந்த குடும்பத்தை இணைப்பதை தவிர ஒரு வேலையும் இல்லாதவன் போல. அவன் வாழவே இல்லை.

இரண்டாம் பாகம் வந்தால், இன்னும் பல பிரச்சனைகள் தெரிந்து கொள்ளலாம்.)

பணம் வைத்து மட்டும் மதிக்கக்கூடாது

(பணம் இருப்பதால் மட்டும் மதிப்பது இல்லை உலகம். என்ன சாதனை செய்துள்ளனர், என்ன சேவை செய்துள்ளனர், போன்ற பல விஷயங்களை அடிப்படையில் தான் உலகம் மதிக்கிறது. டாடா, பிர்லா, அம்பானிக்கு பணம் இருப்பதால் என்னை போன்ற சாதாரண மனிதன் அவர்களை மதிப்பது, காக்கை பிடிப்பது, நினைப்பது கூட இல்லை.

நடைமுறையில் ஏற்படும் வர்த்தக பழக்கம் மதிப்பை உருவாக்குகிறது. மற்ற உதவி செய்பவர்கள், தொண்டு செய்பவர்கள் மீது மதிப்பு வருகிறது.)

சமமாக மதிக்க வேண்டும்

(அவன் அவன் பிழைப்பை பார்ப்பானே தவிர, இவரை ஒரு கிலோ மதிப்பு கொடுத்தால், அவருக்கும் ஒரு கிலோ மதிப்பு கொடுக்க வேண்டும் என்றல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது.

நாங்கள் அதிகம் மதிக்கும் எங்கள் குடும்ப பிராமணர், எனது மனைவிக்கு சற்று அதிக மதிப்பு கொடுப்பார். அவர் கோவிலுக்கு தொண்டு செய்பவர்களை இன்னும் அதிக மதிப்பு தருவார்.

தருவார் என்பது தவறு. அதுவாக வரும். கோவில் தொண்டு செய்து சம்பாதித்த மதிப்பு உடையவருடன் நான் போட்டி போடுவது மஹா முட்டாள்தனமாக இருக்கும்.

அவர் அவர் தகுதிக்கு தக்க மரியாதையும் , மதிப்பும் கிடைக்கிறது.)

எல்லோரையும் ஒரே மாதிரி பார்க்க வேண்டும்.

(ஸ்ரீமத் பாகவதில், இதைத்தான் கற்பிக்கின்றனர். அப்படி எல்லோரும் சமமாக பார்த்து விட்டால், எல்லோரும் ஞானி யாகி விடலாம்.

மாயாப்பூரில், பஞ்சக்கட்டு வைஷ்ணவ முறையில் வேஷ்டி கட்டி போகும் பக்தர்களுக்கு ஒரு தனி பாதை உண்டு. அங்கே பணத்தை காட்டி அந்த வாசலில் நுழைய முடியாது.

கோவிலிலே அசைவம் கடைபிடிப்பவர்கள் , சைவம் கடைபிடிப்பவர்கள் ஜபம் செய்பவர்கள், பகவத் கீதை படிப்பவர்கள் என்ற வேற்றுமை பார்க்கத்தான் செய்கின்றனர்.

உலக நடை முறை இப்படித்தான்.)

இன்னும் ஆயிரம் ஆயிரம்

Again…

இன்னும் ஆயிரம் ஆயிரம் இருந்தாலும், கோட்பாடு என்னை பொறுத்தவரை மிக எளிது.

நமது நாட்டில், ஒரு குறிப்பிட்ட மதத்தில் உடனே இணையவில்லை என்றால், உன் தலையை வெட்டுவேன் என்று பயத்தில் மத மாற்றம் நான் பிரிந்தாவன் சென்ற பொழுது, நிறைய கேள்வி பட்டேன்.

அது கொடுங்கோல் ஆட்சி. மதம் மட்டும் இல்லை, உடன்கட்டை எற வற்புறுத்துவது, விதவைகளுக்கு மொட்டை அடித்தல், வெள்ளை ஆடை உடுத்த வற்புறுத்துவதும் கொடுங்கோல் நிர்வாகம், அல்லது ஆக்ரமிப்பு நிர்வாகம்.

நான் தண்ணி போட்டேன் எனது உடல் வீணாகி விட்டது. நான் பள்ளி போகும் காலத்தில், சினிமா சென்றேன். இப்படி உணர்வது உணர்பவன் எடுத்த முடிவுகள் தவறு என்ற முடிவுக்கு வரலாம்.

ஒரு மனிதன் , மதம் மாறி திருமணம் செய்து விட கூடாது, என்று, 10,15 வயது வித்தியாசத்தில், பருவம் அடையாத பெண்ணை திருமணம் செய்து வைத்த கதை கேட்டுள்ளேன்.

அந்த திருமண வாழ்வு அத்தனை சிறப்பாக இல்லை என்றும் கேள்விப்பட்டேன்.

இது பெற்றோர்கள் எடுத்த வாழ்வை நாசம் செய்யும் முடிவுகள்.

இளம் வயதில் யோகா கற்றது, சுமார் 45 வருடம் விரும்பி செய்தால், இளம் வயதில் எடுத்த முடுவு நல்ல முடிவு என்று பொருள்.

எனக்கு தெரிந்து, பெண் கொடுத்து எடுக்க திருமணம் செய்த ஒரு ஜோடி வாழ்வு சிறப்பாக இல்லை.

ஆக தான் அல்லது மற்றவர் எடுத்த முடிவுகள் நமது வாழ்வை உயர்த்திவிட்டால், சந்தோஷத்தை கொடுத்தால் அது நல்ல முடிவுகள் என்ற முடிவுக்கு வரலாம்.

இனி அடுத்து இன்னும் ஆழமாக ஆராய்வோம்…..

இப்படிக்கு,

MKP பாண்டுரெங்கன்