விழிப்புணர்வின் அவசியம் என்ன 2?

விழிப்புணர்வின் அவசியம் என்ன 2 ல் முக்கியமாக தம்பி MKG சண்முகத்துக்கு எழுதியது.

விழிப்புணர்வின் அவசியம் என்ன 2 ல் நான் விவாதிக்கப்போவது நானும் தம்பி MKGS உடன் 3 7 2022ல் இரவில் கைத்தொலைபேசியில் பேசிய விபரங்கள் பற்றியது.

நான் தம்பிக்கு போன் செய்து, கேட்டது கீழ் கண்ட விஷயங்கள் பற்றி:

1) பேஸ் புக் குரூப் திறந்த அவசியம் என்ன? அதன் நோக்கம் ஒன்றும் இல்லையே! அதில் என்னை இணைத்த நோக்கம் என்ன?

2) உன் குடும்ப உறுப்பினர் நான் உன்னை மேல மருங்கூரில் பாலக்ரிஷ்ணனுடன் சேர்ந்து இடம் வாங்க தூண்டுவதாக,குறை சொல்கின்றதாக, மலேசியாவில் தகவல் கிடைக்கிறது. தம்பிக்கு உடல் நலம் இல்லை என்பதால், அவர்கள் நினைப்பது மிகவும் சரி. ஆனால், நான் தூண்டவில்லை, தம்பிதான், கீறுகுடி கோவிலுக்கு சுவர் எனது தலைமைத்துவத்தில் கட்டி, சுவரில் பெயர் போட என்னை தூண்டியது. மேலமருங்கூரில் கூட, எனது தலைமையில் இடம் வாங்கி நமது தாய் பிள்ளைகள் போனால் வந்தால் தங்க ஏற்பாடு செய்யலாம் என்று சொன்னது. அதை தெளிவு படுத்தினேன்.

நான் சொல்ல வரும் விஷயம் ஒரு சம்பாஷணையாக இருக்கட்டும், ஒரு வர்த்தக கூட்டமாக இருக்கட்டும், கோவில் கமிட்டீ கூட்டமாக இருக்கட்டும். நாம் இதில் உள்ள மையப்பகுதி எது என்று நமக்கு அடையாளம் தெரிவது இல்லை. அல்லது நமக்கோ அல்லது இன்னொரு உறுப்பினருக்கு தெரிந்தாலும், அனைவரும் தெரிந்தாலே தவிர எதையும் ஒருங்கிணைத்து வலி நடத்த முடியும். ஒற்றுமையாக ஒரு குறிக்கோளை நோக்கி செல்ல இயலும். நாம் மற்றவர்களை திருப்தி படுத்தும் அலுவலில் போதிய விழிப்புணர்வு இல்லாமல் சிக்கிக்கொள்கிறோம்.

மேற்கண்ட விஷயங்களுக்கும், விழிப்புணர்வுக்கு என்ன சம்பந்தம்? இங்கே விழிப்புணர்வின் அவசியம் என்ன?

1) பேஸ் புக் குரூப் திறந்த அவசியம் என்ன?

இதற்க்கு நீ சொல்ல வேண்டிய பதில்

a ) இதில் தலைப்பு போட மறந்து விட்டேன். இதன் தலைப்பு அல்லது நோக்கம் இதுதான் என்று விளக்கி இருக்கலாம். நீங்கள் இதில் இருங்கள். அவசியம்.

b ) கை தவறி தெரியாமல் திறக்கப்பட்டு விட்டது. அதை டிலீட் செய்து விட ஏற்பாடு செய்கிறேன்.

ஆனால் இந்த விஷயத்தை சுமார் 15 நிமிடம் பேசினோம். ஒன்றும் இல்லாத விஷயம் அது. இதில் நாம் விழிப்புணர்வு பெற வேண்டியது நமது கம்யூனிகேஷன் திறன் பற்றி.

3 நிமிடத்தில் செட்டில் பண்ணும் விஷயத்தை அவசியம் இல்லாமல் 15 நிமிடம் பேசியுள்ளோம். 

2) உன் குடும்ப உறுப்பினர் நான் உன்னை மேல மருங்கூரில் பாலக்ரிஷ்ணனுடன் சேர்ந்து இடம் வாங்க தூண்டுவதாக,குறை சொல்கின்றதாக, மலேசியாவில் தகவல் கிடைக்கிறது.

உனக்கு உடல் நலக்குறைவு என்பதால், இந்த கருத்தை வரவேற்கிறேன். உன் மேல் அக்கறை உள்ளவர்கள் அப்படிதான் சொல்வார்கள்.

உண்மையில் நான் தூண்ட வில்லை என்பது மட்டும் உண்மை. தம்பிதான் மேல மருங்கூரில் நமது தாய் பிள்ளைகள் தங்க எனது தலைமையில் செய்ய அனுமதி கேட்டது. கீறுகுடி கோவில் சுற்றி சுவர் கட்டி, நமது பெயர் போட என் தலைமையில் கட்ட அனுமதி கேட்டது.

நான் தூண்ட வில்லை என்பதை தம்பி குடும்ப உறுப்பினர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

இந்த 2 வது தலைப்பு  (2 உன் குடும்ப உறுப்பினர் நான் உன்னை மேல மருங்கூரில் பாலக்ரிஷ்ணனுடன் சேர்ந்து இடம் வாங்க தூண்டுவதாக,குறை சொல்கின்றதாக, மலேசியாவில் தகவல் கிடைக்கிறது.)பேச தொடங்கி, இந்த தலைப்பு கீழ் கண்ட குட்டிகள் போட்டது. உப தலைப்பாகி விட்டது.

செய்யும் செயலில் உண்மையும் நேர்மையும்

மிரட்டல் வந்தது-நான் மிரட்டினேன் என்ற பழி சுமத்தப்பட்டது.

மிரட்டல் வந்தது உண்மை. நான் கூட உனது குரல் மிமிகிரி செய்து மிரட்டி இருக்கலாம். என்னை காப்பாற்றிக்கொள்ள நான் உன் குரலை மிமிக்ரி செய்தது, உனது மேல் சந்தேகம் வந்து இருக்கலாம்.

மிரட்டலை பெற்றவர் கண்டிப்பாக சந்தேகப்பட உரிமை உள்ளது. அந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்களை வைத்து சந்தேகப்படத்தான் செய்வார்கள்.

சிறிய குடம்தான் கும்பாபிஷேகத்தில் வந்தது.

இது கோவில் கமிட்டீ கையாள வேண்டிய விஷயம்.

கோவில் கமிட்டீ உறுப்பினர்கள் மட்டுமே கோவில் பாக்கி கேட்கலாம்.

இதில்  தம்பியின் சர்வ சுதந்திர கருத்தை/உல் நோக்கத்தை பொறுத்தது.

நான் விவாதிக்க விரும்பியது இரண்டு விஷயம:

1) பேஸ் புக் குரூப்பில் இணைத்த காரணம்
2) மேலமருங்கூரில் பாலக்ரிஷ்ணனுடன் சேர்ந்து இடம் வாங்கி கோவில் கட்ட நான் தூண்ட வில்லை

இதன் பலனாக இன்னும் பல குட்டிதலைப்புகள் பிறந்தது:

என் சகலை தம்பி இடம் பேசியதில் நீ தொடர்பாகியது

அதில் வந்த ஒரு பெண் புரோக்கர், எங்கள் சொத்து சம்பந்தப்பட்டு, போலீஸ் வரை சென்றது.

பெரியப்பா/அண்ணன் சொத்து விலை குறைத்து பேசினால், நீ ஏன் என்று கேட்பாய்….அதாவது, அப்பா சம்பாதித்த சொத்து, எனக்கு சம்பாதித்து இருந்து இருந்தாலும், எனக்கே சொந்தமானாலும் விலை குறைவு என்றால் தம்பி ஏன் என்று கேட்பார்…

அந்த சொத்தை செட்டியாரிடம் விற்க வேண்டாம் என்று நான் சொன்னேன் என்று அத்தான் சொன்னது…

சொத்து MKP குடும்பத்தை விட்டு வெளியேற கூடாது என்று நீ ஒத்திக்கு நுழைய விரும்பியது…

***********
முதலில் இரண்டு விஷயம் கேட்டு தெளிவு படுத்த நான் போன் போட்டு, சுமார் ஒரு மணி நேரம் பேசியதில், என்ன தெளிவு கிடைத்து விட்டது என்பது எனக்கு புரியவில்லை.

சொத்து உரிமையாளர் நானும் தம்பியும். அதை ஏன் விற்க வேண்டும் அல்லது விற்க கூடாது என்று நாங்கள் இருவரும் எடுக்க வேண்டிய முடிவு.

தேவைக்கு மீறி என்னை பொறுத்த வரை, தகவல்கள் தெரிந்துகொள்ள விரும்ப மாட்டேன்.

************************
உதாரணம் 1:-

எனது தொழில் குரு ஒருவருக்கு, எனக்கு தெரிந்த வாகன உதிரி பாகங்களின் நுட்பங்கள் அவருக்கு தெரியாது. வாகன உதிரிபாக பட்டி மன்றம் வைத்தால் நான் ஜெயிப்பது உறுதி.

ஆனால், வாகன உதிரி பாக வர்த்தகத்தில், பொருளாதார ரீதியாக, சாதித்தது எனது குரு , நான் அல்ல. அவருக்கு, வர்த்தகம் செய்யும் நோக்கம், தெளிவாக இருக்கிறது.

நான் அவசியம் இல்லாத நிறைய விஷயங்கள் தெரிந்தும், சாதிக்க முடியவில்லை.

உதாரணம் 2:-

கோவில் கட்ட, எதை தெரிய வேண்டுமோ அதை மட்டும் தெரிந்தால் போதும். கமிட்டீ அமைப்பது, ஸ்தபதி, நன்கொடை தரும் வியாபாரிகள் மற்றும் நண்பர்கள், போன்றவைகள் மட்டும் தெரிந்தால் போதும்.

மேலமருங்கூரில், யாரையும் உறவு சொல்லி கூப்பிடும் அளவுக்கு யாரையும் தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனது குரு வழி தான் சரியானது என்று இன்று உணர்கிறேன்.

*********************************
என்ன சொல்ல வருகிறேன்?

ஏன் தமிழ் நாட்டு கலாச்சாரத்தில், ஏகப்பட்ட தனக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்கப்படுகிறது?

எனக்கு புலப்படவில்லை என்றாலும், புரிந்து கொள்ள எந்த முயற்சியும் உறுதியாக செய்ய மாட்டேன். விரும்பவில்லை.

இவர் இப்படி நினைத்து, உங்களை அப்படி நினைக்க விடாமல் இருக்க இப்படி அந்த அம்மா சொன்னது..

ஏன் காலத்தை இவர்/அவர் “இவரை/அவரை பற்றி இப்படி நினைத்து விடுவாரோ?” என்ற எண்ணத்தில் கால விரயம் செய்ய வேண்டும்?

உதாரணம் தம்பி மேலமருங்கூரில்
நிலம் வாங்கி, இன்னும் ஒரு கோவில் கட்டினால்..
நிலம் வாங்கி வீடு காட்டினால் ..
அவர் குடும்ப பெயர்களை கல் வெட்டில் போட்டுக்கொண்டால்…

நான் பொறாமை கொள்வேன், வகுத்தெறிவேன் என்று வைத்துக்கொள்வோம்.
நான் சர்வ சுதந்திரமாக பொறாமை பட்டுவிட்டு போறேனே …வகுத்தை எரிந்து போறேனே.. யாருக்கு என்ன நஷ்டம்?

அரப்பூர் காமாக்ஷி அம்மன் கோவிலில், மேலமருங்கூர் செல்ல தோன்றியது. அதன் பலன் சுமார் 50 லட்ச ரூபாயில் கோவில் அமைந்தது.

என்னை தவிர்த்து, வேறு யாருக்கும் கோவிலோ, எதோ ஒரு அறமோ செய்ய தோன்ற விடமாட்டேன், என்று அரப்பூர் அம்மன் எனக்கு ஒப்பந்தம் செய்து கொடுக்க வில்லை.

அதன் அர்த்தம், சர்வ சுதந்திரமான உலகில், யார் வேண்டுமானாலும் இடம் வாங்கலாம், கோவில் கட்டலாம், ஆறம் செய்யலாம், அன்னதானம் செய்யலாம்.

ஒரு உதாரணம் எடுத்துக்கொள்வோம்.

என்னை தவிர்த்து, மேலமருங்கூரில், கமிட்டீ அமைப்பது முக்கியம் என்ற கருத்தே கிடையாது. மேல மருங்கூரில் நான் பிறந்து இருந்தாலும், அங்கு எனக்கு நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை.

கோவில் கட்ட கமிட்டீ அவசியம் என்று பார்த்திபன் உட்பட யாரும் என் கருத்தை ஏற்கவில்லை. அதைப்பற்றிய எனக்கு கவலையும் இல்லை. கமிட்டீ வேண்டும், இதில் தெளிவாக இருந்தேன்.

அக்கிராமத்தில், இவர் இதை நினைத்தார், அதை நினைத்தார். சிறு கிராமத்துக்கு கமிட்டீ தேவை இல்லை என்று இவர் சொன்னார், அவர் சொன்னார் போன்ற பேச்சுக்கள் வந்தது.

கோவில் கட்டுவது, கிராமத்து பெரியவர்களையும் , சிரியவர்களையும் வெளிநாட்டு மக்களிடம் பணம் வசூல் செய்து திருப்தி படுத்த அல்ல. அதில் தெளிவாக இருந்தேன்.

தம்பி கூட எனக்கு இவரை தெரியும், அவரை தெரியும் என்று அந்த நேரத்தில் பரிந்துரைத்தது. ஆனால், கமிட்டீ அமைப்பின் நோக்கத்துக்கு அவைகள் உதவவில்லை.

இன்று கமிட்டீ, இல்லாவிட்டால், கோவில் 36 ஆண்டுக்கு முன் நடந்தது போல் இன்றும் செயல் இல்லாமல் போய் இருக்கும்.

என்ன சொல்ல வருகிறேன்?

நீங்கள், என்னை பற்றி இப்படி நினைத்து விடுவீர்கள் என்று அந்த அம்மா அப்படி சொல்லி உங்கள் நினைப்பை திசை திருப்பி விட்டது.

நீங்கள் என்னை நல்லவனாக நினைத்து விடக்கூடாது. நீங்கள் அவரை நல்லவன் என்று நினைத்து விட்டிர்கள். உங்கள் நினைப்பில் தப்பு.

இது போன்று மற்றவரின் எண்ணங்களை நாம் எதற்காக மாற்றி கால விரயம் செய்ய வேண்டும்?

பெரிய நிறுவனங்கள், எனது பொருள் சிறந்தது என்று கோடி கணக்கில் செலவு செய்து விளம்பரம் செய்கிறது.

இந்த அறம் செய்ய, இந்த காரியம் செய்ய, நமக்கு சர்வ சுதந்திரம் உள்ளது. யாரின் ஒப்புதலும் அவசியம் தேவை இல்லை.

எனது தொழில் சார்ந்த முடிவுகளுக்கு, தொழில் தாண்டி யாரின் ஒப்புதலும் தேவை இல்லை.

எனது குடும்பம் சார்ந்த முடிவுகளுக்கு, எனது குடும்பத்தை தாண்டியவர்கள் ஒப்புதல் தேவை இல்லை.

சர்வ சுதந்திரமான உலகில், மற்றவரின் எண்ணங்களை நாம் கண்காணித்து, அவர்களின் திருப்திக்கு தக்க நமது செயலை மாற்ற தேவை இல்லை. உதாரணம், கமிட்டீ தேவை இல்லை என்று 90% நினைக்கிறார்கள் என்று எனது செயலை மற்ற தேவையில்லை.

இன்னொரு வாய்ப்பு கோவில் காட்டும் சந்தர்ப்பம் கிடைத்தால், கமிட்டீ முதலில் அமைப்பேன். அப்படி முடியாவிட்டால், கோவில் கட்டுவதை கை விட்டுவிடுவேன்.