You are currently viewing The Basic Center-அடிப்படை மையம்-4 நிர்வாணா
நல்லது & தீயது செய்தால்?

The Basic Center-அடிப்படை மையம்-4 நிர்வாணா

அடிப்படை மையம்-4 நிர்வாணா

நிர்வாணா என்ற சொல் சமஸ்க்ரிதத்திலிருந்து வந்த சொல்.

இதன் பொருள் தமிழில் அம்மணம் என்ற பொருள் இல்லை. ஆனால் அதுவும் வரும். ஒரு வாழைப்பழத்தை, ஒரு ஆப்பிளை நிர்வாணம் ஆக்கி சாப்பிடுவது என்றாலும் தப்பான அர்த்தம்வந்துவிடும் அல்லது பொருத்தம் இல்லாதது.

நிர்வாணா என்ற சொல் ஆன்மீக த்துக்கு அதிக பயன்பாடு உள்ள சொல்.

முழு நிர்வாணம் ஆனால் மட்டுமே நான் யார் என்ற தன்னிலை உணர்வு நிலை வரும்.

மேல் ஆடைகளை கிழைத்தால் நிர்வாணம் ஆகலாம். இந்த ஆடைகள், நாம் உடலுக்கு மேல் உடுத்துவதை குறிப்பிடுவது அதிகம் பொருந்தாது.

மனதில் இருக்கும் ஆணவம், அறியாமை, கோடிக்கணக்கான ஆழ் மன பதிவுகளை கலைப்பது நிர்வாண என்ற சொல் 100% பொருந்தும்.

அடிப்படை மையம்-4 நிர்வாணா

 1 நிர்வாணப்படுத்துதல்

என்னை மதிக்கவில்லை  – அழைக்க வில்லை என்னும் ஆணவ நிர்வாணா அடிப்படை மையம்

8/10/2022ல் ஒரு கோவிலுக்கு சென்றேன். அன்றய உபய காரர் அப்பா 1978 முதல் தெரியும்.

என்னை அழைக்க வில்லை என்று அந்த கோவில் நிர்வாகஸ்தரிடம் கூறி காமெடி செய்தேன்.

எங்கள் குடும்பம் வழியக்க, அலையாமல் செல்லும் கலாச்சாரத்தை உடையவர்கள்.

 2 நிர்வாணப்படுத்துதல் –

என்னை மதிக்க வேண்டும் என்ற எதிர்பார்த்தல் –

என்னை மதிக்க வேண்டும் ஆணவ நிர்வாணா அடிப்படை மையம்

நேரம் இல்லாமையை தவிர, வேறு காரணங்கள் சொல்லி கோவில் போகாமல் இருந்ததில்லை. இன்று 9 10 2022 ல் நான் வேறு வேலையை முன்னிட்டு போகவில்லை. எனது துணைவியார் மற்றவர் துணையுடன் சென்று விட்டார்.

எங்களை அழைக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு இல்லாத குடும்பம்.

 3 நிர்வாணப்படுத்துதல் –

கோவில் காரியங்களுக்கு வழிய செல்வது எனது மதிப்பில் எனது எமோஷன் அளவை பொறுத்து, 100 கிலோ முதல் 10லட்சம் கிலோ வரை குறைந்து விடும். – எமோஷன் நிர்வாணா அடிப்படை மையம்

எமோஷன் நமது உடல், மனம் மற்றும் ஆன்மா ஆரோக்கிய வாழ்வை நிர்ணயிக்கிறது.

எனக்கு கோபம் என்ற எமோஷன் வருகிறது. அதன் காரணங்கள்:-

எனது மாமியார், நாத்தனார் சரியில்லை. அவர்களே காரணம். மாமியாரை விரட்டி அடித்தாலும் பரவாயில்லை. எனது தாயாரை, எனது நாத்தனார் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒழுங்காக பார்த்து கொள்ள வேண்டும்.

எனக்கு வயதாகி விட்டது. இப்பொழுது எனது மருமகள் சரியில்லை. மகள் என் கூட இருக்க வேண்டும். மருமகள் கூட வாழமுடியாது.

இன்னும் ஆயிரம் காரணங்கள் கூறலாம். நாம் குடும்பத்தில் கூட சமமாக பார்க்க முடியவில்லை.

இறுதியில், நமது எமோஷன், சேலையில் நெருப்பு வைத்து தற்கொலை செய்து கொள்ள அழைத்து செல்லுகிறது. அதுவும் வயோதிக காலத்தில் தற்கொலை செய்ய தூண்டுகிறது என்றால், நம்மிடம் ஆரோக்கியமான எமோஷன் இல்லை என்று பொருள்.

ஆயிரம் கோபம், பொறாமை, போன்ற ஆரோக்கியமற்ற எமோஷன் ஆடைகளை அவிழ்த்து எரிந்து நிர்வாணப்படுத்துதல் என்ற செயல் செய்தலே வாழ்வின் உண்மையான குறிக்கோளுக்கு அழைத்து செல்லும்.

எந்த ஆன்மீக தலைவரும், குருக்களும், மற்றவர் செயல்களை பார்த்து கோபம் மற்றும் பொறாமை பட பரிந்துரைக்க வில்லை.

ரமண மகரிஷி போன்ற பெரியோர்கள், “நான் யார்” என்ற உண்மையை தேட பரிந்துரைக்கின்றனர். இதை கண்டு பிடிக்க வாழ்நாள் பற்றாது.

முன் பகுதிகளை படிக்க விரும்பினால் கீழே க்ளிக் செய்து படிக்கலாம்

1 Part

2 Part

3 Part