You are currently viewing நாணயஸ்தம் என்றால் என்ன 2?
தர்மம், தானம், கொடை

நாணயஸ்தம் என்றால் என்ன 2?

நாணயஸ்தம் என்றால் என்ன 2? LKG முதல் PHD வரை புரிதல் பற்றிய ஒரு கண்ணோட்டம்

நாணயஸ்தம் என்றால் என்ன 2? ஆராய்வோம்.

இதில் கொடுத்தல் என்றால் என்ன? கொடுப்பது ஒரு கலை என்கின்றனரே, ஏன்? ஆராய்வோம்.

கர்ணனின் வள்ளல் குணம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம். மஹாபாரத வில்லன் குழுவில் இருந்த யாரையும், நடத்தையில் தரக்குறைவாக, எந்த இதிகாசமும் பேச வில்லையே, ஏன்?

நாணயஸ்தம் என்றால் என்ன 2 ல் மன ஒழுங்கு இல்லாமையால், சுய நலத்துடன், தனக்கு சாதகமான, பொருத்தமான ஞாயம் உருவாக்கிக்கொல்கிறான் என்பதை பார்ப்போம்.

குழந்தைகள் மனம் & மன ஒழுங்கு-நாணயஸ்தம் என்றால் என்ன 2? ஆராய்வோம்.

பழங்காலங்களில் மனதை ஒழுக்கப்படுத்த, குருகுலம். இன்று பள்ளிக்கூடம். பள்ளிக்கூடம் கல்வி கொடுப்பது ஒரு பக்கம் உண்மை. மறுபக்க உண்மை என்ன என்றால் கல்வி அல்லது குருகுலம் மன ஒழுக்கத்தை கொடுக்கிறது. மன ஒருநிலை தருகிறது.

So..

யோகாவில், உடல் பயிற்சியை விட இந்த ஒருநிலைக்குத்தான் முக்கியத்துவம் உண்டு. யோகாவின் குறிக்கோள் உடலை திறமையாக வளைப்பது இல்லை. மனதை திறமையாக வலைப்பதுவே.

Additionaly..

மன ஒழுங்கு போதிய அளவு இல்லாவிட்டால், சமுதாயமாக வாழ இயலாது. மிருகங்களுக்கு குருகுலம் & பள்ளிக்கூடம் தேவையில்லை.

நாய்கள் போன்ற மிருகங்கள், இன்று ஒரு பெண் நாயுடனும், நாளை இன்னொரு பெண் நாயுடனும் இன விருத்திக்கு தேவையான செயலில் ஈடுபடும்.

குழந்தை மனம் பக்குவப்படாததால், இதை வாங்கு அதை வாங்கு என்று அடம் பிடிக்கிறது.
குருகுலம் அல்லது பள்ளிக்கூடம், யோகாசாலை போன்ற இயக்கங்கள், மனதை பக்குவப்படுத்துவதால், மனிதன் திருமணம், திருடாமை, மோசம் செய்யாமை, அடுத்தவன் மனைவியை/பணத்தை அபகரிக்காமை போன்ற ஒரு ஒழுங்கு வாழ்வை கடை பிடிக்கிறான்.

Thus..

தனது பிள்ளை திருமணம் முன் உறவு வைத்துக்கொண்டால், அது தரமற்ற செயல் என்று சமுதாயத்தில் கருதப்படுகிறது. அதே செயலை, திருமண இரவில், தனது பிள்ளைகளுக்கு அலங்காரத்துடன் முதலிரவு அறைக்கு அனுப்புகின்றனர். இது தரமான குடும்பமாக சமுதாயம் கருதுகிறது.

மேற் சொன்ன இரண்டு உதாரணத்துக்கு இடையில் ஏகப்பட்ட விஷயம் இருக்கிறது. அதில் ஒன்றிரண்டு சொன்னால், கற்பழிப்பு, மனைவியை கொடுமை என்றெல்லாம் இருக்கிறது.

தரம் vs தரமற்ற செயல்.

தரமான செயல், தரமற்ற செயல் என்பது, ஆண் பெண் உறவில் மட்டும் அடங்க வில்லை. இந்த உதாரணங்கள், எளிமையாக புரியும் என்பதற்காக சொல்லப்பட்டது.

ஆண், பெண் உறவை தாண்டி லட்சக்கணக்கில் விஷயம் உள்ளது.

மீண்டும் கர்ணன்-நாணயஸ்தம் என்றால் என்ன 2? ஆராய்வோம்.

நாம் அனைவரும் கர்ணணை போலும், வள்ளல் பாரி போலவும் வாழ்வது சாத்தியம் இல்லைதான்.

மஹாபாரத வில்லன் குழுவில் இருந்த, பீஷ்மர், துரியோதனன், துரோணாச்சார்யா, போன்ற அனைவரையும் மிக உயர்த்தி பேசப்படுகிறது.

கர்ணணை உதாரணம் எடுத்தால், நன்றி மறக்காத தரமும், தர்மம் செய்யும் குணமும் அவன் வாழ்வை வழிநடத்தியது, மிக தரம் வாய்ந்த கொள்கையில் வாழ்ந்தவன்.

தரம் அற்ற செயல் என்பது எது?

வாங்கின கடனை கொடுக்க முடியாமல் போனால், அதற்கு என்று ஒரு நாகரீக மனோநிலை இருக்கிறதா? அதற்கு தேவையான மனோபக்குவம் என்ன?

வார்த்தையில் விவரிக்கும் திறமை எனக்கு இல்லை.

கடன் கேட்க வந்து விட்டான்…போன்ற பல பல நன்றியற்ற வார்த்தைகளை நிறைய கேட்டு இருக்கிறேன் அல்லது நினைப்புகளை பார்த்து உணர்ந்து இருக்கிறேன்.

ஒரே செயலை, சாந்தி முகூர்த்தம் என்று ஒரு புனிதமான வார்த்தையை பயன் படுத்துகிறோம்.

அதே அடிப்படை செயலை, கற்பழிப்பு, கள்ளக்காதல், கள்ள உறவு என்றெல்லாம் அமங்களமான செயல்களுக்கு பெயர் வைத்து இருக்கிறோம்.

கொடுக்கல், வாங்களுக்கு இது போன்ற வார்த்தைகள் இருக்கிறதா என்று தெரியவில்லை.

சிலர் அதிகார ஆக்ரமிப்பு

சிலர் அதிகார ஆக்ரமிப்பு, பறித்துக் கொள்ளுதல், இப்படி சில வார்த்தைகள் பயன் படுத்துவார்கள். ஆக்ரப்பான ஞாயம் என்றால் ஒரு உதாரணம். பண்டைய காலங்களில், பெண்கள், கணவன் இறந்ததும், உடன் கட்டை எற வேண்டும், என்பது ஒரு ஆண் வர்க்க ஆக்கிரமிப்பு, ஞாயப் படுத்தி, அதை சட்டமாகவும் கொண்டு வந்தனர்.

எனக்கு தெரிந்து, மதுரை நகை வியாபார சந்தையில், பணம் வாங்கும் வரை ஒரு வகை பணிவான பேச்சுக்கள் நிறைய கேள்வி பட்டதுண்டு. எங்கள் மலேஷியா வியாபாரிகள் நிறைய அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

பிறகு, பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில், அவர்கள் ஞாயம் வித வித மாக விவரிக்கப்படும். இதை தான் ஆக்கிரமிப்பு ஞாயம் என்று நான் பெயரிட்டுள்ளேன்.

என்னை நம்புங்கள், எதுவும் எழுதி தருவது இல்லை. அதற்கு, ஈரட்டில், வியாபாரம் செய்வதால் நடை முறைக்கு ஒத்து வராது என்பார்கள்.

மலேசியாவில், வியாபாரிகள், ஒரு வேலை வட்டிக்கு பணம் வாங்கினால், வாங்கின தொகைக்கு காசோலையில், ஒரு தவணை போட்டு எழுதி கொடுக்கும் வழக்கம் உண்டு.

எங்கள் தொழிலில், வரவு செலவு, அல்லது சரக்கு கொடுக்கல் வாங்கல் செய்வதை, எனது எண்ணம் என்ன? மலேசியாவில், சில தரமான வியாபாரிகளிடம் எங்கள் நடவடிக்கைகளும் அவர்களின் நடவடிக்கைகளும் மிக மங்களமான செயலாக உணர முடிகிறது.

எப்படி சாந்தி முகூர்த்தம் என்று மங்களமான வார்த்தை உள்ளதோ, அதுக்கு ஈடாக, கொடுக்கல் வாங்கல் வார்த்தை தெரியவில்லை.

வாங்கிய பொருளுக்கோ, பணத்துக்கோ, திரும்ப கொடுப்பதில் என்ன உணர்வுடன் செயல் படுகிறோம் என்பதே நமது வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கிறது.

நம்மால் முடிந்ததை தர்மம் செய்வதாக இருந்தாலும், என்ன உணர்வில் கொடுக்கிறோம் என்பது ஒரு முக்கிய காரணி. எதற்கு? அந்த காரணி நமது தரத்தை நிர்ணயிக்கும்.

—–

எனது தந்தை சொல்வார், “அவனிடம் பொருள் வாங்கினால் விற்காதுடா. அவன் எரிந்து, நொந்து, நமக்கு கூட லாபம் கிடைத்து விடுமோ என்றெல்லாம் நினைத்து நொந்து, எரிந்து கொடுப்பான். அந்த வியாபாரம் விளங்காது என்பார்.”

பாக்கியராஜ் ஒரு படத்தில், சின்ன வீடு என்று நினைக்கிறேன். மனைவியிடம் எப்படி என்ன எண்ணத்தில் அணுகவேண்டும் என்று போதனை செய்வார்.

ஒவ்வொரு செயலிலும், வியாபாரம், தர்மம் செய்தல், கொடுக்கல் வாங்கல், கோவிலுக்கு சேவை செய்தல், இப்படி ஒவ்வொரு செயலிலும், என்ன உணர்வில் இருக்கிறோம் என்பதே முக்கியம்.

ஒரு நாளைக்கு 1440 நிமிடம் இருக்கிறது. ஒரு வருடம் 525600 நிமிடம் இருக்கிறது.

60 வருடம் வாழ்ந்தால், 31,536,000 நிமிடம் வாழ்கிறோம்.

என்ன உணர்வுகளில் அதிக % வாழ்கிறோம்?

கொடுத்தவன் பணம் கேட்கறான், என் மனைவி, உறவினர், சகோதர சகோதரி, என் சொல் பேச்சை கேட்கவில்லை, அன்று என் சகோதரி இன்ன மாதிரி நடந்து கொண்டாள் அல்லது இன்ன வார்த்தை சொல்லிவிட்டாள் போன்ற கோப உணர்வு ஆக்ரமித்து.

அந்த கோப உணர்வின் விளைவால், வீட்டு விசேஷத்துக்கு அழைப்பு கொடுக்க வந்தவளை இழுத்து போட்டு அடிப்பது, போன்ற செயல்கள் செய்ய வைக்கிறது.

கோபம், பேராசை, வெறுப்பு போன்ற நெகடிவ் உணர்வுகளால் அதிக நிமிடங்கள் வாழ்நாளை ஓட்டுபவர்கள், வாழ்வில் வெற்றியும் நிம்மதியும் கிடைப்பதில்லை.

சரி நமக்கு போதிய வழிகாட்டல் இல்லை அல்லது நமது கர்ம வினை படி அமையவில்லை என்று ஆன்மிகம் சென்று அதே நெகடிவ் உணர்வுகள் ஆக்கிரமித்தால், எங்கோ தவறு நடக்கிறது என்பது உர்ஜிதம்.

எத்தனை % தனது வாழும் நிமிடங்களை
அன்பு,
பக்தி,
தன்னலமற்ற சேவை,

போன்ற உணர்வுகள் ஆக்கிரமித்தது என்பதே நமது வாழ்வின் வெற்றியை நிர்ணயிக்கும்.

கனகாம்பரம் செடிகள்

எனது செலவில் மண் வாங்கி, சில கன்றுகளை வளர்த்து கோவிலுக்கும், சில நண்பர்களுக்கும் கொடுக்கிறேன்.
கடவுள் புண்ணியத்தில், எனது செலவு, எனது உழைப்பு என்று அஹங்காரம் இல்லாமல் கொடுக்கும் தரமான எண்ணம், கொடுக்கும் கடவுளுக்கு நன்றி கூறி வருகிறேன்.

வியாபாரிகள் பெரும் பெரும் நன்கொடை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொடுக்கின்றனர். அந்த வியாபாரிகளுக்கு, அத்தனை பணம் அல்லி கொடுக்கும் மனம் இருப்பதும், சந்தோஷத்தை தருகிறது.

ஆனால், என்னால் முடிந்த கனகாம்பரமும், வில்வ செடியும், சரியான மனோ பக்குவத்தில் கொடுக்கிறேன் என்பது எனக்கு மிகப்பெருமையாக உள்ளது.

இது போன்ற மனப்பக்குவம் வர குருகுலம், புத்தகம் படித்தல், யோகா சாதனைகள், தரமான வியாபாரிகளுடன் பழகுதல், போன்ற செயல்பாடுகள் – சரியான மன ஒழுங்கை தருகிறது என்பது குறிப்பிட தக்கது.

கர்ணனை போல் நட என்றும், தரமான வியாபாரியை போல் நினை, அப்படி நினை, இப்படி நினை என்றெல்லாம் நமது மனதுக்கு நேரடி உத்தரவு கண்டிப்பாக போட முடியாது. யோகா போன்ற மறைமுக செயல்களில் தான், பின் வாசல் வழிதான் மனதை பக்குவத்துக்கு கொண்டு வர இயலும்.

போசிடிவ் வைப்ரஷன்

கடவுளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மேல மருங்கூர் கோவில் பக்கமே போகாத நான், இன்று கோவில் கட்ட ஒரு காரணியாக இருந்தது, ஒன்று.

நான் சிறிது கொடுத்து இருந்தாலும்,

  1. என்னை நம்பி மற்றவர்கள் கொடுத்தது ஒன்று.
  2. என்னால் முடிந்ததை – நேரம் நிறைய செலவு செய்து,
  3. கோவிலை பேஸ் புக் மூலம் புகழ் பெற வைக்கிறது,
  4. சரியான சந்தோஷ மனபக்குவதில் செய்வது இன்னொன்று.

ஏன் எனில் நொந்து கொண்டு செய்வது, எந்த நல்ல பலனும் வராது அல்லவா? போசிடிவ் வைப்ரஷன் இல்லாமல் பொய் விடும்.

நாணயஸ்தம் என்றால் என்ன 1? LKG முதல் PHD வரை புரிதல் பற்றிய ஒரு கண்ணோட்டம்

தலைமைத்துவம் & என்னை மதிக்கவேண்டும் வாய்ப்பும் நேரமும் இருந்தால் விரிவாக விரைவில் ஆழ்ந்து ஆராய்வோம்.