Right motive part 2 is exploring various unnecessary expectations, which cause frictions, problems, ruin relationship and so on. I write in Tamil, in which I can express my life experience better.
ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியான நோக்கம் என்ன? பகுதி 2
இக்கட்டுரையின் முக்கிய குறிப்பின் சுருக்கம்– சம்மரி (Summary)
Is that of Right Motive of Part 2
தம்பி MKG சண்முகத்திடம் பேசியபோது, பல தகவல் அறிய முடிந்தது.
தம்பியிடம் நான் மேலமருங்கூர் சமாச்சாரமாக சில விளக்கங்கள் கொடுத்தேன்.
to illustrate…..
நான் சூரக்குடியிலோ, வலனையிலோ கோவில் கட்டவில்லை. மேலமருங்கூரில் கோவில் கட்ட ஏற்பாடு செய்த நோக்கம் அப்பா கட்டிய கோவில் என்ற ஒரே காரணம்தான்.
அதனால், MKP ஆ ண் பெண் வாரிசுகள் அப்பாவின் கோவிலை சிறப்பாக வளர்க்க கமிட்டீக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் நோக்கத்துடன் செயல் பட வேண்டியது வாரிசுகளின் கடமை. அதுதான் சரியான மோட்டிவ்.
எனக்கு மரியாதை கொடுக்கவில்லை, உனக்கு மரியாதை கொடுக்கவில்லை, என்றெல்லாம் போட்டி போட்டும், பிரச்னை செய்வது, அழுவது, என்னை திருப்தி படுத்தவில்லை என்பதால், கோவிலை விட்டு விலக போகிறேன் என்பதல்லாம், 36 வருடம் முன் கிராமத்தார் தேங்காய் மூடி, பரிவட்டம் போன்ற முட்டாள்தனமான சண்டைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
அதுவும் MKP வாரிசுகள் இப்படி நடப்பது, அப்பாவையோ, அவர் வேண்டிக்கொண்ட, அவரை உயர்த்திய பிள்ளையாரையும் உதாசீனம் செய்வதாக உல் அர்த்தம் ஆகிறது.
வேறு மாதிரி விளக்கினால், நான் வந்து எனக்கு போதிய மரியாதையும், மதிப்பும் கிராமத்தார் தரவில்லை என்றால், எனக்கு பிள்ளையார் தேவையில்லை என்று பொருள்.
சிவஞானத்திடம் நான் தெரிந்து கொண்டது, அவருக்கு மரியாதை அறவே இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர் கவலை படுவதாக தெரியவில்லை.
அவர் கோவிலின் வளர்ச்சி, சிறப்பு தவிர வேறு எதிலும் அக்கறை இல்லாதவராக இருக்கிறார். இதைத்தான் நான் சரியான, பொருத்தமான, தகுந்த மோட்டிவ் என்கிறேன்.
மருங்கூரில், சம்பந்தம் செய்யவோ, மரியாதை பெறவோ, தனிநபர் சேவை எதிர்பார்ப்போ இல்லாமல், அப்பா கட்டிய கோவில் என்ற ஒரே காரணத்தை தவிர, வேறு எந்த நோக்கமும் இல்லாமல்தான் நான் கட்ட விரும்பினேன். சிவஞானம் என்னை விட ஒரு படி மேலான பரிசுத்தமான நோக்கத்தில் இருக்கிறார்.
இந்த பரிசுத்த நோக்கம் அணைத்து MKP ஆண், பெண் வாரிசுகள், மற்றும் அணைத்து கோவில் கமிட்டீ உறுப்பினர்களிடமும் வளர்ந்தாலே தவிர, கோவில் பாழ் அடைவது நிச்சயம்.
5/6 12 2021ல் வந்த அனைவரும் அழையாமல் வழிய வந்து மரியாதை தந்தார்கள். அது என் வீட்டு விஷேஷம் அல்ல. நான் யாரையும் அழைக்க விரும்பவும் இல்லை. அவசியமும் இல்லை.
மேலமருங்கூர் ஒரு பொது கோவில் என்று, சில மாதங்கள் முன் MKG ஷண்முகம் சொன்னது நினைவு வருகிறது. அதன் அர்த்தம், திருப்பதி, ஸ்ரீரங்கம் போன்ற ஒரு பொது கோவில். அவைகள் பெரிய ஸ்தலங்கள். இது கிராமத்து சிறிய கோவில். அவ்வளவுதான்.
நான் ஸ்ரீரங்கத்தில் யாகம் வளர்த்தாலும், கிராமத்து கோவிலில் யாகம் வளர்த்தாலும், நான் யாருக்கும் ரூம் போடவோ, சேவை செய்யவோ, அழைப்பு விடுக்கவோ கடமை படவில்லை.
தகவல் கூறுவேன். விரும்புபவர்கள், அவரவர் பொறுப்பில் வந்து பங்கேற்கலாம். வராமலும் இருக்கலாம்.
நான் யாருடைய ஈகோ எனப்படும் ஆணவத்துக்கும் பலிக்கடாவாக இருக்க விரும்பவில்லை. இருக்க மறுக்கிறேன்.
இக்கட்டுரையை படிக்கும் முன் அறிய வேண்டியது.
இக்கட்டுரை கற்பனை மற்றும் அனுமானத்தின் எழுதியது. இது உண்மை அல்ல. ஒருவேளை இப்படி நினைத்துஇருந்தால் என்னுடைய நினைப்பு இப்படி இருக்கும் என்ற அனுமானத்தின் எழுதியது. இதில் எதுவும் உண்மை இல்லை. சில உண்மை சம்பவங்களை வைத்து அனுமானத்திலும் கற்பனை கலந்து ஒரு பொழுது போக்காக எழுதியது.
தலையாய நோக்கம், இந்த கலாச்சாரத்தை ஒலித்துக்கட்டுவதுதான்
Additionally…
தனபால் ஐயா சொன்னார். ஒரு காலத்தில், எவராவது செலவு செய்து கோவில் கட்டினாலோ, பூஜை ஏதும் செய்தாலோ, கிராமத்து முக்கிய புள்ளிகளிடம்,வெத்திலை பாக்கு வைத்து அழைக்க வேண்டுமாம்.
So…
என்னுடைய தலையாய நோக்கம், இந்த கலாச்சாரத்தை ஒலித்துக்கட்டுவதுதான். காலப்போக்கில், இந்த உருப்படாத, விளங்காத கலாச்சாரம் இன்று நகரத்திலும் பரவி விட்டது.
But…
கண்டிப்பாக ஒழிக்க வேண்டிய கலாச்சாரம். காரணம், தனது வீட்டு வைபவங்களுக்கு, வெளி நாடுகளில் தொலைபேசியில் அழைத்தால் வந்து, மிக மரியாதையாக நடக்கும் தரமான மனிதர்கள் நிறைய இருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில், தொழிலில் சாதித்தவர்கள்.
So..
இந்தோனேஷியா பழமொழி ஒன்று இருக்கிறது. எண்ணெய் போன்ற பொருள் (விஷயம்) உள்ளே இருந்தால், அந்த தோம்பு சத்தம் வராதாம். காலியாக உள்ள தொம்பின் சத்தம் அபாரமாக இருக்குமாம்.
What is the Right Motive Here? Part 2
கோவில் கட்டிய இன்றய மோட்டிவ் எப்படி இருக்கிறது என்று ஒரு கண்ணோட்டம்.
36 ஆண்டுகளுக்கு முன் ஒரு கோவில் காட்டியவர் நோக்கம் வேறாகவும், அந்த மேல மருங்கூர் முக்கிய புள்ளிகளின் நோக்கமும் வேறாகவும், இருந்ததால், கோவில் பாழடைந்ததுதான் அதன் பலன்.
கோவில் காட்டியவர், தனது கோரிக்கை நிறைவேறியதால், பாமர மக்களும், ஊர் மக்களும் வழிபட கோவில் கட்டினார். ஊர் முக்கிய புள்ளிகள், தனக்குதான் முதல் தேங்காயும், பரிவட்டமும் கொடுக்க கோவில் கட்டினார் என்று தவறான மோட்டிவில் செயல் பட்டதின் காரணத்தால், கோவில் செயலற்று, பாழடைந்த கதை தெரிந்ததே.
கோவில் கட்டிய மோட்டிவ் என்னவாக இருக்கலாம்?
5 12 2021ல் அல்லது 6 12 2021ல் நான் அமர்ந்து ஒரு யாகம் செய்ய நேற்றிக்கடன் எனக்கு இருந்தது.
So..
முதலில், 1 1 2022ல் MKP வாரிசுகளின் யாகமாக இருக்கட்டும் என்று நினைத்தேன். காரணம் கோவிட் 19 காரணமாக இந்தியா வர இயலாது என்ற நோக்கில், அப்படி ஒரு முடிவு செய்தேன்.
Thus..
நவம்பர் மாதத்தில், சற்று மலேசியா அரசாங்கம், பயணம் செய்ய அனுமதித்ததால், திட்டத்தை 5/12 அல்லது 6/12ல் யாகம் செய்ய அனுமதி கேட்டேன்.
In result..
6ம் தேதி எனது செலவில் யாகமும், 5ம் தேதி கோவில் உறுப்பினர்களும், பாமர மக்களும் சேர்ந்து, அவர்கள் செலவில் ஒரு வரவேற்பு மாபெரும் திருவிழா நடத்தினர்.
இதில் யார் யாருக்கு என்ன மோட்டிவ் இருந்தது?
Right Motive Part 2…
So..
பாமர மக்களுக்கு, பண செலவுகள் பற்றி சிந்திக்க தெரியாது. அவர்கள் கோவில் ஏற்படுத்திய தற்காக நன்றி செலுத்துவது/தனது நன்றியை வெளிப்படுத்துவது அவர்கள் மோட்டிவ்.
Additionally..
கமிட்டீ உறுப்பினர்களும், செலவு வந்தாலும் அந்த திருவிழா செய்ய வேண்டும் என்பது இவர்களின் மோட்டிவ்.
Thus..
எனக்கும், எனது துணைவியாரும், அந்த விஷம் கலக்காத , பரிசுத்தமான கிராமத்து மக்களின் அன்பை ஏற்றுக்கொள்ள விரும்பினாலும், இது அனாவசிய தேவையற்ற மோட்டிவ் களை உருவாக்கி விடுமோ என்ற ஒரு கேள்வியும் இருந்தது.
So..
மரியாதை செலுத்தும் சர்வ சுதந்திரம் அவர்களுக்கும், அந்த மரியாதையை பெரும் சர்வ சுதந்திரம் எங்களுக்கு இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
In addition..
தேவையற்ற மோட்டிவ் களுக்கு, நான் நேரம் செலவு செய்யக்கூடாது என்பது எனது முக்கிய மோட்டிவ்.
உதாரணம், சிவஞானம், என்னை பார்த்து, எனக்கு, 2019ல் கட்டிய பரிவட்டத்தை விட,உங்களுக்கு 4 அங்குலம் பெரிய பரிவட்டம் காட்டியது ஏன்? இது போன்ற மோட்டிவ் உருவாகி, அதற்கு பதில் சொல்ல சிந்தித்து, நேரத்தை வீண் செய்ய எனக்கு விருப்பம் இல்லை.
என்ன மோட்டிவ் நமது மனதை ஆக்கிரமிக்க வேண்டும்? Is that of Right Motive of Part 2
Right Motive Part 2….
நான் கோவில் கட்ட ஒரு பெரிய காரணம், ஆகையால் கமிட்டீ உறுப்பினர்களிடம் எனது தேவை அனைத்தையும் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கலாமா?
இது நாகரிகமான செயலா?
இது போன்ற எதிர்பார்ப்புகள் சரியான மோட்டிவ் எனலாமா?
எது கமிட்டீ உறுப்பினர்களின் பொறுப்பு, கடமை என்று அடையாளம் காணுதல்.
Right Motive Part 2…
But..
கோவிலுக்கு சுமார் 50 லட்சம் பலர் முதலீடு செய்துள்ளனர். நான் அல்லது ஒரு தனிநபரின் கோவில் இது கிடையாது. அதை நிர்வகிக்க தான் கமிட்டீ அமைக்கப்பட்டது. கமிட்டீ கோவில் திறந்து விட, பூஜை ஏற்பாடுகள் செய்ய, கமிட்டீயை பயன்படுத்தலாம்.
So..
அவர்கள், அதாவது, கமிட்டீ, தனி நபர்களுக்கு சேவை செய்ய கடமைப்படவில்லையென்பதை தெளிவாக புரிந்து கொள்வது அவசியம்.
Thus..
கமிட்டீ உறுப்பினர்கள் வேலை இல்லாதவர்கள் இல்லை. அவர்களுக்கும் குடும்பம், சம்பாதிக்கும் அவசியம் உள்ளது.
Additionally..
கமிட்டீ உறுப்பினர்கள் அவர்களின் சொந்த நேரத்தையும், சற்று பணத்தையும் செலவு செய்து – கோவிலுக்கு செலவு செய்து நிர்வாகம் செய்கின்றனர்.
Accordingly..
நான் அவர்களை, கோவில் வளர்ச்சிக்கு தேவையான, வேலைகளை செய்யுங்கள் என்று வலியுறுத்தியும், வற்புறுத்தியும் வருகிறேன்.
பழைய கோவில் மாதிரி, பாழடையாமல் இருக்க அவர்களின் சேவை தேவைப்படுகிறது.
So..
சுயமாக முன்வந்து , எதிர்பார்ப்புகள் இல்லாமல் செய்யும் சேவைகள் நிறைய தேவைப்படுகிறது.
நாம் பல கோடி வசூல் செய்து கொடுத்தாலும், கமிட்டீ நிர்வாக செயல் இல்லாவிட்டால், கோவில் வளராது.
Additionally..
அல்லது, நான் கோவிலில் யாகம் செய்வதால், மற்றவர்களிடம் ஒரு தகவலாக நான் யாகம் செய்வது பற்றி கூறினால், வாகனம் மற்றும் ரூம் செலவுகளை நான் ஏற்க வேண்டுமா? உண்மையில் இது ஒரு சரியான மோட்டிவ் தானா?
நான் மலேசியாவிலிருந்து லட்சக்கணக்கில் செலவு செய்து பயணித்து வந்து, செல்வ விநாயகரிடம், எனது வேண்டுதலில் மற்றும் நேற்றிக்கடன் செலுத்துவதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, இவருக்கும் அவருக்கும் தக்க மரியாதை செலுத்தப்படுகிறதா என்பதில் நான் ஏன் அக்கரை காட்ட வேண்டும்?
So..
நான் செலவு செய்து வந்து, எனது பிளான் என்ன என்று கேட்க ஆள் இல்லை. நான் சொல்லும் விசேஷத்தில் என்னை கலக்க சொல்லி வற்புறுத்துவது.
நான் சொல்லும் நேரத்தில் கோவில் சம்பந்த, பூஜைகள் செய் என்று என்னை வலியுறுத்துவது. இதற்கு பெயர் சுயநல கௌரவம் தவிர, என் நலம் கருதி செய்யப்படவில்லை.
இதன் பெயர் அன்பும் இல்லை, எனக்கு நல்லது செய்வது என்ற அர்த்தமும் இல்லை.
இதைத்தான் தவறான மோட்டிவ் என்கிறேன்.
கண்டிப்பாக, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவது முக்கியம் என்றால், நான் எதற்கு செலவு செய்து வர வேண்டும். மலேசியா நாட்டு தலைநகரில், புகழ் பெற்ற கோட்டை பிள்ளையார் கோவிலில் எனது வேண்டுதலை வைத்து கொள்ளலாமே?
கடவுள் மற்றும் கோவில் சம்பந்தமான வழிபாட்டு மோட்டிவ் இல்லாமல், எனக்கு மரியாதை பற்றவில்லை என்ற புகார்-கமிட்டீ மீது எனது குறை
in other words….
ஒரு கோவிலுக்கு பல ஆயிரம் பேர் வரலாம். ஆண், பெண், கருப்பு நிறம், வெள்ளை நிறம், பல மொழி மக்கள் வரலாம். ஆனால் மையமான மோட்டிவ் கடவுளை திருப்தி படுத்துவது, அல்லது கடவுளிடம் தனது தேவையை கேட்பது/வேண்டுதல் வைப்பது – தவிர கடவுளுக்கு சம்பந்தம் இல்லாத மோட்டிவே மீண்டும் பல பல பிரச்னையை உருவாக்கும்.
5 12 2021ல் எனக்கு போட்ட பொன்னாடையை விட, எனது தம்பிக்கு 2019ல் போட்ட பொன்னாடை ஒரு அங்குலம் பெரியது. ஆகவே, கோவில் தலைவர் (மாமா தனபாலன் அவர்கள்), நான் அவரின் பெண்ணை எடுக்கவில்லை என்ற ஒரே காரணத்தால், என்னை பழி வாங்கி, அவமானப்படுத்த, வேண்டும் என்றே எனக்கு ஒரு அங்குலம் சிறிய பொன்னாடை போர்த்தினார்.
specifically..
இது போன்ற முட்டாள் தனமான குறை கூறிக்கொண்டே இருந்தால் போதும். கமிட்டீ உறுப்பினர்களை சிறப்பாக நிர்வாக வேளை செய்ய விடாமல் தடுத்து விடலாம்.
பிறகு 36 வருடம் செயல் அற்று இருந்த கோவில் போல் ஆக்கிவிட்ட பெருமை (பாவம்) நமக்கு சேரும்.
தொழில், வருமானம் உருவாக்கியவர்களுக்கு நிர்வாகத்தின் அவசியம் புரியும்.
குறை மட்டும் கூறுபவர்களுக்கு எதுவும் புரியாது.
நாம் வெளியூரிலிருந்து, நிர்வாகம் செய்ய இயலாது.
நாம் உறுப்பினர்களுக்கு, ஒத்துழைப்பும், ஆதரவும் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கு அனாவசிய மன உளைச்சலை உருவாக்காமல் இருந்தால் போதும். அவர்களின் வேலையே திறம்பட செய்ய முடியும்.
அதுவே நமக்கு பெரிய புண்ணியம்.
நான் MKG ஷண்முகத்திடம் பேசினேன்.
(இதில் மிகச் சில பகுதி மட்டும் உண்மை அடிப்படை வைத்து எழுதியது)
தம்பி, மேல மருங்கூரின் கோவில் வழிபட, மரியாதை கமிட்டீ யாருக்கு செலுத்த வேண்டும் என்பதெல்லாம் அவர்கள் சர்வ சுதந்திரமாக முடிவுகள் எடுக்க வழிவிடுவதுதான் எனது நோக்கம்.
ஒருவேளை, அடுத்த ஒரு யாகம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தாள், அன்று செய்த படிதான் மீண்டும் செய்வேன். எதையும் திருத்திக்கொள்ள மாட்டேன்.
எதையும் கட்டாயப்படுத்தி சாதனை செய்ய முடியாது. ஜெயிக்காது. தம்பி பல பல குறைகள் சொல்லப்பட்டதாக கேள்விப்பட்டேன். எந்த மாதிரி குறையாக இருந்தாலும், அவைகள் பணம் செலவு செய்து வந்த எங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நாங்கள் செய்த அனைத்தும் மிக சரியாக தெரிகிறது.
அழைப்பதா, ரூம் போடுவதா என்றெல்லாம், நான் முடிவு எடுக்க வேண்டிய விஷயம். மற்றவர்களின் தலையீடு அவசியம் அற்றது. அதை கேட்க எங்கள் குடும்பத்தில் யாரும் ஆதரவு தரவில்லை.
(திறமை மற்றும் சரியான நிர்வாகம், உழைப்பு ஜெயிக்கும். வயது, பதவி, பாசம் என்ற வேஷம்,செட்டியார் குடும்பம் என்ற அதிகாரம் போன்றவற்றை – வார்த்தை ஜாலங்களை பயன்படுத்தி – பயன் படுத்தி, கொஞ்சம் வற்புறுத்தலாம். கொஞ்ச நாள் ஜெயிப்பது போல் தோன்றும். நீண்ட காலத்தில் நல்ல, தரமான பலன் தராது. இறுதியில் உண்மைதான் உருவெடுக்கும்.)
"கோவில் கமிட்டீ என்ற அமைப்பை உருவாக்கிய நோக்கம், கோவிலை சம்பளம் இல்லாமல் நிர்வகிக்கவே. கோவிலை பிரசித்தி பெற வைக்க, தனது நேரத்தை, செலவு செய்வது போதும். எனக்கு தேங்காய், கொடுக்கவில்லை, ஒரு அங்குலம் பெரிய துண்டு என் தம்பிக்கு போட்டது குற்றம். எனக்கு மலேஷியா கொடுத்து விட்ட குடத்தில் வாய் சிறிதாகிவிட்டது. இது போன்ற குடும்பம், இனம், சமூகம் போன்ற சண்டையில் கமிட்டீ கவனம் போய் விடாமல், முதலில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தன்னை நிர்வாகம் செய்ய தெரிந்தால்தான், கோவிலை வழிநடத்த முடியும். இதற்கு தேவை போதிய விழிப்புணர்வு."
MKP. பாண்டுரெங்கன்
இப்படிக்கு
MKP. பாண்டுரெங்கன்