My Life Experience

You are currently viewing உபயம் பெயர் போடுவது யாருக்கு நஷ்டம்?
மாற்றம் ஒன்றே மாறாதது!!

உபயம் பெயர் போடுவது யாருக்கு நஷ்டம்?

உபயம் பெயர் போடுவது யாருக்கு நஷ்டம்?

கோவில் வளர்ச்சிக்கு உதவுகிறதா இல்லையா? 36 வருடம் எந்த செயல் பாடும் இல்லாத கோவிலில் இந்த இரண்டு வருடமாக உற்சாக செயல் பாட்டில் இருக்கும்போது, அதை ஆரோக்கியம் என்று எடுத்துக்கொள்ளலாமே?

உபயம் பெயர் போடுவது யாருக்கு நஷ்டம்?

ஆயிரம் கருத்துக்கள் சொல்லி, ஒன்றும் செயல் படுத்தும் திறமை இல்லாமல், 36 வருடம் செயல் படாமல் கோவிலை பாழடைய வைத்ததுக்கு பதில்?

இன்று உபய காரர்கள் பெயரை போட்டு, மற்ற ஊர் காரர்களை கவர்ந்து பல வித உபயம் எடுக்க முன் வரும் படி நிர்வகிப்பது சிறந்த நிர்வாகம் இல்லையா?

கருத்துக்கள் வைத்து கோவில் நிர்வாகம் செய்ய முடியாது

வெறும் கருத்துக்களை வைத்துக்கொண்டு கோவில் நிர்வாகம் செய்ய முடியாது.

in addition..

மிக சிறந்த கருத்துக்களாக இருந்தால் கூட, பலன் தராது. டீ கடையில் வேலையில்லாத, சில கூட்டங்கள் கருத்து பரிமாறிக்கொண்டு இருப்பது, பொழுது போக்கலாம்.

likewise,

காரியம் சாதிப்பவனுக்கு, டீ கடையில் உட்கார நேரம் இருக்காது.

also..

திருவள்ளுவரின் கருத்தை கூட நாம் கேட்பது கிடையாது. அவரை வெறும் பெருமை படுத்திவிட்டு, அசைவம் சாப்பிடுவதில் நாம் விரும்பவில்லையா? உலகம் போற்றும் திருவள்ளுவரின் கருத்து கூட செல்லவில்லை, இன்றய உலகில்.

பணம் என்ற ஒன்று இருந்தால்தான் தின பூஜை முதல், அன்னதானம் வரை செய்ய முடியும். இதெல்லாம் கோவில் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்று என்று இன்றய கமிட்டீக்கு தெரிகிறது.

மாற்றம் தவிர அணைத்து கலாச்சாரங்கள். பழக்கவழக்கங்கள், எண்ணங்கள் மாறுவது நிச்சயம் என்று ரஜினி ஒரு சினிமாவில் பாடுவது தெரியும். அது உண்மையும் கூட.

மாற்றங்கள் தவிர அனைத்தும் மாறக்கூடியது.

மாற்றம் ஒன்றே மாறாதது!!
மாற்றம் ஒன்றே மாறாதது!!

மஹாபாரத காலக்கட்டத்தில், பாண்டவர்கள் காட்டில் எடுத்து சென்ற தங்க கட்டிகளை, பல வற்றை யாகத்துக்கு பயன் படுத்திவிட்டு, மீதத்தை, அங்கே காட்டிலே விட்டு விட்டு வந்தனர். காரணம் அடுத்த வருடம் இதே யாகம் செய்ய தேவை என்பதால் அங்கேயே விட்டு வந்தனர்.

மறு வருடம் ஒரு துளி கூட குறையாமல் இருந்தது அந்த தங்கங்கள். காரணம் அன்றய மக்களின் எண்ணங்கலின் போக்கு, தனக்கு உரிமை இல்லாததை எடுப்பது இல்லை.

then…

இன்றய மனோ நிலை, ஜெயலலிதா ஆட்சி காலத்தில், மதுரையில் புறம்போக்கு நிலத்தில் வீடு காட்டியதை உடைத்து எரிந்தது தெரிந்ததே.

in the same way..

சமீபத்தில், மேலமருங்கூரில், ஒரு படித்தவன், ராணுவ வேலைக்கு போக விரும்புபவன் தனது குடும்பம் ஆட்சி செய்த புறம்போக்கு நிலத்துக்கு பட்டா இருக்கிறது என்று வாதம் செய்த வீடியோ எனக்கு வந்தது.

கோவில் நிர்வாகிகளுக்கும், கோவில் வளர்ச்சியை விருப்பும் பக்தர்களுக்கு உள்ள உயரிய புரிதல் 1

1) கோவில் எந்த திசையில் இருக்கிறது என்று தெரியாமலும், தனக்கு சம்பந்தமே இல்லாத ஊரில் கோவில் கட்ட லட்ச கணக்கில், வியாபார நட்பின் பலனாக நன்கொடை செய்தவர்கள் பெயர் போடுவது, அவர்களை உற்சாகப்படுத்தும்.

by the way..

2) மேலமருங்கூர் கோவிலை 2019 க்கு அப்புறம் எத்தனையோ அன்னதானம் செய்பவர்கள் பெயர்களை உபயதாரர்கள் என்று போடுவதால் என்ன நஷ்டம்?

so..

3) அன்று மன்னர்கள் சோத்தை போட்டு கோவில் முதல் தாஜ் மஹால் வரை கட்டினர். அன்று ஜாதி ஆதிக்கம் செய்து மற்றவர்களை ஆக்கிரமித்த காலம். இன்று 2022 ல் வாழ்கிறோம்.

4) அன்று பெண்கள் பள்ளி போக கூடாது. மறுமணம் கூடாது. தாழ்ந்த சமூகத்தினர், செருப்பு மேலாடை போடக்கூடாது. இன்றும் அப்படி இருக்க எத்தன்னை பேர் விரும்புகின்றனர்?

also..

5) உபய காரர்களாள் அன்னதானம் நடக்கிறது. பாமர மக்கள் வழிபடுகின்றனர். வயிறார சாப்பிடுகின்றனர். பால்குடம் எடுத்து நேற்றிக்கடன் செலுத்துகின்றனர்.

கோவில் நிர்வாகிகளுக்கும், கோவில் வளர்ச்சியை விருப்பும் பக்தர்களுக்கு உள்ள உயரிய புரிதல் 2

6) மேலமருங்கூர் என்ற கிராமத்தில், கோவில் கட்ட வசூல் செய் என்று கூறி, ஒப்பந்தத்தில் கையொப்பம் போட்டவர்களே கும்பாபிஷேகத்துக்கு ஐயரை வர வேண்டாம் என்று தடுக்க முயன்ற வீணா போன மனிதர்களும் உண்டு.

7) ஆக செய்து விட்டு சொல்லி காண்பிப்பவர்களால்/ சுய விளம்பரம் செய்துகொள்வதால் கோவில் நிறைய வளர்கிறது. மேலும் மேலும் பிரசித்தி பெற உதவுகிறது.

8) 1986 க்கு முன் ஒருவர் செலவு செய்து கோவில் கட்டி மற்றவர் தேங்காய் பரிவட்டத்துக்கு பொறுப்பற்ற தனமாக சண்டையிட்டு, கோவில் பாலனதுதான் பலன்.

இன்று கோவிலுக்கு பல வித முதலீட்டார்கள் முதலீடு செய்து அந்த கோவிலுக்கு பல உரிமையாளர்கள், கமிட்டீ அமைத்து நிர்வாகம் செய்ய நியமித்துள்ளார்.

உபயம், பெயர் போடுவது தேவையா அல்லது தேவையற்றதா என்று கமிட்டீ முடிவு எடுத்துக்கொள்கிறது.

9) கமிட்டீ கோவிலை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல உபயம் பெயர் போட அனுமதித்தாலும், அனுமதிக்காவிட்டாலும், முதலீடு செய்தவர்களுக்கு அக்கறை இல்லை.

கோவில் வளர் சிக்கு கமிட்டி முடிவுகள் பாதகம் (கடந்த 36 ஆண்டுகள் போல்) ஏற்படுமாயின் கமிட்டேயை மாற்ற ஏற்பாடு செய்யப்படும்.

10) கமிட்டீ மாற்றுவது அவர் அவர் நன்கொடை கொடுத்த தொகையை வைத்து ஓட்டு உரிமை கொடுக்கப்படும். உதாரணம் ஆயிரம் கொடுத்தவர்களுக்கு 1000 ஓட்டும், 10000 கொடுத்தவருக்கு 10000 ஒட்டு உரிமை கொடுக்கப்படும்.