You are currently viewing chettiar.com க்கு ஒரு தீர்மானம் தேவை
chettiar.com க்கு ஒரு தீர்மானம்

chettiar.com க்கு ஒரு தீர்மானம் தேவை

chettiar.com க்கு ஒரு தீர்மானம் தேவை….

ஆக, chettiar.com க்கு ஒரு தீர்மானம் தேவை

chettiar.com வேண்டும் அல்லது வேண்டாம் எனும் தீர்மானத்துக்கு வர ஆயிர வைசிய சமுதாயத்துக்கு ஒரு அழைப்பு

உண்மையில் இது எனது ஐடியா இல்லை. இது திரு கணேசன் (கணேசன் கந்தன்) அவர்களின் ஐடியா.

So..

சென்ற வருடம் பினாங்கு மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் சொன்னார். நல்ல திட்டம் ஆனால் அதன் முக்கியம் என்ன என்று தெரியாததால், அதன் அவசியத்தை உணராததால், அதற்க்கு வரவேற்பு இருந்தாலும் செய்ய யாரும் முன் வர மறுக்கின்றனர் என்று கருதுகிறேன்.

வேணுமா? வேண்டாமா? ஒரு உதாரணம்.

நான் ஓரூ 10, 15 வலுவான வியாபாரிகளை அழைத்து, பினாங்கு மீனாட்சி அம்மன் கோவிலில் இன்னும் ஒரு சன்னிதானம் கட்ட வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்தால்? கமிட்டி இதற்க்கு பதில் சொல்ல தேவை இல்லை. உள்ள நிர்வாக வேளைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு சின்ன குழந்தை கூட வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்து விடும்.

Thus..

ஆனால் “செட்டியார் . காம் அவசியம் இல்லையே? ” என்று கேட்டாள் பெரியவர்கள் நல்ல விஷயம், திட்டம் என்கின்றனர். வேண்டாம் என்று ஆணித்தரமாக கூற மறுக்கின்றனர்.

இது பற்றி ஸ்ரீதர் அவர்களிடமும் (ராமலிங்கம் மெட்டல்) விவாதித்தேன், அவரும் ஆணித்தரமாக வேண்டாம் என்று சொல்ல மறுக்கின்றார்.

இதனால் இந்த முயற்சியை முழுமையாக கைவிட முடியாத ஒரு சூழ்நிலை.

Additionally…

@@@@@@@@@@@@@@@@@@@@

Psychology – மனோவியல்

கணேசனை பொறுத்த வரை ஆதரவு இல்லை என்ற ஒரு நினைப்பு. ஸ்ரீதரை பொறுத்தவரை, கோவிலுக்கு சேவை செய்ய ஆள் பற்றவில்லை. பினாங்கு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஆயிர வைசிய சமுதாய மக்கள் வர நேரம் இல்லாமல் நேரம் இல்லை என்று இருக்கின்றனர் என்ற ஒரு நினைப்பு.

So…

இவர்கள் இருவரும் இன்னும் சமூக சேவை சுமையை கூட்ட வேண்டுமா? என்றும் யோசிக்க வாய்ப்பு இருக்கிறது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குறைவான பங்களிப்பு போட்டு நிர்வகிக்க

வேலை சுமைகளை கூட்டுமா? ஆயிர வைசியர் சமுதாயம் குறைவான பங்களிப்பு போட்டு நிர்வகிக்க இயலுமா? இப்படி யோசிக்கும் முன்:

முதலில் செட்டியார்.காம் உருவாக்குவதில் என்ன பலன்? வேண்டும் அல்லது வேண்டாம் என்று தீர்மானிக்கும் முன் கணக்கில் எடுக்க வேண்டிய விபரங்கள்.

 • நான் புரிந்தது, கணேசனின் உள் நோக்கம்: ஆயிர வைசிய சமுதாயத்தில் ஒரு குடும்பம் ஏதும் முகூர்த்த வைபவம் செய்ய முடிவு எடுத்து விட்டால், அந்த குடும்ப தலைவர் செட்டியார்.காமில் பதிவு செய்தால், அடுத்த ஒரு குடும்பம் பரிசீலித்து மற்றொரு தேதியை முகூர்த்த வைபவத்தை முடிவு செய்ய ஒரு வழி.  அதாவது, இரண்டு குடும்பமும் ஒரே தேதியில் முகூர்த்தம் வைபவம் வைக்காமல் இருக்க உதவும்.மலேசியாவில் குறைவான ஆயிர வைசிய மக்கள் இருப்பதால், மறு பரிசீலனை செய்ய உதவும்.  
 • ஆனால், கணேசன் விருப்பம் போக ,எனது கண்ணோட்டத்தில் செட்டியார்.காம் ஒரு மாப்பிள்ளை பெண் பார்க்க பயன்படுத்திக்கொள்ளலாம்.   (நவீன டெக்னாலஜி வைத்து பல செயல்களை செய்யலாம்)  
 • ஆயிர வைசியர் சமூகத்தில் என்ன செய்கின்றனர், என்று அறிவிக்க பயன் படுத்திக்கொள்ளலாம். உதாரணம், ஈப்போ கல்லு மலை கோவிலில் செட்டியார் . காமுக்கு அக்கறை இல்லை. ஆனால், ஆயிர வைசிய சமூகத்தை சேர்ந்தவர்கள், தைப்பூசம் போன்ற காலங்களில் செய்யும் சேவையை உலகத்துக்கு தெரிவிக்கிலாம்.   
 • டத்தோ போன்ற பதவி பட்டம் பெரும் நிகழ்ச்சிகளை ஒரு செட்டியார் காம் பக்கத்தில், வாழ்த்து தெரிவிக்கலாம். இலவசமாக. இதை அவர் அவர் facebook இல் போட்டு பகிரலாம்.  தனது தொழில் தொடங்குவது, தீபாவளி விருந்து போன்ற நிகழ்ச்சிகளை தெரிவித்து வரவேற்கலாம். அதில் கூட ஒரே தேதியில் பலர் விருந்து வைக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.    
 • செட்டியார் பழைய கலாசார சம்பந்த நூல் கூட பிரசுரிக்கலாம்.
 • துக்க விஷயங்களுக்கு இரங்கல் தெரிவிக்கலாம், இனாமாக.    
 • தனது பிள்ளைகள் படித்து பட்டம் வாங்குவதை கூட தெரிவிக்கலாம்.   
 • இன்னும் நிறைய நிறைய செய்யலாம்

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்

வேண்டாம் என்று ஒரு முடிவுக்கு வந்து விட்டாள், பிறகு எந்த முயற்சிகள் தேவையில்லை.

வேண்டும் என்று முடிவு எடுத்தால், கீழ் கண்ட விஷயங்களை பரிசீலனை செய்ய வேண்டும்:

 • செட்டியார் காம் மலேசியாவுக்கு மட்டுமா? தமிழ் நாடு உட்பட உலக நாடுகளுக்குமா?  
 • மலேஷியா மட்டும் என்றால் ஒரு குடும்பம் மெம்பெர் ஆவதால் அதன் பலனை சந்தை படுத்துவது எப்படி?  
 • இதற்க்கு சட்டபூர்வ தேவைகள் இருக்குமா?  
 • ஒரு குடும்பத்துக்கு ஒரு சந்தாவா? அல்லது ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் ஒரு சந்தா வசூலா?  
 • இன்னும் இது போன்ற பல விஷயங்கள், வேண்டும் என்றால் யோசிக்க தொடருவோம்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

எனக்கும் சில விஷயம் வெப்சைட் உருவாக்குவது பற்றி தெரியும் என்றாலும், அதற்க்கு நேரம் செலவு செய்ய முன் வர சாத்தியம் இல்லை. நமது சமுதாய மக்கள் சந்தா என்று வசூலித்து செய்தால் மட்டுமே தேவையான technician நியமித்து செயல்படுத்த இயலும்.

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்