You are currently viewing இவர் சரி, தவறு, என்ற தீர்மானிப்புக்கு மேலே 4: தெளிவில்லாமையிலிருந்து தெளிவான சட்டங்கள்
தெளிவில்லாமையிலிருந்து தெளிவான சட்டங்கள்

இவர் சரி, தவறு, என்ற தீர்மானிப்புக்கு மேலே 4: தெளிவில்லாமையிலிருந்து தெளிவான சட்டங்கள்

தெளிவில்லாமையிலிருந்து தெளிவான சட்டங்கள்….தெளிவில்லாமையிலிருந்து தெளிவான சட்டங்கள்…..

சரியும் & தவறும் 4…சரியும் & தவறும் 4

சரியும் & தவறும் 4 ஒரு 70 வயது மனிதனுக்கு ஆசா பாசம் இருக்கிறது என்று சித்தரிக்கும் ஒரு சினிமா.

in the first place..

சமுதாயம் எப்படி இயங்குகிறது?

யார் யாரை பொது கருத்துக்களும் பொது அபிப்பிபிராயங்களும் தன்னை தானாக வாழவிட மறுக்கிறது?

also,

தெளிவில்லாமையிலிருந்து தெளிவான சட்டங்கள்

சரியும் & தவறும் – தாய் மசாஜ் சினிமாவின் பொருளும்

தாய் மசாஜ் திரை படம் சொல்லும் தகவல், 70 வயது கிழவன் என்பதால் அப்படி எண்ணம் வர கூடாது போன்று சமுதாய கட்டுப்பாட்டில் வாழமுடியாமல், தற்கொலை செய்ய முயன்று, காப்பாத்தப்படும் கதை.

பிறகு, காப்பாற்ற உதவிய நபர்கள், இவரை யாத்திரை செய்வதாக குடும்பத்தில் பொய் சொல்லி, தாய்லாந்துக்கு அனுப்பி, அவரின் பணத்தை சுய நலத்துக்கு பயன் படுத்திய கதை.

அவர் தாய்லாந்து சென்ற விஷயம் தெரிந்து, குடும்பம் பஞ்சாயம் செய்யும் கதை.

இறுதியில் மிக எதிப்பு தெரிவித்த மூத்த மகன், இறுதியில் அவரும் மனிதன்தான், அவருக்கும் சர்வ சுதந்திரம் இருக்கிறது என்ற முடிவுக்கு வரும் கதை,

ஆக, நான் அந்த கதாநாயகன் கிழவனுக்கு ஆதரவு தர எழுதவில்லை. நம்மை அறியாமலே நமது சுதந்திரம் எப்படி பறிக்கப்படுகிறது என்கிற விழிப்புணர்வு இருக்கிறதா? இது அவசியம் யோசிக்க வேண்டிய ஒரு விஷயம்.

in addition,

and, likewise,

எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பல முறை தனது தந்தையை பற்றி ஒரு குறை கூறுவார்.

தந்தை மலேசியாயாவில் ஓர் தொழில் செய்பவர். மகன் சுமார் 18- 20 வயதில் இந்தியாவிலிருந்து, மலேசியா சுற்றுலாவுக்கு வந்த நேரத்தில், தந்தை இந்தியா சென்று விட்டார், என்பது ஒரு பெரிய குறை.

“எந்த ஒரு தந்தையும் மகன் வரும் பொது அவனை தவிர்க்க இந்தியாவுக்கு ஓடிவிட போகிறேன். எனது பொறுப்பிலிருந்து தப்பிக்க போகிறேன்.’ இப்படி சொல்லும் தந்தை அவர் இல்லை. அவருடன் நானும் சற்று பழகியிருக்கிறேன்.

 

அதே குறையை 60 வயதிலும் சொல்லும்….

மகன் 25 வயதில் அந்த குறையை கூறியது சரிதான்.

மகனுக்கும் பல கனவுகள் ஊர் சுற்றும் கனவுகள் இருந்து இருப்பதில் ஒன்றும் தவறு இல்லைதான்.

தந்தை நிறுவனத்தில் என்ன என்ன மாதிரி சட்ட திட்டங்கள் இருக்கிறது என்று புரியும் வயது இல்லை என்று சொல்ல முடியாது.

தந்தை சம்பாத்தியத்தில், ஊர் சுற்றி காண்பிக்கும் வசதி இருந்ததா? 1970களில் மலேசியாவில் வாழ்ந்த, ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்று வாழ்த்த வியாபாரிகள் பெரிய வசதியில் வாழவில்லை. நிறுவன சட்ட திட்டங்கள் மிக கடுமையானது. சினிமா போவது கூட குற்றம் என்று சொல்லும் நிறுவனங்கள் நிறைய இருந்தது.

அதே மகன், அதே குறையை 60 வயதிலும் சொல்லும் போது, மகனுக்கு உண்மையில் விஷயம் புரியவில்லை என்பது தெளிவாக புரிகிறது.

in addition..and..likewise…

தந்தை ஒன்றும் டாட்டா பிர்லா போன்ற பெரிய வியாபாரி அல்ல. சாதாரண தொழில். சில ஆண்டுகள் கழித்துதான் இந்தியா செல்ல இயலும் – அல்லது வசதி அந்த அளவுதான் இருந்தது.

அப்படி சில வருடங்கள் களைத்து இந்தியா செல்லும் மனிதர், மனைவியிடம் ஒரு படுக்கையில் படுத்து, மனம் விட்டு பேச நினைத்து இருக்கலாம். மனைவி போடும் ருசியான சாப்பாடு சாப்பிட நினைத்து இருக்கலாம்.

ஏன், மனைவியை தொட நினைத்து இருக்கலாம். சில வருடம் என்று மனைவியை பிரிந்து வாழாதவர்க்கு, அந்த விஷயம் புரிவதில்லை.

அது தவிர்த்து, தொழிலில், மற்ற உடன்பாடுகள், செலவு செய்யும் வசதிகள் எப்படி இருந்தது, யாருக்கு தெரியும். சர்வ சுதந்திரம், மகன், மருமகள், அண்ணன், தம்பி என்று பல பல போர்வையின் அதிகாரத்தில் பறிக்கப்படுகிறது. அது மட்டும் உண்மை.

சம்பாதிக்கும் எண்ணங்களை மனதில் உதயமாவதை விட்டு விட்டு, ஏன் குடும்ப ரூல்ஸ் உருவாக்கும் எண்ணம் மட்டும் உதயமாகிறது? தெரியவில்லை.

தனக்கு வாழ்வில் என்ன வேண்டும்? அதை நல்ல வழியில் எப்படி அடைவது என்று ஏன் யோசிப்பது இல்லை? தெரியவில்லை.

 

சரியும் தவறும் எது? தெளிவில்லாமை! தெளிவில்லாமையிலிருந்து தெளிவான சட்டங்கள்

நமது கதாநாயகன், தாய் மஸ்ஸாஜில், 22 வருடம் வாதத்தில் கிடந்த மனைவியை நன்றாக பார்த்தவர். மனைவிக்கு துரோகம் நினைக்காதவர்.

மனைவி இறந்த பிறகு, தாய்லாந்து சென்று, அங்கும் பேரப்பிள்ளை களிடம் பொய் சொல்லிவிட்டோமே என்று வருந்தும் மனிதன் அவர்.

ஒரு அற்ப ஆசையில் தாய்லாந்து சென்று விட்டாலும், ஒரு வேசி ஆவலுடன் குளிக்க அழைத்தாலும், இவர் மனம் ஒப்பவில்லை.

பிறகு ரசியா நாட்டு பெண், தியானம் போன்ற இந்தியா பண்பாட்டில் பற்றுள்ளவருடன் ஒரு நட்பு வரும். 70 வயது நாயகனை புரிந்து, அவரை அந்த பெண் அரவணைத்து ஒரு சிறிய லிப் கிஸ் கொடுத்த பிறகு இந்தியா வந்து விடுவார் நாயகன்.

இதில் விஷயம் என்ன என்றால் கிழவனுக்கு, உடல் உறவு தேவை படவில்லை. ஓர் அரவணைப்பு தேவை. ஒரு தனிமையிலிருந்து விடுபட்டு அந்த பெண்ணுடன் பழகிய சில நாட்கள் அவருக்கு பெரிய மாற்றம்.

அவர் ஒரு தெரு பொருக்கி இல்லை. வேசி கூப்பிட்டும், வாய்ப்பு இருந்தும் போகவில்லை.

ஆனால் சமுதாயம் அதை உன் வயதில் ஆசை பட கூடாது என்று சட்டம் போடுகிறது. இதுதான் விஷயம்.

வளர்ந்த பிள்ளைகள் உள்ள குடும்பத்தில், மனைவி இறந்து விட்டால், பிள்ளைகள் தந்தையின் மாரு திருமணத்துக்கு மறுப்பது ஏன்?

அவர் இன்பம் பெற்றுவிக்கக்கூடாது என்பதற்காக இல்லை. சொத்தில் இளைய தார பிள்ளைகளுக்கு பிரிக்க வேண்டி வந்து விடுமே என்பதற்க்காக. உண்மையை ஒப்புக்கொல்லாமல், இந்த வயதில் திருமணம் தேவை இல்லை என்று அபிப்பிராயம் – சமுதாய கருத்துக்களை பயன் படுத்திக்கொள்வது.

கேலடி கண்மணி என்ற ஒரு தமிழ் படமும் இது போன்ற விஷயங்களை தெளிவாக்கும்.

இது நோர்வேயில், கட்டகட் என்ற பகுதியில் நடந்த சரித்திர கதை.

வைகிங் என்ற சீரியலில், பல சம்பவங்கள் அன்றய தெளிவின்மையான சட்டம் ஆக்கப்படாத செயல்களை காண்பிக்கப்படுகிறது.

உடனே நமது இந்திய கலாச்சாரத்தை உயர்த்தி என்ற பார்வையில் பார்க்காமல், நாம் குரங்கிலிருந்து இன்றய சரியும் தவறும் எது என்று முடிவுக்கு வந்துள்ளோம். இது நினைவில் இருக்க வேண்டியது அவசியம்.

in the first place..not only …

இன்றும் நமது சுதந்திரத்தை உணரவில்லை என்றால், இன்றய சட்டமும், கலாச்சாரமும், பழக்க வழக்கங்களும் ஓரளவு தெளிவுக்கு வந்து விட்டாலும், தனது அதிகாரம், வயது போன்ற விஷயங்களை வைத்துக்கொண்டு, ஆக்கிரமிப்பு செய்யத்தான் செய்கின்றார்கள் என்பது உறுதி. இது சம்பந்தமான எனது வாழ்வில் நிறைய அனுபவங்கள் உண்டு.

VIKINGS NETFLIX SERIAL

but also..as a matter of fact…in like manner…

அந்த சீரியலில்:

  • ஒரு அரசனும் அரசியும் என்று கூட சொல்லலாம். தான் லண்டனில் பிடித்து வந்த ஆன் பாதிரியார் அடிமையை வெளியில் கட்டிப்போட்டு விட்டு, அரசனும் அரசியும் படுக்கை அறைக்கு சென்று பாதியில்,
  • அடிமையை காப்பி சாப்பிட விருந்தாளியை நாம் இந்தியாவில் அழைப்பது போல், அடிமை பாதிரியாரை கணவனும் மனைவியும் சேர்ந்து அரை குறை உடையில் அழைப்பார்கள்.
  • படுக்கையறையில் இன்பத்தை பகிர்ந்துகொள்ள
  • பாதிரியார் அவரின் கோட்பாடை சொல்லி மறுத்து விடுவார். பாதிரியாரின் நன்னடத்தையை வைத்து இப்படி அழைப்பு விடுவார்கள்.
  • இங்கே இப்படி ஒரு கேவலமான கலாச்சாரமா என்று ஒரு ஜட்ஜ்மெண்ட் க்கு வந்து விட்டால், நாம் எதுவும் கற்க முடியாது.
  • அதே ஊரில், புளொக்கி என்ற ஒரு ஆசாரி, இவர் மனைவியுடன் இன்னொரு விருந்தாளியுடன் பங்கேர்ந்துகொள்வார்.
  • பிறகு, அரசன் இன்னொரு பெண்ணை தொட்டு பிள்ளை வந்து விடும். அதை அன்று, பாதிரியாரை அழைத்த அதே ராணி, புருஷன் அதாவது அரசணை விட்டு வேறு நாட்டுக்கு போய் விடுவாள். அரசன் செய்தது தவறாம்.
  • அன்றய நாகரீகத்தில் இப்படி ஒரு தெளிவில்லா ஒழுக்கங்களும், சட்டங்களும் தாண்டி இன்றய நிலைக்கு வந்துள்ளோம்.
  • அந்த சீரியலில் நிறைய சொல்லலாம். பலமும் வீரமும் இருந்தால்போதும். யாரையும், வெட்டலாம், கொலை செய்யலாம். ஆக்கிரமிக்கலாம். மனிதாபமில்லாத ஒரு நாகரீகம்.

furthermore

additionally

பாஞ்சாலி 5 கணவர்களுடன் வாழ்ந்தது சரி என்று மஹாபாரதம் சொல்கிறது. இன்று சட்டப்படி குற்றம்.

சிவன், முருகன் போன்ற கடவுள்கள் 2 மனைவியுடன் இருக்கின்றனர். இன்றும் மிக சிலர் 2 மனைவியுடன் இருக்கின்றனர். முதல் மனைவிக்கு உள்ள அதிகாரம் 2 வது மனைவிக்கு பொதுவாக இருப்பதில்லை.

மலேசியாவில் குறிப்பிட்ட மதத்தை கடைபிடிப்பவர்கள் ஒரே நேரத்தில் 4 மனைவிகள் வைத்திருக்க சட்டம் அனுமதிக்கிறது.

சமுதாய தேவைக்கு தகுந்தபடி கலாச்சாரங்கள் மாறும். இந்தியாவில், சீனாவில் ஒன்று இரண்டு பிள்ளைகள் போதும் என்று வலியுறுத்துகின்றனர்.

மலேசியாவில் நிறைய பிள்ளை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கின்றன.

ஒரு நாட்டில் பெண் பற்றாக்குறை வந்தால், 5, 10 கணவர்கள் வைத்துக்கொள்ளலாம் என்று சட்டம் வரும். பாஞ்சாலீயின் சிறப்பை பிரச்சாரம் செய்யப்படும்.

ஒரு நாட்டில், ஆண் இனம் குறைந்து விட்டால், 5, 10 மனைவிகள் வைத்துக்கொள்ளலாம் என்று சட்டம் வரும். கிருஷ்ணர் 16000 மனைவிகளுடன் வாழ்ந்த சிறப்பை பிரச்சாரம் செய்யப்படும்.

பெண் இனம் போதிய அளவு இல்லாவிட்டால், பாஞ்சாலி போன்ற புராணங்கள் பேசி அதுவே சரி என்று நம்ப வைத்துவிடுவார்கள்.

ஆண் இனம் இல்லை என்றால், சிவன், முருகன் என்று உதாரணம் காண்பிப்பார்கள்.

இரண்டு இனமும் சமமான அளவு என்றால், ஸ்ரீ ராம பிரான் ஒருவனுக்கு ஒருத்தியுடன் வாழ சொன்னார் என்று நம்ப வைக்கப்படும்.

இந்த சரியும் தவறும் காலத்தேவைகள், சமுதாயத்தேவைகளை அடிப்படையாக வைத்து மாறுகிறது. அதுவே உண்மை.

தெளிவில்லாமையிலிருந்து தெளிவான நோக்கம் அறியாமல், மனித உறவுகள் நீடிக்காது

எந்த ஒரு பழைய அரசாட்சி கதைகள் படித்தாலும், சினிமா பார்த்தாலும், அதில் பல பல உணர்வுகள் அடிப்படையாக மனிதனை இயக்கம். காதல், காமம், கோபம், இப்படி பல.

இதில் எல்லாவற்றுக்கும் நாயகனாக நாயகியாக இயங்கும் உணர்வு 1) பழி வாங்கல். 2) தான் நம்புவதே சரி என்று மற்றவர்களிடம் திணிப்பது.

முதல் நாயகன் “பழி வாங்கல்” இல்லாமல் பொன்னியின் செல்வன் போன்ற நூல்கள் எழுதியும் பலன் இருக்காது.

இரண்டாவது நாயகனை “தான் நம்புவதே சரி” பயன் படுத்தி, மற்றவர்களை கொடுமை படுத்தி மதம் மாற்றினார்கள். மறுத்தவர்களை கொன்றார்கள்.

முதல் நாயகன் இன்றும் உயிருடன் இருப்பதால்தான், தமிழ் சீரியல் இருக்கிறது.

மீண்டும் மீண்டும் நிறைய வரும்..நிறைய ஆராய்வோம்…

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

இன்னும் வரும் ..

இவர் சரி, தவறு, என்ற தீர்மானிப்புக்கு மேலே பகுதி:-

ஒன்று

இரண்டு

மூன்று