The Basic Center-அடிப்படை மையம்-6; குடும்பத்தில் பிரச்சினையாகவே இருப்பாள்

அடிப்படை மையம்-6 குடும்பத்தில் பிரச்சினையாகவே இருப்பாள்/ன்

consequently

ஒரு மனிதன் அதிகம் மனக்கசப்புடன் வாழ்க்கிறான்/ள் என்றால் மனோவியலில் பல பல காரணங்கள் கண்டுபிடித்து சொல்கின்றனர்.

மன பழக்கம், மன ஒழுக்கம் இன்மை, ஏமாற்றம், நினைத்தது நிறைவேராமை போன்ற பல காரணங்கள் கூறுகின்றனர்.

நாம் நல்லது, கெட்டது எதில் கலந்தாலும் பிரச்னை வருகிறது என்றால், நமது மன ஆரோக்கியத்தை ஆராய வேண்டும்.

Thus,

மன ஒழுக்கம் இன்மை

மன ஒழுங்கு என்பது, புகைக்காமல் இருப்பது, மதுக்கும் , மாதுக்கும் அடிமை ஆகாமல் இருப்பது என்ற பழக்க ஒழுக்கத்தை குறிப்பிட வில்லை.

நான் குறிப்பிடுவது, பிரதமர் மோடி அவர்கள் வெறும் கதர் சட்டை போடுகிறார். நான் அவரிடம் வண பட்டு வேஷ்டியும், சட்டையும் அணிந்து காட்டினால் ஒரு பருப்பும் வேகாது. அவர் என்னை பார்த்து புறக்கணித்து விட்டு, அவர் வேலையே பார்க்க சென்று விடுவார்.

காந்தி, நேரு, இந்திரா காந்தி, இன்னும் பல வித சாதனை செய்த வியாபாரிகள், ஆன்மீகவாதிகள் போன்ற பலர் அப்படித்தான்.

அவர்கள் பெரிய மனிதன் என்று சொல்வோம்.

பல செயல்கள் மனதை ஒழுக வைக்கும்

So,

குழந்தைகள் மனம் போன போக்கில் செயல் படும். ஒரு குறிப்பிட்ட வயதில் அன்று குருகுலம் என்றும், பள்ளி என்றும் அனுப்பும் நோக்கம் ஒரு மன ஒழுங்கை உருவாகத்தான்.

யோகா, தியானம், படித்தல், கலைகள் போன்ற பல செயல்கள் மனதை ஒழுக வைக்கும்.

அவன், அவள், இப்படி செய்வது, செயல் படுவது எனக்கு பிடிக்க வில்லை. அவன், அவள் அந்த வீடு, பட்டு, சட்டை வாங்குவது என் மனதில் ஒரு அசைவுகரியத்தை உணர்கிறேன்.

சில நேரங்களில், எனக்கு கோபமாக, பொறாமையாக, எரிச்சலாக வெளிப்படுகிறது. எனது, பெற்றவர்கள் செய்தது சரி இல்லை. எனது பிள்ளைகள் சரியில்லை, எனது மருமகள் சரி இல்லை.

இப்படியெல்லாம் தோன்றுவது, என்னை எனது உடையில் நெருப்பு வைத்து தற்கொலை செய்து கொள்ள தூண்டிவிடுமோ போன்ற பயமும் இருக்கிறது.

ஆக, எனது மனம் எனக்கு கட்டுப்படவில்லையா, அல்லது உலகமே தவறாக இயங்குகிறதா? இந்த விழிப்புணர்வு வரவில்லை என்ற பட்சத்தில், நாம் சரியாக இல்லாவிட்டாலும் நாம் நம்மை சரியாக்கி கொள்ள இயலாமல் போய் விடுவது உறுதி.

2023 ல் தன்னை தயார் செய்துகொள்ள

further

So…

மற்றவர்களை சரிப்படுத்தவோ, திருத்தவோ பாடுபட்டு தோல்வியை தழுவதை விட்டொழித்துவிட்டு, வரும் 2023 ல் தன்னை தயார் செய்துகொள்ள கீழ்கண்ட புத்தகங்கள் மிக உதவியாக இருக்கும்.

நான் யார், எனக்கு என்ன வேண்டும் என்று கேட்கும் மன ஒழுங்கு வந்து விட்டால், இந்த வாழ் நாள் பற்றாது.

2023 சிறந்த ஆண்டாக்குவோம். சாதிக்க தொடங்குவோம்.

அடிப்படை மையம்-6 குடும்பத்தில் பிரச்சினையாகவே இருப்பாள்/ன்

….அவள் குடும்பத்தில் பிரச்சினையாகவே இருப்பாள்….இது உண்மையா? 

ஓஷோ தந்த்ரா ரகசியங்கள் 2ல் கூறியதை கீழே கட்டத்தில் கொடுத்து இருக்கிறேன்.

அதை படிக்கும் முன்னே ஆழம் என்பது, நாம் வாழும் அனைத்திலும் இருக்கிறது. கல்கி, பாரதி பாஸ்கர் போன்றவர்கள், எழுத்து, இலக்கியம், பேச்சு என்று அவர்கள் துறையில் ஆழத்தை பார்த்து விட்டனர்.

எனக்கு தெரிந்த தொழில் அதிபர்கள், தொழிலில் ஆழத்தை கண்டனர்.

சிலர் ஆன்மீகத்தில் ஆழத்தை கண்டனர்.

கீதையில், கர்ம யோகத்தில், செயல் ஆற்றுவதில் ஆழத்தை காண வலியுறுத்துகிறது.

அகல உழுவதை விட ஆழ உழுகுவது சிறந்தது என்பார்கள். நல்ல விளைச்சலை தரும்.

வாத்ஸ்யாயனர் போன்ற முனிவர்கள் காம சூத்ரா எழுதியத்தின் நோக்கம் ஆழமான அனுபவித்தல், அடுத்தபடி தெய்வீக  உணர்வுக்கு மனித குளத்தை அழைத்து செல்லவே.

தந்த்ரா ரகசியங்கள் 2

 • பாலுணர்ச்சியோடு சண்டை போடுபவர்கள் விரைவில் விந்தை வெளியேற்றி விடுவார்கள். ஏனெனில் இறுக்கமான மனம் இறுக்கத்திலிருந்து விடுவித்துக் கொள்ள அவசரப்படுகிறது.
 • புதிய ஆராய்ச்சிகள் பல ஆச்சரியமான விஷயங்களை, பல ஆச்சரியமான உண்மைகளைக் கூறுகின்றன. அப்போது எழுபத்தி ஐந்து சதம் ஆண்கள் உச்ச நிலைக்கு முன்பே விந்தை வெளியேற்றுபவர்களாக இருப்பதை உணர்ந்தனர்.
 • எழுபத்து ஐந்து சதவிகித ஆண்கள்! ஒரு ஆழமான சந்திப்பிற்கு முன்பே அங்கு அவர்கள் விந்தை வெளியேற்றி விடுகின்றனர். செயல் முடிந்து விடுகிறது.
 • மேலும் தொண்ணூறு சதம் பெண்கள் ஒருபோதும் முழுமை அடைந்த தில்லை. அவர்கள் ஒருபோதும் ஒரு உச்சியை, ஒரு ஆழத்தை, நிறைவு செய்யும் சிகரத்தைத் தொட்டதில்லை – தொண்ணூறு சதம் பெண்கள்?!
 • இதனால்தான் பெண்கள் இவ்வளவு கோபமாகவும், கடுகடுப் போடும் இருக்கிறார்கள். அவர்கள் அப்படித் தான் இருப்பார்கள். அவர்கள் தாங்கள் வாழும் ஆணோடு சுமூகமாக இருப்பதற்கு எந்த தியானமும் உதவ முடியாது. எந்தத் தத்துவமும், எந்த மதமும்,
 • எந்த ஒழுக்கமும் உதவ முடியாது. அவர்கள் விரக்தியில், கோபத்தில் இருக்கிறார்கள். ஏனெனில் நவீன கால விஞ்ஞானம் பழைய தந்த்ரா இரண்டுமே சொல்கின்றன. அதாவது ஒரு பெண் பாலுணர்வுத் தன்மையில் ஆழமாக நிறைவடையாவிட்டால் அவள் குடும்பத்தில் பிரச்சினையாகவே இருப்பாள்.
 • அவளுக்கு இருக்கும் அந்தக் குறையால் கடுகடுப்பு உருவாகிறது. அவள் எப்பொழுதும் சண்டை போடும் ஆழ் உணர்விலேயே இருக்கிறாள்.
 • எனவே உனது உனது மனைவி ஒரு சண்டை போடும் ஆழ் உணர்விலிருந்தால் முழு விஷயத்தைப் பற்றியும் திரும்பவும் யோசி.
 • காரணம் மனைவியிடம் அல்ல -நீயே கூட காரணமாய் இருக்கலாம். மேலும் பெண்கள் உச்சநிலை அடைவதில்லை என்பதால் அவர்கள் பாலுணர்ச்சிக்கு எதிராக மாறி விட்டனர். அவர்கள் பாலுணர்ச்சிக்குள் செல்ல சுலபத்தில் விருப்பப்படுவ தில்லை.
 • அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். அவர்கள் பாலுணர்ச்சிக்குள் செல்லத் தயாராக இருப்பதில்லை. அவர்கள் ஒருபோதும் எந்தவித ஆனந்தத்தையும் அதன் மூலம் அடையாத போது, அவர்கள் ஏன் தயாராக இருக்க வேண்டும்? மேலும் அதன் பின் அவர்கள் அந்த மனிதன் தன்னை பயன்படுத்திக் கொண்ட தாகவே உணருகின்றனர்.
 • தேவையான பொழுது ஒரு பொருளை பயன்படுத்தி விட்டு பிறகு ஒதுக்கி விடுவது போலவே அவர்கள் உணருகினறனர்.
 • ஒரு ஆண் திருப்தியடைந்து விடுகிறான். ஏனெனில் அவன் விந்தை வெளியேற்றி விட்டான். பிறகு அவன் நகர்ந்து தூங்கப் போய்விடுகிறான். அந்த மனைவி அழுது கொண்டிருக்கிறாள். அவள் வெறுமனே பயன்படுத்தப்பட்டாள்.
 • மேலும் அந்த அனுபவம் எந்த விதத்திலும் அவளுக்கு நிறைவைக் கொடுக்க வில்லை. அது அவளது கணவனுக்கு அல்லது காதலனுக்கு அல்லது நண்பனுக்கு ஒரு விடுதலையைக் கொடுக்கலாம். ஆனால் அது அந்த விதத்திலும் அவளுக்கு நிறைவளிப்பதாய் இல்லை.
 • தொண்ணூறு சதவிகிதப் பெண்களுக்கு முழுமையான பாலுணர்வு என்றால் என்ன என்றே தெரியாது. அவர்கள் ஒருபோதும் அதை அறிந்ததில்லை.
 • அவர்கள் உடல் முழுவதும் துடிக்கும். அந்த ஆனந்தத்தை, ஒவ்வொரு நாடி நரம்பும் அதிரும், ஒவ்வொரு செல்லும் உயிர்த் துடிப்புக்கு வரும், அந்த சிகரத்தை ஒருபோதும் தொட்டதில்லை. அவர்கள் அதை அடைந்ததேயில்லை.
 • மேலும் இதற்குக் காரணம் சமுதாயத்தின் பாலுணர்ச்சிக்கு எதிரான அணுகுமுறையே. சண்டைபோடும் மனம் அங்கிருக்கிறது. மேலும் அந்தப் பெண், அவள் மிகவும் உறைந்து போகுமளவு அடக்கி வைத்திருக்கிறாள்.
 • அந்த ஆண் அந்தச் செயலை அது ஏதோ ஒரு பாவம் என்பதைப் போல செய்து கொண்டே போகிறான். அவன் அதைக் குற்றமாக உணர்கிறான். அது செய்யக் கூடாதது. மேலும் அவன் தனது மனைவியுடன் அல்லது காதலியுடன் புணர்ந்து கொண்டிருக்கும் போது, அவன் ஏதோ ஒரு மகாத்மாவை – ஏதோ ஒரு துறவி என்று அழைக்கப்படுபவரை – நினைத்துக் கொண்டிருக்கிறான்.
 • மேலும் அவன் பாலுணர்வில் ஈடுபட்ட பிறகு அந்த மகாத்மாவிடம் எப்படிப் போவது, எப்படி இந்த பாலுணர்ச்சியை, இந்தக் குற்றத்தை, இந்தப் பாவத்தைக் கடந்து போவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்.
 • மகாத்மாக்களை விட்டு விடுவது மிகவும் கடினமான காரியம். நீ புணர்ந்து கொண்டிருக்கும் போது கூட அவர்கள் அங்கிருக் கிறார்கள். நீங்கள் இருவரல்ல! ஒரு மகாத்மாவும், அங்கு இருக்கிறார். அப்படி மகாத்மா அங்கில்லாவிட்டால் அப்போது கடவுள் நீ இந்தப் பாவத்தை செய்வதை கவனித்துக் கொண்டிருக் கிறார்.
 • மக்களின் மனதில் கடவுள் என்ற கருத்து ஒரு வெறும் எட்டிப் பார்க்கும் சிறுவனாகவே இருக்கிறது. அவர் எப்பொழுதும் உன்னைக் கவனித்துக் கொண்டே இருக்கிறார் –
 • இந்த அணுகு முறை பதற்றத்தை உருவாக்குகிறது. பதற்றம் அங்கு இருக்கையில், விந்து வெளியேற்றம் விரைவில் நடந்து விடுகிறது.
 • பதற்றம் அங்கு இல்லாத பொழுது, விந்து வெளியேறுவதை மணிக் கணக்கில் ஒத்திப் போட முடியும் -நாட்கணக்கில் கூட,
 • மேலும் அங்கு அதற்குத் தேவையே இல்லை. அன்பு ஆழமாக இருந்தால் இருவரும் ஒருவருக்கொருவர் சக்தி அளிக்க முடியும்.
 • அப்போது விந்து வெளியேற்றம் முற்றிலும் நின்று விடுகிறது. வருடக் கணக்கில் இரு காதலர்களும் எந்த விந்து வெளியேற்றமும் இல்லாமல், சக்தி எந்த விதத்திலும் விரையமாகாமல், ஒருவருக் கொருவர் சந்தித்துக் கொள்ள முடியும்.
 • அவர்கள் ஒருவருக் கொருவர் தளர்த்திக் கொள்ள முடியும். அவர்களது உடல்கள் சந்திக்கும்; தளர்வடையும். அவர்கள் பாலுணர்ச்சியில் நுழைவார்கள், தளர்வார்கள்.
 • மேலும் விரைவிலோ சிறிது கழித்தோ பாலுணர்ச்சி ஒரு கிளர்ச்சியாக இருக்காது. அப்போது அது ஒரு கிளர்ச்சியல்ல; அது ஒரு தளர்த்திக் கொள்ளல் – ஒரு ஆழமான, அதன் போக்கில் விட்டு விடுதல்.
 • நீ முதலில் உனக்குள், வாழ்வு சக்தியிடம் சரணாகதியானால் மட்டுமே அது நடக்க முடியும். அப்போது மட்டுமே நீ உனது காதலி அல்லது காதலனிடம் சரணடைய முடியும். தந்த்ரா இது நிகழ்வதைச் சொல்கிறது. மேலும் அது எப்படி நிகழ முடியும் என்பதையும் சொல்கிறது.
 • தந்த்ரா சொல்கிறது: நீ கிளர்ச்சியோடு இருக்கும் பொழுது ஒருபோதும் கலவியில் ஈடுபடாதே.
 • இது மிகவும் அபத்தமாகத் தோன்றுகிறது. ஏனெனில் நீ கிளர்ச்சியோடு இருக்கும் போதே நீ புணர விரும்புகிறாய். மேலும் சாதாரணமாகப் பங்கு கொள்ளும் இருவரும் ஒருவருக்கொருவர் கிளர்ச்சியூட்டிக் கொள்கின்றனர். அப்போதுதான் அவர்கள் புணர முடியும்.
 • ஆனால் தந்த்ரா சொல்கிறது: அதாவது கிளர்ச்சியோடு இருக்கையில் நீ சாந்தமாக, தியானத்தோடு இருக்கையில் அன்பு செய். முதலில் தியானம் செய்; பிறகு அன்பு செய்; மேலும் நீ அன்பு செய்யும் போது, புணரும் போது, எல்லையைக் கடந்து போகாதே.
 • எல்லையைக் கடந்து போகாதே என்று நான் சொல்வதன் அர்த்தம் என்ன? கிளர்ச்சியும் வன்முறையும் அடையாதே. அப்பொழுதுதான் உனது சக்தி சிதறாமல் இருக்கும்.
 • நீ பாலுணர்ச்சி சக்தி ஓட்டத்தோடு போனால், முழு சரணாகதி அடைந்தால், விரைவிலோ அல்லது சிறிது கழித்தோ நீ ஒரு நிலைக்கு வந்து சேர்வாய்.
 • அங்கு பாலுணர்ச்சி புது வாழ்க்கைக்கு பிறப்பு கொடுப்பது மட்டுமல்ல… பாலுணர்ச்சி அதிக வாழ்க்கையையும் கொடுக்க முடியும் என்பதை அறிவாய். காதலர்களுக்கு பாலுணர்ச்சி ஒரு வாழ்வை கொடுக்கும் சக்தியாக மாற முடியும்.
 • ஆனால் அதற்கு சரணாகதி தேவை. ஒருமுறை நீ சரணடைந்து விட்டால், பல பரிமாணங்கள் மாறுகின்றன.
 • உதாரணமாக, தந்த்ரா அறிந்திருக்கிறது. தாவோ அறிந்திருக்கிறது. அதாவது நீ புணர்ச்சியின் போது விந்தை வெளியேற்றி விட்டால் அப்போது அது உனக்கு வாழ்வைக் கொடுப்பதாக இருக்க முடியாது.
 • அங்கு விந்தை வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை. விந்து வெளியேற்றத்தை முற்றிலும் மறந்துவிட முடியும்.
 • தந்த்ரா, தாவோ இரண்டும் சொல்கின்றன: விந்து வெளியேற்றம் ஏனெனில் நீ சண்டையிடுகிறாய், இல்லாவிட்டால் அதற்கு அங்கு தேவையே இல்லை.
 • காதலனும் காதலியும் ஆழமான பாலுணர்ச்சித் தழுவலில் இருக்கமுடியும். ஒருவரில் ஒருவர்தளர்வடைந்து கொண்டு, விந்தை வெளிப்படுத்துவதில் அவசரப்படாமல், அந்த நிகழ்வை முடிக்க அவசரப்படாமல் இருக்க முடியும்.
 • அவர்கள் வெறுமனே ஒருவருக்குள் ஒருவர் தளர்வு கொள்ள முடியும். மேலும், இந்த தளர்வு கொள்ளல் முழுமையானதாய் இருந்தால், அவர்கள் இருவரும் வாழ்வை அதிகமாக உணர்வார்கள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் வளப்படுத்துவார்கள்.
 • தாவோ சொல்கிறது… ஒரு மனிதன் ஓராயிரம் வருடம் வாழ முடியும். அவன் பாலுணர்ச்சியில் எந்த அவசரமும் காட்டாமல் இருந்தால், அவன் ஆழமாக தளர்வுற்று இருந்தால், ஒரு பெண்ணும் ஆணும் ஒருவரில் ஒருவர் ஆழமானத் தளர்வு நிலையில் இருந்தால் ஒருவருள் ஒருவர் கரைந்திருந்தால் ஒருவரில் ஒருவர் ஆழ்ந்திருந்தால் எந்த அவசரமும் இல்லாமல், எந்த இறுக்கமும் இல்லாமல் இருந்தால், பல விஷயங்கள் நிகழும்.
 • ரசவாத மாற்றங்கள் நிகழும் – ஏனெனில் இருவரின் வாழ்வின் சாரமும் இருவரின் மின்சாரமும், இருவரின் உடலியல் சக்தியும் சந்திக்கின்றன.
 • Moreover, ..மேலும் இந்த சந்திப்பால், அவை எதிரெதிரானதாக இருக்கும் காரணத்தால் ஒன்று எதிர்நிலை மற்றொன்று ஆதரவு நிலை – அவர்கள் எதிர்துருவங்கள் – ஒருவரையொருவர் ஆழமாகச் சந்திக்கும் பொழுது, அவர்கள் ஒருவருக்கொருவர் சக்தி அளிக் கின்றனர்.
 • ஒருவர் மற்றொருவரை உயிர் துடிப்புள்ளவராக்கு கின்றனர். அதிக வாழ்வைத் தருகின்றனர்.
 • அவர்கள் நீண்ட நாள் வாழ முடியும். மேலும் அவர்கள் ஒரு போதும் முதுமையடையாமல் வாழ முடியும்.

__ஓஷோ.

தந்த்ரா ரகசியங்கள் 2

Cargie Movie…&  ஆழத்தை உணருதல்

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

இன்னும் வரும் ..