மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் ஜனவரி 2022/3, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்

அனுபவங்கள் ஜனவரி 2022/3….

இதில் வரும் அணைத்தும் கற்பனையே. பொழுது போகவில்லை என்பதால், யாரையாவது நினைத்து நொந்து கொள்ள முழுக்க முழுக்க கற்பனையில் எழுதியது.

MKP Pandorangan

அனுபவங்கள் ஜனவரி 2022/3…

இத்தலைப்பு நமது வாழ்வில் மற்றவர்களின் முடிவுகள் எப்படி
வயது,
உறவு
போன்ற அதிகாரத்தை வைத்து நமது வாழ்க்கையில் திணிக்கப்படுகிறது.

இதெல்லாம் எப்படி பாதிக்கிறது. என்பதை பற்றிய ஒரு கண்ணோட்டம்

அனுபவங்கள் ஜனவரி 2022/3…

எதை எடுத்தாலும் போட்டியும். மனவருத்தமும் ஏன்?

உதாரண சம்பவம் 1

மேலே சொன்ன ஒரு சிறிய சம்பவத்தை, நிறைய கற்பனை என்ற மசாலா போட்டு சற்று ருசித்து பார்ப்போம்.

குற்றாலத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள், ஒரு கோஷ்டியாக, பல முறைகள், கண்ட, கண்ட, அருவிகளுக்கு சென்று குளிக்க சென்றனர்.

சில நாட்களில், 10 முதல், 20 தடவை குளிக்க சென்று இருக்கலாம். போற, வர வழியில், பல கடைகளில், வார இதழ்கல் தொங்கி என்னை வாங்கி படி என்று இதழ்கள் கத்தி கத்தி தன்னை, எவனாவது, எவளாவது வாங்குவார்களா, என்று ஏங்கியது.

ஒன்று இரண்டு நாட்கள் கழித்து, தனது புது மனைவிக்கு கேட்டாள் என்று ஒரு இதழை கணவன் வாங்கி கொடுத்தான். அதுவரை, திரும்பி பார்க்காத மற்றொரு உறுப்பினர், தன மனைவிக்கு மட்டும் வாங்கி கொடுத்தார் என்று குறை, வீடு பெரியவர்கள் கண்டிக்கும் வரை வந்தது.

அது கூட சிறு பிள்ளை தனமானது. மற்றொரு வார இதழ் கேட்ட உறுப்பினரும் சிறு பிள்ளை பிராயம் தான். ஆனால், அந்த பிரச்னையை, எப்படி ஒற்றுமை யுக்தியை பயன்படுத்தி, ஒரு தீர்வை கொண்டு வராமல், அதில் என்னை ஊற்றி, ஊதி ஊதி, அதை பெரியவர்கள் வரை கொண்டு வருவது, வாழ்வில் சாதிப்பவர்கள் செய்யும் செயல் கிடையாது.

உதாரண சம்பவம் 2

மேலமருங்கூர், கோவிலில் நாய்கள் படுத்து தூங்கும் விடுதியாக இருந்தது.

Thus.. அந்த மனிதன் உட்பட அந்த கோவிலை இருக்கும் திசையை கூட சுமார் 20, 30 ஆண்டுகளாக திரும்பி பார்த்தது இல்லை. அந்த திசை பக்கம் திரும்பியது கூட கிடையாது.

வருடம் ஒரு முறையாவது, ஒரு பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு இருக்கலாம். அதர்க்கு கூட வலி இல்லை. ஒரு வேண்டுதல் வைத்து இருக்கலாம். அதெல்லாம் செய்ய வில்லை. அடுத்தவன் செய்யும் காரியத்தில் போட்டா போட்டி வருகிறதே ஏன்?

So..அந்த மனிதன் தலையிட்ட பிறகு எல்லாவற்றுக்கும் ஏன் போட்டி வருகிறது. ஏன், குசு போட்டாலும், அதை பற்றிய விமர்சனங்கள் வருகிறது. பெரியதாக அல்லது சிறியதாக குசு போடலாம், என்ற வியாக்கியானம் வருகிறதே.ஏன் ?

Additionally..அந்த மனிதன் நாகரீகமாக, வாழ்த்து வருவதாலும் , பாரிய மனிதர்களிடம் பழகுவதால்,மற்றவர்களை விமர்சனம் செய்யாமல் ஒதுங்க வில்லை..

முக்கிய காரணம், அந்த மனிதனுக்கு, மதிப்பு நிறைந்த வேலைகள் ஆயிரம், இருப்பதால், மற்றவர்கள் செயலுக்கு விமர்சனம் செய்வதில்லை.

அரப்பூர் காமாச்சி அம்மன் , கோவில் சென்று, சில ஞானம் வந்து, மேல மருங்கூர் அந்த மனிதன் சென்றான். பாலகிருஷ்ணன் பல கெடுதல் செய்து இருந்தாலும், கோவில் கட்ட சொன்னது அவர்தான். அதன் விளைவு, கோவில் உருவாகி விட்டது.

அதை வைத்து, எனக்கு அது கிடைக்கவில்லை, இது கொடுக்க வில்லை, என்று எத்தனை பிரச்னை.

சம்பவம் 1ல், கணவன் வாங்கும் முன்பே யார் வேண்டுமானாலும் வாங்கி இருக்கலாம் அந்த ருபாய் 2 பெறுமான வார இதழை. ஏன் புது மனைவிக்கு வாங்கி கொடுத்த பின் போட்டி வரவேண்டும்? பிரச்னை வர வேண்டும்?

சம்பவம் 2ல், 36 வருடத்தில். எத்தனையோ தடவைகள், கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் சேவைகள் செய்து இருக்கலாம்.

ஏன் அந்த மனிதன் தலையிட்ட பிறகு, போட்டியும், பிரச்சினைகளும், வருகிறது?

ரூபாய் 2 பெறுமான வார இதழுக்கும். ஒரு பலனும் இல்லாத, பயனற்ற, கிராமத்தார் மரியாதைக்கும் பிரச்னை செய்தால், எத்தனை தூரம் வாழ்வில் பின் தங்கிய நிலையில் இருக்கின்றோம்?

Sree Sekva Vinaayagar Olden Temple
Sree Sekva Vinaayagar New Temple

நிபந்தனை உள்ள, இல்லாத அன்பை/பாசம் பற்றி.


சென்ற மாதம் ஜாய் ஆலுக்காஸ் என்ற நகை கடையில், கூலி குறைத்து கேட்டோம்.

நாங்கள் கேட்ட கூலிக்கு பொருள் கொடுக்க மறுத்து விட்டார்.

நாங்கள், எங்கள் கஸ்டமரிடம், விலை கட்டவில்லை என்றால், வேறு இடத்தில் வாங்குங்கள் என்று அனுப்பி விடுவோம்.

அவைகள் வியாபாரம். அப்படிதான்.

ஓஷோ வின் வார்த்தையில் சொன்னால், நிபந்தனை இருந்தால், அதன் பெயர் அன்பே இல்லை. நீ நகை வாங்கி தந்தாள் கணவன். ரூபாய் 2க்கு வாரஇதழ் வாங்கி கொடுத்தால்தான்… இப்படி ஆயிரம் உதாரணம் தர முடியும்.

விழித்திரு!

போட்டி கலாச்சாரம் வந்தது எப்படி வந்தது?

அந்த மனிதனின் மனைவி மக்கள்- குடும்பம் மதுரையில் இருந்த காலம். அந்த மனிதனின் மலேசியாயாவிலிருந்து, ஒரு வருடம் தீபாவளிக்கு, மலேசியாவிலும், மாறு வருட தீபாவளிக்கு, மதுரையில் குடும்பத்துடன் இணைந்து கொண்டாடுவது வழக்கம்.

80 களில், ஏதோ ஒரு தீபாவளிக்கு, அந்த மனிதனின் மனைவிக்கு ஒரு பட்டு முதல் முதலில் அந்த மனிதன் ஆசையாக எடுத்துக்கொடுதான். அதன் விளைவு, பெரியவர்கள் அந்த மனிதனினை திட்டினார்கள்?

இத்தனை காலம் சென்று, மனைவியுடன் தீபாவளி கொண்டாடுபவன், பட்டு வாங்கி கொடுத்தது எதோ கொலை செய்தது போல், குற்றம் சுமத்தினர்.

எந்த குடும்ப உறுப்பினரும், கடுகு அளவும், எங்களின் பட்டு எடுத்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை? இறக்க குணம் இல்லை. போட்டி குணம்தான் இருந்தது.

குடும்பத்துடன் வாழ்த்து வருபவர்களுக்கும், பல மாதங்கள் கழித்து, குடும்பத்துடன் வாழ்பவருக்கும் உள்ள வித்தியாசம் உணரும் திறன் இல்லை.

சேர்ந்து வாழ்பவர்கள், அணு தினமும், கணவன் மனைவி இன்ப துன்பங்களில் பங்கேற்கலாம். அது கூட புரிந்து கொள்ளாமல், பிரச்சனைகளை உருவாக்க மட்டுமே தெரிந்த உலகம்.

எந்த ஒரு குடும்ப உறுப்பினரும் இது கீழ் கண்ட ஐடியா அடிப்படையில் பேசவே இல்லை:

” அந்த மனிதன், மலேசியாவில், திருமணம் செய்ய விரும்பினாலும், நமது குடும்ப கௌரவத்தை, காப்பாற்றி, நாம் பார்த்து வைத்த பெண்ணை திருமணம் செய்து, சந்தோஷமாக வாழ்வது மட்டும் இன்றி, சுயமாக சம்பாத்தியம் செய்த பணத்தில், பட்டு வாங்கி கொடுத்தது நமக்கு கௌரவம் அல்லவா?”

“மலேசியாவில் வாழும் சிலர், பெற்றோர்கள் வற்புறுத்தலுக்கு ஆளாகி, இந்திய பெண்ணை திருமணம் செய்து, பின் அந்த பெண்ணுக்கு துரோகம் செய்து விடுகின்றனர். அந்த மனிதன், அப்படி இல்லையே”

உலகம் எதிரொலிக்கும் இடம்-


“கோபத்தை வீசினால் கோபம் திரும்ப வரும்; நாம் அன்பைக் கொடுத்தால், அன்பு மீண்டும் வரும். ஆனால் அது ஒரு இயற்கை நிகழ்வு; அதை பற்றி சிந்திக்க தேவையில்லை. ஒருவர் நம்பலாம்: அது தானாகவே நடக்கும். இது கர்மாவின் விதி: நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதை அறுவடை செய்கிறீர்கள்; நீங்கள் எதைக் கொடுத்தாலும் பெறுவீர்கள். அதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை, அது தானாகவே உள்ளது. வெறுக்கவும், நீங்கள் வெறுக்கப்படுவீர்கள். நேசிக்கவும், நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்.”
-ஓஷோ

நன்றி உணர்வுடன் கடவுளுக்கு ஆயிரம் கடன் பட்டு இருக்கிறேன்.

கும்பாபிஷேகத்துக்கு, குடும்ப மூத்த மருமகளுக்கு, சொல்ல வில்லை என்றோ, ஆயிரம் பிரச்சனைகலில் , எந்த பிரச்னை க்கும் அந்த மனிதன் இன்றும் வருத்தப்படவில்லை.

சரியான நேரங்களில், முக்கிய முடிவுகளை, மற்றவர்களின் பேச்சை அந்த மனிதன் கேட்கவில்லை, என்று பெருமை அடைகின்றான் .

அந்த மனிதன் எடுத்த முக்கிய முடிவுகள், அந்த மனிதனின் மற்றும் அவரின் துணைவியாரின் வாழ்க்கையில் தேவையான அளவு, நிறைய மன திருப்தி அளித்து உள்ளது.

ஒப்பீடு
Comparing is a Sin (ஒப்பீடு, கம்பேர், போட்டி போடுவது அனைத்தும் சகோதர சகோதரிகள்-பாவ செயல்கள் )
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை.
ஓப்பீடு செய்வது என்பது நமக்கு தன்னகத்தே உரிய ஒரு இயற்கை சுபாவம்.
ஒன்றைக்கண்டால் அதை ஒத்த மற்றொன்றை வைத்து ஒப்பீடு செய்வது என்பது நாம் அனைவரும் அனுதினமும் செய்வது தான்.
 
ஒரு ஜவுளிக்கடைக்கு துணி எடுக்க சென்றால் கூட , ஒரு துணியையும் மற்றொரு துணியையும்,
ஒரு கலரையும் மற்றொரு கலரையும் என்று ஒப்பீடு செய்கிறோம்.
 
ஒரு ஹோட்டல் சென்றாலும் சரி.. மற்றொரு ஹோட்டலுடன் அது தரும் தரம் மற்றும் விலை இவற்றைக்கொண்டு ஒப்பீடு செய்வோம் .
 
இது போன்று சாதாரணமாக ஆரம்பிக்கும் ஒப்பீடு எப்போது பாவமாக மாறுகிறது என்பதையும் கவனிக்க மறக்கிறோம்.
நேற்று இந்திய கிரிக்கெட் அணி 71 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தொடரை வென்று சாதனை படைத்தது. இதை கிரிக்கெட்டை விரும்பும் அனைவரும் அறிவோம்.
 
ஆனால் இங்கு விசயம் அதுவல்ல.
போட்டி முடிந்து கோப்பை அளிக்கப்பட்ட பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில்
இந்திய அணியின் பயிற்சியாளரும் முன்னாள் வீரருமான ரவி சாஸ்திரி இப்படி கூறுகிறார்
“ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த வெற்றியானது , 1983 ஆம் ஆண்டு இந்தியா பெற்ற உலகக்கோப்பை வெற்றியை விட மிகப்பெரியதும் மகத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது”
என்று கூறுகிறார்.
 

இந்த “ஒப்பீடைத் தான்”

ஆபத்து என்கிறேன்.
தற்போதைய இந்திய அணி பெற்ற இந்த வெற்றியானது மிகவும் பெரிய விசயம் தான். நிச்சயம் பாராட்டுக்குரியது தான்.
 
ஆனால் 1983 ஆம் ஆண்டு இந்தியா முதல் முறை ஜாம்வான்களான மேற்கிந்திய அணியிடம் பெற்ற வெற்றியையும் கோப்பையையும் விட இது பெரியது என்று கூறுவதில் இருந்து..
 
அந்த வெற்றியை தரம் குறைப்பது தேவையற்றது.
 

பல சமயம் ஒப்பீட்டில் நாம் எதை மட்டம் தட்டுகிறோமோ ? அதன் மேல் பொறாமை அல்லது காழ்ப்புணர்ச்சி இருக்கிறது என்று அர்த்தம்.

 
சில நாட்கள் முன்பு
பழம்பெரும் இசையமைப்பாளர் திரு. இளையராஜா அவர்கள்
கூறியிருந்தார்
“தான் மட்டுமே இசையமைப்பதாகவும் அவருக்கு பின் வந்த யாரும் இசை அமைப்பதில்லை எனவும் ஆகவே அந்த இசையை கேட்க வேண்டாம் ” என்று கூறி பேட்டி அளித்திருந்தார்.
 
இந்த இடத்தில் அவர் அவருடன் அவருக்கு பிறகு வந்த இசையமைப்பாளர்களை ஒப்பீடு செய்கிறார்.
 
இந்த ஒப்பீடு தேவையற்றது. காரணம் அவர் ஜாம்பவான் . நொடிப்பொழுதில் இசையைமைக்கும் திறன் கொண்டவர்.
ஆனால் இது போன்ற பேச்சுகளால் வசவுகளுக்கு ஆளாகிறார்
இந்த இடத்தில் ஒப்பீடு கர்வத்தை கொடுக்கிறது
ஆம் .. தொழிலில் நம்மை விட பெரிய கொம்பன் யாருமில்லை
என்று பலரும் நினைத்துக்கொள்வதுண்டு.
 
இந்த ஊரிலேயே நான் தான் பெரிய ஆள்.. பெரிய தொழிலதிபர்.. என்று கம்பேர் செய்து செய்து கர்வம் தலைக்கேறி நாசமாகிப்போன மண்ணோடு மக்கிப்போன பல கதைகளுண்டு தரணியில்.
 

ஒருவரை ரசிக்க அவர் ஒருவரே போதுமானது.

 
ஏன் மற்றொருவருடன் அவரை ஒப்பிட வேண்டும்.
இளையராஜா பிடிக்கிறதா?
 
கேளுங்கள் கொண்டாடுங்கள். ஏன் ரஹ்மானை வம்புக்கு இழுக்க வேண்டும் ?
ரஹ்மானை பிடிக்குமா?
 
அவரது இசையை ரசியுங்கள். ஏன் ஹரிஸ் ஜெயராஜை இழிவுப்படுத்த வேண்டும்?
 
ஒவ்வொரு இசையையும் தனித்தனியாக ரசிக்க கற்றால் இந்த ஒப்பீடுகள் ஒழியும்.
 
இந்த இடத்தில் ஒப்பீடு மனநோய் நிலைக்கு செல்கிறது.
 
சூப்பர் ஸ்டார் – உலக நாயகன் சண்டை
தல-தளபதி சண்டை
எல்லாம் இதில் இருந்து வருவது தான்
ஏன்..
 
ரஜினியை ரசிக்க கமலை வெறுக்க வேண்டும்?
 
ஏன் விஜயை ரசிக்க அஜித்தை வெறுக்க வேண்டும்?
 

ஏன் சச்சினை விரும்ப

கோஹ்லியை வெறுக்க வேண்டும்?

 
இவர்களை ஒன்றோடு ஒப்பீடு செய்து அடிக்கும் வெட்டி சண்டையில் பல கோடி தமிழ் இளைஞர்களின் நேரம் வீணாகிறது
அடுத்து,
தனக்கு பிறந்த இரண்டு பிள்ளைகளுக்கு இடையே தாய் செய்யும் கம்பேரிசன்.
 
இது மிகக்கொடும் பாவங்களுள் ஒன்று.
 
காரணம் ஒன்றும் மற்றொன்றும் எப்போதும் ஒன்றாகாது. இரண்டும் வேறு தான்.
 
இவன் ஏன் அவனைப்போல இல்லை.
 
அவன் ஏன் இவனைப்போல இல்லை.
 
இவன் அவனை விட நல்லா படிப்பான். நல்ல பையன்.
 
அது ஒரு உதவாக்கரை என்று மகன்கள் காதுபட கம்பேர் செய்யும் தாய்மார்கள் உண்டு
இது தவறு.
 
 
இந்த வகை கம்பேரிசன் மிகப்பெரும் மனத்தாழ்வு நிலையை பிள்ளைகளுக்கு கொண்டு வந்து சேர்க்கும்.
 
ஆகவே தாய்மார்கள் தந்தைமார்கள் பிள்ளைகளை அடுத்த பிள்ளைகளை வைத்து கம்பேர் செய்வது கொடிய பாவம்.
 
அதை தவிர்த்து கொள்ளுங்கள்
ஒப்பீடு எனும் மனநோய்
பொறாமை
கர்வம்
தன்னிறைவின்மை போன்ற பல கிளை நோய்களை கொண்டு வந்து நம்மை கடைசியில் படுகுழியில் தள்ளிப்போவது உறுதி.
 
ஒவ்வொரு மனிதனையும்.ஒவ்வொரு தனி உயிராக..
உணர்வு கொண்ட உடலாக…
அன்பு செய்யும் மனமாக பாருங்கள் .
 
அனைவருக்கும் “Uniqueness” எனும் தனித்தன்மை உண்டு.
இந்த உலகில் ஒன்று போல இரண்டு உயிர்கள் கிடையாது.
 
தனித்தன்மையை மதிப்போம்.
 
கம்பேர்(compare) செய்து உயிர்களையும் உணர்வுகளையும் இம்பேர்(Impair) செய்ய வேண்டாம்
 
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

மேலும் மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் ஜனவரி 2022.

அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும் தொடர்பானவற்றை படிக்க விரும்பினால், கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்:-

அனுபவங்கள் ஜனவரி 2022/1.
அனுபவங்கள் ஜனவரி 2022/2..

இன்னும் அனுபவங்கள் மனோவியல் சாஸ்திர ஆராய்ச்சிபூர்வமாக வரும்

இப்படிக்கு,

MKP பாண்டுரெங்கன்