குடும்ப உறுப்பினர்களின் மோட்டிவ் 2-என்னை அசிங்கப்படுத்தி/அவமானப் படுத்தி விட்டீர்கள்

குடும்ப உறுப்பினர்களின் மோட்டிவ் 2….

குடும்ப உறுப்பினர்களின் மோட்டிவ் 2-என்னை அசிங்கப்படுத்தி/அவமானப் படுத்தி விட்டீர்கள்

உங்களின்-உந்துதல்-அல்லது-மோட்டிவ்-என்ன
உங்களின்-உந்துதல்-அல்லது-மோட்டிவ்-என்ன

அப்படியென்றால் என்ன? எனது 63வது வயதிலும் புரியவில்லை.

“வாங்க” என்று கேட்கவில்லை

ஒரு தடவை எனது துணைவியார், வீட்டு மூத்த மருமகனை “வாங்க” என்று வீட்டுக்கு வந்த மருமகனை கேட்கவில்லை என்று ஒரு குறை வந்தது.

எனது மனைவி, நான் வாங்க என்று தலையை ஆட்டினேன். வாய் நிறைய வாங்க என்று கேட்க நிலை சரியில்லை. நான் அப்போதைய வீட்டில், குளித்துவிட்டு வரும் வழியில் உங்கள் வீட்டு மருமகன் வந்து இருந்தார். எனக்கு அரைகுறை ஆடையில் சின்ன வயதில் படு வெட்கமாக இருந்தது. எப்படி வாய் நிறைய கேட்க முடியும்?

ஒரு வேளை நானும் எனது மனைவியின் வாக்குமூலத்தை புறக்கணித்து, நீ வாங்க என்று கேட்கவே இல்லை என்று குற்றம் சுமத்துகிறேன், என்று வைத்துக்கொள்வோம்.

“வாங்க” என்று கேட்காதது, அத்தனை பெரிய தவறா? அதுவும், தொழிலை போட்டுவிட்டு, அந்த ஊரை விட்டு விட்டு, பிறந்த வீடு வந்து, பெரிய கூச்சல் போட்டு, வந்த மருமகளை, அவமானப்படுத்த வேண்டிய அளவுக்கு அவ்வளவு பெரிய தவறா?

நாகரீகம் என்பது கூட தெரியவில்லை

ஒருவர் தவறு செய்து இருந்தால், அவரை தனியே கூப்பிட்டு அறிவுரை சொல்வது நாகரீகம் என்பது கூட தெரியவில்லை.

வீட்டு மருமகன், தனது மனைவியிடம் “வாங்க”, என்று தன்னை கேட்க வில்லை என்று கூறிவிட்டு அவர் அவரின் மைத்துனர் கடை சென்று டீ சாப்பிட்டு விட்டு, அரட்டை அடிக்க போய்விட்டார். மதியம் நெய்மீன், அல்லது உப்புக்கண்ட சாப்பாடா என்று நினைவில்லை.

தொழிலை போட்டு விட்டு, வீட்டில், பிரச்னை உருவாக்கி…

நான் மலேசிய நாட்டில், உழைப்பை தவிர எதுவும் தெரியாமல் வளர்ந்து விட்டோம். இவர்கள், தொழிலை போட்டு விட்டு, வீட்டில், பிரச்னை உருவாக்கி, தான் போய் வெட்டிப்பொழுது கழித்து வந்து, தான் ஒரு பெரிய மதிக்கப்பட வேண்டியவர் என்று ஒரு கற்பனை.

அன்றே எனது மனைவிக்கு “உனது சோளியை பார்த்துட்டு போடி” என்று சொல்லாத விளைவுதான் இன்று சஷ்டி வரை பிரச்னை என்று எனது மனைவியை இன்றும் திட்டுகிறேன்.

மனைவி மட்டும் இல்லை, பெற்றவர்களும் “எங்கள் குடும்ப பிரச்னையை நாங்கள் நிர்வகித்துக்கொள்கிறோம்.”

“நீ பிறந்த வீட்டுக்கு மருமகனை கூட்டிவந்தால், நல்ல விருந்து சாப்பிட்டு விட்டு உனது சோளியை பார்” என்று சொல்லாதது, என்னை பெற்றவர்கள் செய்த மாபெரும் தவறு.

இதுவே ஷஷ்டியப்பூர்த்தி வயது வரை ஆக்கிரமிக்க வலி வகுத்து விட்டது. இப்பொழுது “சாது மிரண்டால்” என்று சொல்வது போல எனது மனைவி நிமிர்ந்து விட்டாள். இதை அன்றே செய்யாதது, இவளின் தவறு.

1980 & 1990 களில்…

  • தலை தீபாவளி வாழ்வில் ஒரு தடவை வந்தது. வீடு வந்ததும் ஒரு வயது பற்றாதவருடம் ஒரு பிரச்னை.
  • மூத்த மகனுக்கு, தலை முடி போட ஏன், எனது மனைவி பிறந்த வீட்டு மக்களை அனுமதிக்க வில்லை?
  • இரண்டாவது, மகன் பிறந்து, தகவல் தெரிவித்த இடத்தில, வாசலிலே பேசி அனுப்பியத்தின் நோக்கம் என்ன? அன்று அவர்கள் பணம் இல்லாத குடும்பத்தை சேர்ந்தவர்கள், அன்று. இன்று நம்மை தாண்டி விட்டார்கள் சம்பாத்தியத்தில்.
  • ஏன் வடக்கு மாசி வீதி, கிரகப்பிரவேசத்தில், வருகை தந்த விதம் அப்படி இருந்தது? வேறு மாதிரி சொன்னால், ஏன் எனது வீட்டு விசேஷத்தில் பிரச்னை உருவாக்கப்படுகிறது?
  • ஏன் மேலமருங்கூர் முதல் கும்பாஷிஷேகத்துக்கு, எனது மனைவிக்கு அழைப்பு இல்லை?
  • ஏன், எனது தாம்பத்திய வாழ்வில் தலையீடு நடந்தது? இதில் பின்னணியில் ஏதும் சூழ்ச்சி இருந்ததா?
  • ஏன், சம்பாதிக்க பயன் படுத்திக்கொண்ட என்னை, எனக்கு நல்ல வாழ்வை வாழ அனுமதிக்கப்படவில்லை.

மேலும்…

  • முதல் மகன் திருமண வீட்டில், மேக்கப் பிரச்னை என்று, துக்க வீட்டில் இருந்தது போல் நடந்து கொள்ள வேண்டும்? ஏன்?
  • முதல் கும்பாபிஷேகத்துக்கு அழைக்க வில்லை. 36 வருடம் அதை பற்றி யோசிக்கவும் யாரும் முன் வர இல்லை. கட்ட ஆரம்பித்ததும், அதில் எத்தனை மூக்கு நுழைப்புக்கள்?
  • ஏன் “வாங்க” என்று எனது மனைவி கேட்கவில்லை என்பதை, கணவன் வீட்டுக்கு போன மகளை தனது மருமகளை பேச பெற்றவர்கள் அனுமதிக்க வேண்டும்?
  • ஏன் அதே பெற்றோர்கள், தனது மகனும் மருமகளும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தில் இருக்கும் பொழுது, அடுத்தவன் வீட்டுக்கு போன மகள் வந்து தலையிட அனுமதிக்க வேண்டும்?
  • இத்தனை சட்டங்களும், ஒழுங்குகளும் தெரிந்த தனது கணவனின் குடும்பத்தார்களுக்கு, பிள்ளைத்தாச்சியான மருமகளுக்கு, இளைய நாத்தனார் திருமணம் முடிந்து மலேசியா வந்த கொளுந்தனாரிடம் ஒரு பூந்தி பாக்கெட் கூட கொடுத்து அனுப்பாதது ஏன்? உண்மையில் அறிவு பற்றாமையா? மக்களையும் மருமகளையும் பார்க்கும் பார்வை அதிகமான வேற்றுமையா? எனது மனைவி இன்று வரை கேட்டுக்கொண்டே இருக்கிறாள்.

லேட்டஸ்ட்

  • 2018ல் திருக்கடையூர் செல்ல ஒரு மனுஷியிடம் முதல் முதல் சொன்னால் எப்படி பக்குவமாக பதில் சொல்வது என்று கூடவா 50 வயது தாண்டியவருக்கு தெரியவில்லை?
  • சென்னையில் ஓட்டல் போட்டு, மற்ற இடங்களுக்கு பொய் கொள்முதல் செய்யும் இடத்தில, போனில் அது தவறு, இது தவறு என்று குறை கூறுவது. 50 வயதை தாண்டியவர், ஏன் மற்றவர் சொல்லும் குறைகளை சட்டை செய்யக்கூடாது?
  • 2019ல், எனது தம்பி வீட்டில் இருந்துகொண்டு, பெரிய குற்றம் சுமத்திவிட்டு பயணம் சொல்லிவிட்டு, இன்று நான் எதுவும் பேசவே இல்லையே என்றால்???
  • பேசுவது இன்று ஆரம்பித்தது இல்லை. 1982 முதல், தலையிட கூடாத விஷயத்தில் கூட மூக்கை நுழைத்து மூக்கை நுழைத்து, பழகிப்போய்விட்டது.
  • இன்று மனைவி நிமிர்ந்து எல்லாவற்றையும் புறக்கணிக்க ஆரம்பித்து விட்டால்.

அணைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்

மேற்கண்ட அணைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு பரம்பரை பரம்பரையாக ஆக்கிரமிக்க அனுமதித்து பழகி விட்டாரோ, அவர் மகன் வந்து உட்கார சொல்வது ஒரு பெரிய விஷயமாக காண்பிக்கப்படுகிறது.

ஆக்ரமிப்பு, ஆக்ரமிப்பு, ஆக்ரமிப்பு அதுவே பதில்.

படம் ஆரம்பத்திலே உட்காருவது பற்றி வடிவேலுவின் அறிவுரை, வடிவேலு வாங்கிய ஆதி இல்லை. அந்த பட டைரக்டரின் அனுபவ அடிகள் அதில் தெரிகிறது.

டைரக்டர் தேர்ந்து எடுத்த வில்லன் சூப்பர். வடிவேலு உட்காருவதில் தான் வில்லன் மரியாதை அடங்கியுள்ளது என்பதை வில்லத்தனமான சிரிப்பும், கதாநாயகனை அறைந்துவிட்டு பேசும் வசனம் சூப்பர்.

வடிவேலுவும், வில்லனும் மிக அருமை. டைரக்டரின் அந்த வில்லனின் ஒரு வசனம் “வடிவேலு உட்காராமல் இருப்பது எனது அதிகாரம், உன்னை (கதாநாயகன்) அதே தாழ்ந்த ஜாதியாக இருந்தாலும் உட்காரச்சொல்வது எனது அரசியல்” எனக்கு ஆயிரம் கண்களை திறந்து விட்டது. வில்லன் அறைந்த அரை என்னை அறைந்தது போல உணர்கிறேன்.

சுருக்கம்

ஆக மோட்டிவ் என்ன? ஆக்ரமிப்பு, தனக்கு அடுத்தவர் கட்டுப்பட வேண்டும் என்ற ஒரு வகை ஆசை, இன்னும் நிறைய இருக்கலாம்.

மேலும் மற்ற தலைப்புக்களை படிக்க இந்த லிங்கில் கிளிக் செய்யலாம்.

எனது முகநூல்

நான் பிறந்த ஊரான மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தின் முகநூல்

இப்படிக்கு,

MKP பாண்டுரெங்கன்

மலேசியா