You are currently viewing The Basic Center-அடிப்படை மையம்-3 அஹங்காரம் எனும் ஆணவம்
Mindset vs Fixed Mindset

The Basic Center-அடிப்படை மையம்-3 அஹங்காரம் எனும் ஆணவம்

அஹங்காரம் எனும் ஆணவம்

அடிப்படை மையம்-3 அஹங்காரம் எனும் ஆணவம் எப்படி எப்படி மனிதனை தாழ்த்துகிறது என்பது பற்றிய ஒரு எனது குறுகிய அறிவை வைத்து, எனது கண்ணோட்டத்தில் ஒரு ஆராய்வு.

அடிப்படை மையம்-3 அஹங்காரம்…..

In the first place

முதலாவது நாம் நினைவில் கொண்டு வரவேண்டியது, நாம் அடிப்படை மையம் பற்றி விவாதித்து வருகிறோம். நாம் என்ன அடிப்படையில் தலைப்பை மறந்து விட்டால் விஷயம் பாழ் ஆகிவிடும்.

வியாசர் கூட அந்த தவறு செய்து விட்டார். அவர் பகவானை பற்றி எழுத நினைத்து, கடைசியில், மஹாபாரதம் எழுதி முடித்தார். மஹாபாரதம் நமக்கு பெரிய இதிகாசம் என்றாலும். வியாசருக்கு அது திருப்தி அளிக்க வில்லை. வியாசர், அவர் குரு நாரதர் கட்டளையின் அடிப்படையில் ஸ்ரீமத் பாகவதம் எழுதிய பிறகே திருப்தியுற்றார்.

In other words

நாம் ஒவ்வொரு பிரச்னையின் உள்ளே என்ன அடிப்படை மையம் உள்ளது? பிரச்சனைகள் வருவதற்கான அடிப்படை மையம் என்ன? எனது வாழ்வில் வரும், எனது திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்னைகள் அடிப்படை மையம் என்ன?

எனது நினைவுக்கு வர வர தொடர்ந்து ஆனால் அடிப்படை மையம் தலைப்பை மையமாக வைத்து எழுதுகிறேன்.

Adiitionally…அடிப்படை மையம்-3 அஹங்காரம்

சில விதங்அடிப்படை மையம்-3 அஹங்காரம்களில் பிரச்சனைகள் உருவாக்கம்: பிரச்சனைகளின் உள் பிரிவுகள்.

பிரச்சனைகள், பல ரூபங்களில் உருவாகிறது. அரசாங்கம் வரி கூட போட்டால் அது அரசாங்கத்து சட்டத்தால் வரும் பிரச்னை. கொசு கடித்தால், புயல் மழை, போன்றவைகள் இயற்கை தரும் பிரச்சனைகள்.

நோய்கள் வந்தால் உடலால் வரும் பிரச்சனைகள். இப்படி உடல், மனம், இயற்கை, போன்றவைகள் மூலம் பலவித பிரச்னை இருந்தாலும், நாம் ஆராய்வது, உறவுகள் மூலம் எப்படி பிரச்னை வருகிறது என்பது பற்றி மட்டுமே.

So…அடிப்படை மையம்-3 அஹங்காரம்…

தனது எல்லை எது என்று தெரிந்து கொள்ளாததால் ஏற்படும் மனஸ்தாபங்கள்.

போக்குவரத்து விளக்கு சட்டம் பொதுவானது. எல்லோரும் கடை பிடித்தால் தான் சிங்கப்பூர் போன்ற நாடுகள், விபத்தை தடுக்க முடிகிறது. அது கட்டாயம் சட்டம்.

குடும்ப சட்டம் கட்டாயம் இல்லாதது.

ஜாதி, மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்ய கூடாது என்ற கட்டாயம் இல்லை. ஆனால், சில முன்னேற்றம் அடையாத கிராமங்களில், கட்டாயப்படுத்துகின்றனர். அவசியப்பட்டால், உயிரோடு எரித்து தண்டனை கொடுத்து பயம் உருவாக்கின்றனர்.

இங்கே பயம் காட்டி கட்டுப்படுத்துகின்றனர். கட்டாய பாலக வயது திருமணம், பாலக விதவைகள் கட்டாயப்படுத்தி, உருவாக்கப்பட்டது.

***************

“நீ தனி வங்கி கணக்கு திறக்க கூடாது”

“நீ உனது மனைவி தோளில் எப்படி கையை போடலாம்…”

இது போன்ற மொழிகள், வார்த்தைகள், எல்லையை மீறுவதுதான்.

ஆணவ மற்றும் அஹங்காரத்தால் ஏற்படும் பிரச்சனைகள்.

எனக்கே எல்லாம் தெரியும். நான் நினைப்பதே சரி. நான் போடும் நியதியே சரியான நியதி. அல்லது, எனது பெற்றோர் கடைபிடித்த கலாச்சாரமே சரியானது.

எனது பாட்டி கட்டிய, கடைபிடித்த சாந்தி முஹூர்த்தம் போலத்தான் என்னை சுற்றி உள்ளவர் கடை பிடிக்க வேண்டும். அதுவே சரியானது. ( இது ஒரு மூட நம்பிக்கை. எனது நம்பிக்கையே சரி என்ற அடிப்படையில் தான் இன்று குடும்ப சண்டை, ஜாதி சண்டை முதல் மத சண்டை வரை நடக்கிறது)

எனது மனம் மற்றவர் வளர்ந்த விதத்தில் நம்பி, செயல் பட சர்வ சுதந்திரம் கொடுக்க மறுக்கிறது.

வீண் பழி சுமத்துவதில் ஏற்படும் மனஸ்தாபங்கள்.

1980, 90 களில், ஒரு முறை எனது தந்தை, ஒரு நபருக்கு, வட்டி தொழிலில் பங்குதாரர் ஆகும்படி உத்தரவிட்டார். சரி என்று ரூபாய் 2000 முதலீடு செய்தேன். எனது சுய விருப்பம் இல்லாமல் கொடுத்தேன்.

சில வாரங்களில், எதோ சொல்லி விட்டேன் என்று பொய் பழி சுமத்தப்பட்டேன். பிறகு பங்குதாரரிலிந்து வலுக்கட்டாயமாக நீக்கப்பட்டேன்.

நான் ரூபாய் 2000 கொடுத்தது, நான் நீக்கப்பட்டது, இதெல்லாம் எனக்கு ஒன்றுமே இல்லை. ஆனால், பொய் பழி போல். எதனை பேருக்கு சுமத்தப்பட்டு இருக்கும்? பொய் பழி போட்டு, வாழ்வில் உயர இறை கோட்பாடு ஆதரவு தருமா? இது ஒரு ஆன்மீக கேள்வி.

மாயாப்பூரில் 5 நாள்

சமீபத்தில், மாயாப்பூரில் 5 நாள் தங்கியதில், பல, பல, ஆன்மீக பாடங்கள் கற்றாலும், அதில் மிக முக்கியமான நான் கற்ற பாடம்:-

அங்குள்ள பக்தர்கள், தன்னில் இருக்கும் அஹங்காரத்தை, அழிக்க முயலுகின்றனர். அனால் நம்மில் நமக்கு அஹங்காரம் இருக்கிறது என்பதே தெரியாமல், போதிய விழிப்புணர்வு இல்லாமல் வாழ்கிறோம் என்பது ஒரு ஆச்சர்யம்தான்.

பக்தர்கள் பக்தி சேவை மூலம் முயற்சிக்கின்றனர். தனது ஆணவத்தை ஒழித்து கட்டிவிட்டேன் என்று எந்த பக்தரும் ஒப்புக்கொள்வது இல்லை. காரணம் மிக எளிது இல்லை. நாம் பக்தர்களோடு ஒப்பிட்டால், பல்லாயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறோம்.

தனது குடும்ப முறைகள் தான் எல்லோரும் கடை பிடிக்க எதிர்பார்ப்பது.

“நாங்கள் அதை செய்ய மாட்டோம், இதை செய்ய மாட்டோம். ஐயயே நீ இதையா செய்வாய்? உமட்ட வருகிறது.”

“எங்கள் குடும்பத்தில் இப்படித்தான் செய்வோம். அப்படி செய்யவே மாட்டோம்.”

டீ கடையில் மற்றவர்களை மட்டப்படுத்தி பேசி, கேலி செய்யும் பழக்கம்

1980 களில், எனது அனுபவத்தில், பரமக்குடி ரூபி டி கடையில், உட்கார்ந்து கூர்ந்து கவனித்ததில். 30 நிமிடம் உட்கார்ந்து தியானித்தால் போதும். 30 நிமிடத்தில் சுமார் 15, 20 சிரிப்பொலி கேட்கும். அந்த சிரிப்பொலியின் காரணத்தை ஆராய்ந்தால், அதன் பின்னணி காமெடி அடிப்படை, மற்றவர் யாரையாவது, மட்டம் தட்டி ஜோக் அடிக்கப்பட்டு இருக்கும்.

தொழில் ரீதியான காமெடி இருக்காது. ஆன்மீக ரீதியான ஜோக் இருக்காது.

கடவுள் என்னை நிறைய ஆசிர்வதித்து உள்ளார். எனக்கு சில புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கி வலி நடத்தினார். டி கடையில், அடுத்தவனை மதம் தட்டி பேசு மகிழ்வது ஒரு மனிதன் உயர்வுக்கு உதவாது என்று பிறகு அறிந்து கொண்டேன்.

அந்த கூட்டத்தில் ஆட்டம் போட்டவர்களில், இன்று எத்தனை பேர் நல்ல நிலையில் உள்ளனர் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒரு சிலர், சம்பாதிக்கிறேன் என்று தங்கம் கடத்தி, அவதி பட்டதாக கேள்வி பட்டு இருக்கிறேன்.

நான் மட்டும் எனது பிறந்த சூழல், பள்ளி சூழல், மற்றும் உறவினர்களின் அனுபவம் மற்றும் அவர்களின் ஆலோசனைகள், அறிவுரைகள் மட்டும் சார்ந்து இருந்து இருந்தால் நான் எனது வாழ்வும், என்னை நம்பி வந்த பெண்ணின் வாழ்வும் வீணாகி போய் இருக்கும்.

தான் உழைக்காமல் அடுத்தவன் உழைத்த பணத்தை, இப்படி அப்படி செய்ய வேண்டும், அல்லது கூடாது என்று நியதி வகுப்பது.

“நீ எப்படி, தீபாவளிக்கு பட்டு எடுத்து உன் மனைவிக்கு கொடுக்கலாம்?”

“நீ இந்த அளவுக்கு ஏன் உனது வீட்டு விஷேசம் செய்வது?”

நல்ல நோக்கத்தின் அடிப்படையில் சொல்லும் ஆலோசனைக்கும், தனக்கு ஏற்படும் உணர்வை மட்டும் சார்ந்து சொல்லும் ஆலோசனைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

in addition,…

எது இன்றய நாகரீகம் நிறைந்த கலாச்சாரம்?

எங்கள் குடும்பம் அழைக்கப்பட்ட, உற்றார் உறவினர்கலின், வியாபாரி குடும்ப எத்தனையோ வைபோகங்களுக்கு சென்றதுண்டு. திருமணம், சடங்கு, என்று பல பல.

எங்கள் குடும்ப கலாச்சாரம், சென்று எங்களால் இயன்ற நன்கொடை கொடுத்து விட்டு, அமைதியாக வந்து விடுவோம். அந்த வைபவத்தில் அரை குறை உடுத்தி வந்தாலும் கூட, அது அவர்கள் சர்வ சுதந்திரம் என்று வந்து விடுவோம்.

அவருக்கு மாலை போட்டுவிட்டு, எங்களுக்கு போடாவிட்டாலும் சரி, சிலருக்கு பூ கொடுத்து, எங்கள் வீட்டு பெண்களுக்கு பூ கொடுக்காவிட்டாலும் சரி, ஏற்றுக்கொண்டு வந்து விடுவோம்.

எங்கள் குடும்ப உறுப்பினரால், பூவுக்கும், அலங்காரத்துக்கு சண்டை போடுவது இன்றய நாகரீகம் இல்லை என்றுதான் கருதுகிறேன்.

ஒருவர் எங்கள் குடும்பத்தை அழைத்தால், அவர் வீட்டு வைபோகத்தை எங்கள் வருகை சிறப்பிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர்.

எங்கள் குடும்ப உறுப்பினர்களின் நோக்கம் மிக தெளிவாக இருக்கும். வைபோக வீட்டில், ஆயிரம் குறை இருந்தாலும், நாங்கள் சென்று சிறப்பிதுதான் வருவோம்.

சாப்பாடு நல்லா இல்லை என்றாலும், ஒரு காய்கறியில் மட்டும் உப்பாகி விட்டது, ஆனால், மற்றவை நன்றாக இருந்தது என்போம்.

இது எங்கள் கலாச்சாரம் இல்லை. நல்ல மனிதர்களுடன், நல்ல தரம் வாய்ந்த வியாபாரிகளிடம் பழகும் போது, தரம் நம்மை பற்றிக்கொள்கிறது.

ஐயா இந்த குடும்பத்துக்கு சொல்ல வேண்டுமே என்ற எண்ணம் வராது. இதுவே இன்றய தரம் வாய்ந்த நாகரீகம்.

***************************

“முட்டாள்களால் சூழப்பட்ட” புத்தகத்திலிருந்து 10 சக்திவாய்ந்த பாடங்கள்

1. முட்டாள்களால் சூழப்பட்டவர்கள், நீங்கள் முட்டாள்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள் என்று கருதும் மனநிலையைக் கடந்து செல்ல உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. நடத்தையின் மொழியை நீங்கள் புரிந்து கொள்ளும்போது மக்களை நன்றாகப் புரிந்துகொள்கிறீர்கள்.
ஆசிரியரின் முறை DISA மாதிரி.
• ஆதிக்கம் • தூண்டுதல் • சமர்ப்பித்தல் • பகுப்பாய்வு

ஒவ்வொன்றும் ஒரு முதன்மையான நடத்தையை விளக்குகிறது.

3. நீங்கள் தொடர்பு கொள்ளும்போது கேட்பவர் அதை அவர்கள் புரிந்துகொள்ளக்கூடிய செய்தியாக வடிகட்டுகிறார்.
அரிதாக, இந்தச் செய்தியை நீங்கள் தொடர்பு கொள்ள விரும்புகிறீர்கள்.

4. கேட்பவரின் நடத்தை வகையின் அடிப்படையில் உங்கள் தகவல்தொடர்புகளை மாற்றியமைக்கவும்.

அவர்களுக்குப் பரிச்சயமான மொழியுடன் அவர்களின் விதிமுறைகளைத் தொடர்புகொள்ளவும்.

5. நீங்கள் தனியாக இருக்கும்போது அல்லது உங்களைப் போன்றவர்களுடன் ஒரு அறையில் இருக்கும்போது மட்டுமே, அனுசரிப்பு இல்லாமல் தொடர்புகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
இல்லையெனில், மற்ற நபரின் நடத்தையை கருத்தில் கொள்ளுங்கள்.

6. சிறந்த அணிகள் ஒவ்வொரு நடத்தை வகைகளின் கலவையைக் கொண்டுள்ளன. இது பலவீனங்களைக் குறைக்கும் அதே வேளையில் அனைவரின் பலத்தையும் அதிகம் பயன்படுத்த அனுமதிக்கிறது.

7. நடத்தை வகைகளின் சில சேர்க்கைகள் மிகவும் திறம்பட ஒத்துழைக்கின்றன.
உதாரணமாக, உள்முக சிந்தனையாளர்கள் ஒருவருக்கொருவர் வேலை செய்ய விரும்புகிறார்கள்.

8. நீங்கள் எந்த வகையான நடத்தையுடன் பணிபுரிகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால், சிறிது நேரம் கேளுங்கள்.

அவர்களின் பாணியைக் கண்டுபிடிக்க அவர்கள் எதைப் பற்றி பேச விரும்புகிறார்கள் என்பதைக் கவனியுங்கள்.

9. ஒவ்வொரு நடத்தை வகையும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறது மற்றும் மன அழுத்தத்திற்கு வித்தியாசமாக பதிலளிக்கிறது.
உதாரணமாக, நீங்கள் அவர்களின் அதிகாரத்தைப் பறிக்கும் போது ஆதிக்கம் செலுத்தும் வகைகளுக்கு அழுத்தம் ஏற்படுகிறது.

அவர்கள் கடினமாக உழைத்து அல்லது பழி தீர்க்கும் ஒரு பலிகடாவைக் கண்டுபிடிப்பதன் மூலம் பதிலளிப்பார்கள்.

10. ஒவ்வொரு நடத்தை வகையும் கருத்துக்கு வித்தியாசமாக பதிலளிக்கிறது.
ஒரு கீழ்ப்படிந்த நபர் தனிப்பட்ட கருத்துக்களை சரியாக எடுத்துக் கொள்ள மாட்டார், தற்காப்பைத் தடுக்க அதை உண்மைகளுடன் வைத்திருங்கள்.
உங்கள் மன மாதிரிகளில் வேலை செய்யுங்கள்:
– நன்றாக சிந்தியுங்கள்
– புதிய வழிகளில் சிந்தியுங்கள்
– முன்னேற்றத்திற்கான மாஸ்டர் திறன்கள்

புத்திசாலித்தனமான தேர்வுகளைச் செய்வதற்கும் சிறந்த செயல்களைச் செய்வதற்கும் புதிய திறன்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

****************************************************

  1. 10 Powerful Lessons From The Book “Surrounded by Idiots”
  2. 1. Surrounded by idiots aims to help you get past the mentality of assuming you’re surrounded by idiots.
    2. You understand people better when you understand the language of behavior.
    The author’s method is the DISA model.
    • Dominance
    • Inducement
    • Submission
    • Analytical

    Each explains a primary type of behavior.

    3. When you communicate the listener filters it into a message they can understand.
    Rarely, is this message what you meant to communicate.
    4. Adapt your communication based on the behavior type of the listener.
    Communicate on their terms, with language familiar to them.
    5. The only times it’s effective to communicate without adapting is when you’re alone or in a room with people just like you.

    Otherwise, consider the other person’s behavior.

    6. The best teams have a blend of every behavioral type. Which allows them to make the most of everyone’s strengths while minimizing weaknesses.
    7. Certain combinations of behavioral types collaborate more effectively.
    For example, introverts prefer to work with one another.
    8. If you’re not sure what behavioral type you’re working with, listen for a while.
    Pay attention to what they like to talk about to figure their style out.
    9. Each behavioral type gets stressed and responds to stress differently.
    For example, dominant types get stressed when you take their authority away.
    They respond by working harder or finding a scapegoat to blame.
    10. Each behavioral type responds to feedback differently.
    A submissive person doesn’t take well to personal feedback, keep it to the facts to prevent defensiveness.
    Work on your Mental Models:
    – think better
    – think in new ways
    – master skills to breakthrough
    Understand new skills to make wiser choices and take better actions.

முன் பகுதிகளை படிக்க விரும்பினால் கீழே க்ளிக் செய்து படிக்கலாம்

Part 1

Part 2