You are currently viewing The Basic Center-அடிப்படை மையம்-5;  ஆழத்தை உணர்தல்
அனைவரையும் மகிழ்விக்க

The Basic Center-அடிப்படை மையம்-5; ஆழத்தை உணர்தல்

So what is …அடிப்படை மையம்-5 ஆழத்தை உணர்தல்?

What to discuss in this article-அடிப்படை மையம்-5 ஆழத்தை உணர்தல்?

“இந்த கட்டுரையில் நான் போதிய தெளிவுடன் சொல்ல தெரியாமல் சொல்ல வருவது, மற்றவர்கள் நமக்கு ஆலோசனை சொல்லும்போது, அவர்களின் சிந்தனை திறன் எப்படி பட்டது?

அவர்களின் பின்னணி அனுபவம் வெறும் தனது சமூகம் மற்றும் தனது அனுபவங்கள் தாண்டி சிந்திக்கும் திறன் உள்ளவர்களா?

அடுத்தவர் தேவை என்ன என்று வெறும் 1% ஆவது கருத்தில் எடுப்பார்களா?

சுய நலம், தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் போன்ற எண்ணங்களின் பின்னணியில் ஆலோசனை கூறுவார்களா?

என்று அறியாமல் அவர்களின் ஆலோசனைகளை ஏற்பது அதிக ரிஸ்க் உள்ளது.”

 

மனித உறவுகள் அவசியம் என்றால், அதன் ஆழத்தை உணர்தல்

நாம் வெறும் முக்கியமாக தமிழ் நாடகம் பார்ப்பது உலகம் புரியாது. உலகம் எப்படி இயங்குகிறது என்பது புரியாது. உலகம் இயக்கம், சூரிய மாற்றும் நவக்கிரக இயக்கம் பற்றி இங்கே குறிப்பிட வில்லை. நான் விஞ்ஞானி அல்ல.

மனித உறவுகள் இயக்கம், மனரீதியான இயக்கம் பற்றி குறிப்புடுறேன்.

முதலில் ஓஷோ கூறும் விழிப்புணர்வு, நம் மனம் எப்படி இயங்குகிறது என்ற விழிப்புணர்வு இருந்தால் மட்டுமே நாம் சுயநலத்தில் இயங்குகிறோமா, அல்லது மற்றவர் நலம் பார்த்து இயங்குகிறோமா என்பது புரிய வரும்.

1) உதாரணம்-சாந்தி முகூர்த்த சேலை.

முதலிரவு செல்லும் பெண் தாலி கட்டு புடவையுடன் செல்ல வேண்டும், என்று ஒரு கூட்டம், வேறொரு பட்டு அல்லது, சாதா சேலை கட்டி செல்ல வேண்டும் என்று இன்னொரு கூட்டமும் சண்டை இடும் அளவுக்கு பிரச்னை வந்ததை பார்த்து இருக்கிறேன்.

இதன் உட் கருத்து எனது பாராம்பிரயம் சிறந்தது. நான் நம்புவது சிறந்தது. இதைத்தான் கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு ஆக்கிரமிப்பு. வேறு ஒன்றும் இல்லை.

மற்ற வெளி கலாச்சாரத்தை ஏற்க மறுப்பது ஒரு வித வியாதி.

2 உதாரணம்- மலேசியாவில் உள்ளூர் வேற்று ஜாதி பெண் கூடாது.

எனது ஆசையை நிறைவேற்ற, எனது தந்தையார் மலேசியாவில் வீடு கூட வாங்கி விட்டார். எப்படி எனது ஆசை பாழாய் போனது?

இந்தியாவிலிருந்து எனக்கு உதவி செய்ய எனது மைத்துனரை அழையுங்கள் என்று தந்தையிடம் கூறி, வரவழைத்தார். மைத்துனர் வந்து எனது கருத்துக்கு ஆதரவு தரவில்லை. அது அவர் சர்வ சுதந்திரம்.

அவர் கூட வந்தது இரண்டு பேர்கள், எனது மைத்துனருக்கு ஆதரவாக பேசியது, உண்மையில் என் நலம் , பேனவா?

அப்படி நான் கேட்காமல் வந்து ஆலோசனை கூறியவர்கள், எந்த அளவுக்கு எனது தொழில் பற்றி புரிந்து இருக்க முடியும்?

தொழில் என்றால் என்ன என்று புரிந்து இருந்தால், தனது தொழில் உயர்ந்து இருக்குமே?

முதல் இரவு என்றால் என்ன என்று புரிந்தால். நாம் முதல் இரவு அறைக்கு நுழைய அனுமதி இல்லாத நாம், சண்டை செய்து, மண மக்கள் நிம்மதியை கெடுத்து, முதல் இரவு மூடையும் கெடுத்து குட்டிச்சுவர் செய்ய மாட்டோம்.

முதல் இரவில் ஆடை ஒரு இடையூறு என்றாலும், ஆடையும் அலங்காரமும், முதல் இரவுக்கு ஒரு நல்ல, கவர்வதுக்கு சேவை செய்கிறது.

இந்த முதல் இரவின் குறிக்கோளே, விஷயமே புரியாத நமது மக்கள், தொழிலின் ஆழத்தை எப்படி புரிந்து இருக்க முடியும்?

ஏன் நான் மலேசியாவில் திருமணம் கேட்டேன் என்று இன்று வரை, அன்று ஆலோசனை சொன்ன யாருக்கும் இன்று வரை விளங்கும் திறன், மற்றும் புரிதல் இல்லை, என்று நான் முடிவு செய்து பல காலம் ஆகி விட்டது.

அதை விட, ஒரு எண்ணெய் வியாபாரி, கட்டிங் டி வாங்கி கொடுத்து, அவரின் நம்பிக்கையை என்னுள் திணித்தாரே, அது சூப்பர்.

எட்வர்ட் டீ போனோ

எட்வர்ட் டீ போனோ என்பவர், பல டசன் சிந்திப்பது சம்பந்தமாக புத்தகம் எழுதி இருக்கிறார். அது போன்ற புத்தகம் படித்து ஒன்றும் ஆலோசனை சொல்லவில்லை.

இதை கிளிக் செய்தால், நமது சமுதாயத்துக்கு, சிந்தித்தல் பயிற்சி எத்தனை தேவை என்பது புரியும். பல லட்சம் புத்தகங்கள் விற்பனை செய்தது போக, பல நாடுகளின் பள்ளிகளில் “சிந்தித்தல்” எனும் தனிப்பட்ட தலைப்பில் பாடம் கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறது.

எனது தந்தையார் அவர்களுக்கு கொடுத்த பரிசுப்பொருட்கள் கூட, என்னை வலுக்கட்டாயப்படுத்த ஒரு மோட்டிவ் ஆக இருந்து இருக்கலாம்.

“உனது தந்தையார், நல்லவர். எனக்கு வேஷ்டி கொடுத்தார். அதனால், நீ இந்தியா, நமது ஜாதி பெண்ணை திருமணம் செய்துகொள். உனக்கு நல்லதா, உன் தொழிலுக்கு நல்லதா, என்று யோசிக்கும் சம்பந்த புத்தகம் படிக்க முடியாது. நான் வயதில் பெரியவன். ஆகவே, அப்பா மற்றும் நான் சொல்வதே சரி. கேட்டு நட”- இதுவே அவர்களின் ஆலோசனையின் சாராம்சம் 

கட்டிங் டீ அவர் செலவில் வாங்கி கொடுத்து, எனது திருமண தேவைகள், தொழில் தேவைகள் பற்றிய புரிந்து கொள்ள சிறிதளவும் முயற்சி செய்யாமல், தனக்கே எல்லாம் தெரியும், புரியும் என்ற மனோபாவத்தை கொடுத்தது, எனது தந்தையார் கொடுத்த  சில ஜோடி வேஷ்டியாக இருக்கலாம்.

உனக்கு என்ன வேண்டும்? வெறும் உடல் சுகத்தை குறிக்கோள் வைத்து திருமணம் கேட்கிறேனா? இது போன்ற கேள்விகள் என்னை கேட்டு புரிந்து கொள்ள ஒருவரும் முயல வில்லை. தந்தையார் மட்டும், அவரின், மனைவி, மற்றும் ஊரில் உள்ள உறவினர்களின் மறைமுக வற்புறுத்தலால், மலேசியாவில் வீடு நான் வாழ அப்பா வாங்கி விட்டிருந்தாலும் முடிவில் ஒரு பெரும் தடுமாற்றம்.

காலப்போக்கில், ஒவ்வொரு, மறைமுக வற்புறுத்தலின், சுயநலம் அல்லது நான் சொல்வதை, கேள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வந்ததாகும் என்பதை புரிந்து கொண்டேன். பல நூல்கள் படிக்க படிக்க, புரிய வந்தது.

I Am Right, You Are Wrong
I Am Right, You Are Wrong

மர ஆசாரிகள் ஆயுதங்கள்

நாம் எல்லோரும் சிந்திக்கிறோம் என்று நினைக்கிறோம். எனக்கு வயது கூட, ஆக எனது பேச்சை கேள். இது நமது பாராம்பிரியம், கலாச்சாரம். பாராம்பரியமும், கலாச்சாரமும் அனுமதிப்பதால் நாம் சிந்திக்கிறோம் என்று அர்த்தம் ஆகி விடாது.

மர சம்பந்த பொருட்களை உருவாக்கும், ஆசாரி, தச்சர் என்று அழைக்கப்படும் நபர்கள், அவர்கள் மர வேலைக்கு செய்யும் ஆயுதங்கள் வைத்து இருப்பார்கள்.

ஆணி அடிக்க உதவும் சுத்தியல், பூ வடிவமைக்க உதவாது. பூவடிக்க உதவும் ஆயுதம், மரம் செதுக்க உதவாது. தேவையான அளவுக்கு அறுக்க ரம்பம் உதவும், மற்ற சுத்தியல் போன்ற எதுவும் உதவாது.

திறமையான ஆசாரிகள், அவர்களின் ஆயுதங்களை மதிப்பது மட்டும் இல்லாமல், ஆயுத பூஜை என்று விமர்சையாக கொண்டாடுகின்றனர்.

 

 

சிந்தனையின் ஆயுதங்கள்

ஆசாரிகள் ஆயுதம் இன்றி ஒன்றும் செய்ய இயலாது. அவர்கள் திறமை பயன்படாது.

நாம் சிந்திக்கிறோம் என்று நினைப்பதால் மட்டும் நமக்கு திறன்பட சிந்திக்க முடியும் என்று பொருள் அல்ல.

எமோஷம் அல்லது ஒரு உணர்வுகள் சிந்திப்பதில் ஒரு பகுதி மட்டுமே. அதுவே எல்லாம் ஆகி விடாது.

பேரப்பிள்ளைகளுக்கு முத்தம் தருவது முதல் உணவு, விளையாட்டு பொருட்கள் வாங்கி கொடுப்பது எமோஷன் தேவை. தற்கொலை செய்து கொள்ள எமோஷன் தேவை. எமோஷன் பகுதி.

நான் சொல்வது சரி, நீங்கள் சொல்வது தவறு/I Am Right, You Are Wrong

“நான் சொல்வது சரி, நீங்கள் சொல்வது தவறு” – இது ஒரு செல்லாத சிந்திக்கும் ஆயுதம்.

ஏன் சிந்திக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்?

இந்த கேள்விக்கு 98% மக்களுக்கு பதில் தெரியாது?

ஏன் சிந்திக்கும் ஆயுதங்கள் அவசியப்படுகிறது? இதற்கும் பதில் தெரியாது.

நாம் மனித குரங்காக வாழ்ந்த காலத்தில் சிந்தித்தோம். மற்ற மிருகங்களுக்கு சிந்திக்கும் திறன் கொடுக்கப்படவில்லை.

நாம் மனித குரங்கு காலத்தில் சிந்தித்த முறை வேறு. பல பரிணாம வளர்ச்சியில் சிந்திக்கும் முறை மாறியது நிறைய.

பிறகு மஹாபாரத காலம், இராமாயண காலம் என்று சித்திக்கும் முறை மாறியது.

இன்று மக்கள் ஆட்சியில் சிந்திக்கும் முறை வேறு.

இன்றய மிக முக்கியமாக, தொழில் முடிவுகள் மற்றும் அணைத்து சமுதாய, உறவுகள் சம்பந்தமான முடிவுகள் எடுக்க சிந்திக்கும் திறமையின் அவசியம் புரியவில்லை என்றால், நாம் படிப்படியாக ஒடுக்கப்படுவோம்.

நான் நம்புவதே சரி, எனது கலாச்சாரமே சரி, இந்த முறையே சரி போன்று சொல்லிக்கொண்டே இருக்கலாம், முன்னேறும் மக்கள் ஒதுங்கிக்கொள்வார்கள்.

3) உதாரணம் யோகா தேவை இல்லை

இன்று என்னை உயிருடன் வைத்து இருப்பது நான் கற்ற யோகாசனங்கள்.

அன்று யோகா பழக பலவகை தொல்லைகளும், தடைகளும் இருந்தது.

எனது தந்தையார், ஒரு கட்டத்தில், யோகா பழகுவதை பார்த்து, திட்டினார், முனங்கினார். எனது தாயார், எங்கள் இருவருக்கும் இடையில் வருந்தி, என்னை யோகா வேண்டாமே என்றார்.

நான் அவரிடம் அன்று கூறியது, நான் யோகா செய்து கொண்டே அல்லது தொழிலில் ஈடு பட்டுக்கொண்டே எனது உயிரை திறப்பேன் என்று கூறினேன். அதாவது, “தந்தை சொல்மிக்க மந்திரமில்லை” என்ற பொன்மொழியை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

தந்தையார், என்னை ஆங்கில பள்ளியில் சேர்க்க முடிவு எடுத்தது அவர்தான். ஆனால், நான் செல்லும் பாதை அவருக்கும் புலப்படவில்லை, என்பது வருத்தம்தான்.

என்னுடைய 30வது வயதுக்கு மேல், சில முடிவுகள் ஏற்றுக்கொண்டு தீர்மானமாக சில காரியங்கள் செய்தார்.

4) சொத்து பிரிப்பதில் ஆழத்தை உணர்தல்

சொத்து தந்தையின் சுய சம்பாத்தியம்தான். அவர் சம்பாதிக்க அவர் கடையில் உழைத்த அனைவரும் போட்ட உழைப்பு அதிகம்.

தந்தையார், மலேசியாவில், உயில் எழுதினார். அவர் சுய விருப்பம் என்னவோ அதை எழுதினார். அவர் சொன்னார், பெண் வாரிசுகளுக்கு, சீர், என்றும், வீடு என்றும் செய்து விட்டேன். இனி தனது விருப்பம் இதுதான் என்று எழுதினார்.

எத்தனை பேர் தந்தையின் விருப்பம் என்ன என்று தெரிந்து கொள்ள முயன்றனர். தனது மனைவி பெயரில் சொத்து வாங்கி இருந்து விட்டால், தனது மனைவியின் சம்பாத்தியம் என்று பொருள் அல்ல.

தாய் மாமா செய்த தீர்வை மீறி சொத்து மாற்றி எழுதியது தவறு இல்லை.

எனது திருமண வாழ்வு மலேசியாவில் அமைந்து இருந்தால், இந்தியா பூர்விக சொத்து எனக்கு கிடைத்த பங்கை விட அதிகம் சம்பாதித்து இருப்பேன்.

எனக்கு ஆலோசனை கூறிய அனைவரும் காலத்தின் மதிப்பை உணரமுடியாதவர்கள். அது மட்டும் நிச்சயம்.

காலத்தின் மதிப்பை உணர்ந்தவர்கள், எனக்கு பொழுது போக எதையாவது பேச வேண்டும், டி வீ நாடகம் பார்க்க வேண்டும் என்ற சொல் வராது.

காலம் வீண் ஆனதால் தான், நான் பூர்வீக சொத்துக்கு நீதிமன்றம் செல்ல தயார் நிலைக்கு வந்தேன்.

எனது கட்டுப்பாட்டுக்கு தொழிலில் வந்த பிறகு, பெரியவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்து தொழிலை விட நிறைய சாதித்து உள்ளோம் என்பது குறிப்பிட தக்கது.

இதுதான் நியதி. இந்தியாவில் 6 மாதம், மலேஷியா வில் 1 வருடம் என்று இருந்த தொழில் 99% நலிந்து விட்டது. அழிந்தும் விட்டது. அல்லது தொழிழை விற்று விட்டு, இந்தியாவில் செட்டில் செய்து விட்டனர்.

இந்தியாவில் 6 மாதம் சோத்தை தின்றுவிட்டு தூங்கினால், எப்படி தொழில் திறன் வெளியாகும். கட்டிங் டீ வாங்கி கொடுத்தவர் சொன்னார், “இன்று நினைத்த நேரத்தில் இந்தியா வரும் வசதி வந்து விட்டது. குடும்பத்தை பார்க்க நினைவு வந்தால் உடனே வந்து விடலாம். உனது தந்தை வசதி உள்ளவர்.”- இவருக்கு தொழில் தேவை என்ன என்றே அடிப்படை புரியவில்லை என்று திடகாத்திரமாக முடிவு எடுக்கலாம்.

**************************************************************

இன்னொரு பக்கம் சிந்தித்தால், என்னை பொறுத்தவரை, இந்தியா வாழ்வு வேண்டாம், மலேசியாயாவில் வாழ்வை அமைத்துக்கொள்வோம் என்று இருந்தேன். அப்படி இருந்து இருந்தால், பூர்விக சொத்தில் கிடைத்த பங்கை விட பான் மடங்கு சம்பாதிக்கும் திறமை என்னிடம் இருந்தது, இருக்கிறது.

நான் ஏன் இன்றும் பழைய 1982 திருமண தேர்வை பற்றி யோசிக்கிறேன்? அன்று ஆலோசனை சொன்ன யாருக்கும் இன்று வரை புரியாது.

நல்ல மனைவி, பிள்ளைகள், நல்ல வாழ்வு என்பார்கள். மனைவியை பிடிக்கிறது, பேரன் பேத்தி எடுத்தாச்சு…

அதற்க்கு மேல் சிந்திக்கும் திறன் இருந்தால், அவர் அவர் தனது வாழ்வில் எத்தனையோ காரியம் சாதித்து இருக்கலாமே.

5) ஆக்ரமிப்பு, வற்புறுத்தல், வலியுறுத்தல் – இதன் பொருள் “உனக்கு தெரியாது”, “நானே வயதில் பெரியவன், நீ சர்வ சுதந்திரமாக முடிவு செய்யும் உரிமை இல்லை”

பல பல சரித்திர நெட்ப்பிலிஸ் யில் நாடகங்கள், இதை தான் வற்புறுத்துகிறது.

அன்று தலையை வெட்டி, கசை அடி கொடுத்து செய்தனர். இன்று மக்கள் ஆட்சியில், மன ரீதியில் செய்கின்றனர்.

1980 களில், தனது குடும்ப அந்தஸ்துக்கு தகுதி குறைந்த குடும்பத்தில் பெண் எடுத்து, அந்த சீர் கொடுக்க வில்லை, இந்த சீர் கொடுக்க வில்லை என்று அறிவு இல்லாமல் பேசி, புது தம்பதிகளை நிம்மதியாக வாழ விடாத குடும்பங்கள் எத்தனையோ.

சர்வ சுதந்திரமாக பெண்ணே எடுக்காமல் இருக்கலாமே.

இன்று பெண் கிடைக்காமல் நக்கிக்கொண்டு இருப்பவர்களும் நிறைய.

காலம் மாறிவிட்டது என்பது இல்லை. சிந்தனை திறன் கூடி விட்டது.

நீ வசதி இல்லாவிட்டாலும், சீர் நிறைய செய்ய வேண்டும். மறு மகள் வேலை செய்ய போவது எங்கள் குடும்ப கௌரவம் போய் விடும். இது போன்ற நிபந்தனைகளுக்கு கட்டுப்பட, இன்றய பெண்ணும், பெற்றவர்களும் தயார் இல்லை.

முன் பகுதிகளை புடிக்க விரும்பினால் கீழே க்ளிக் செய்து படிக்கலாம்

1 Part

2 Part

3 Part

4 Part