You are currently viewing SSV உண்மைக்கதை 5: ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா-சுருக்கம்
அன்னதானம்

SSV உண்மைக்கதை 5: ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா-சுருக்கம்

SSV உண்மைக்கதை 5…

Nov 7, 2020-SSV உண்மைக்கதை 5

ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? உண்மைக்கதை – சுருக்கம்

முதல் பாகத்தின் சுருக்கம்-SSV உண்மைக்கதை 5

எனது தந்தையார்  ஸ்ரீ  செல்வ விநாயகரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். தனது குடும்ப ஏழ்மையை போக்கி, ஒரு நல்ல நிலைமைக்கு தன்னை வைத்துக்கொண்டாள், தான் அந்த கண்மாயில் இருந்த ஸ்ரீ செல்வ விநாயகரை ஒரு கோவில் கட்டி வைப்பதாக வாக்களித்தார்.

அவர் கோரிக்கையை ஏற்ற ஸ்ரீ செல்வ விநாயகர், எனது தந்தையாருக்கு மேல மருங்கூரில் விநாயகருக்கு மட்டும் கோவில் கட்டவில்லை, வலனயில் அவரது தொழில் பாங்குதாரர்களுடன் இணைந்து பெருமாள் கோவில் கட்ட உதவினார்.

மேலும், மதுரையில் அழகர் கோவிலில் ஒரு சிறிய மகால் அமைத்து கொடுத்தார். மேலும் பல வித உதவிகளும் செய்தார்.

Summary of the first part

My father made a request to Sri Selva Vinayagar. If Sree Selva Vinayagar helped my father got rid of his family poverty and kept himself in a good position and vowed to build a temple for Sri Selva Vinayagar, who was just insight.

In response to his request, Sri Selva Ganesha helped my father, not only to build a temple for Ganesha at Marungur, but above my father, but also helped build the Perumal Temple with his professional stakeholders in Valanai.

Also, he set up a small mahal in the Alagar temple in Madurai. He also made many donations.

இரண்டாவது பாகத்தின் சுருக்கம்

SSV உண்மைக்கதை 5…

அப்பா, மருங்கூரில் பிறந்து வளர்ந்து இருந்தாலும், அப்பாவுக்கு ஊரில் ஒரு வீடு இருந்திருந்தாலும், அவருக்கு முன் கூட்டியே பல மக்களின் ஆழ் மன நோக்கங்களை அறியவில்லை- அதன் விளைவு என்ன?

அப்பா விநாயகரை உயர்வாக நினைத்ததும், விநாயகருக்கு சேவை செய்வதை பெரிதாக நினைத்ததும், அப்பாவுக்கும் அவருடன் இணைந்த பல பல நல்ல உயர்ந்த உள்ளங்களுக்கும் சரியாக படுவதால், அத்தனை கிராமத்து மக்களுக்கும் சரியாக பட்டதா?

“தான்” எனும் அடிப்படையான நோக்கத்திலிருந்து பிறந்த குழந்தைகளான, எனக்கு தான் தேங்காய் மூடி, மாலை என்று பிரச்னையாகிவிட்டது. அதன் பலன் என்ன?

அப்பா மருங்கூர் விஷயங்களிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். தனது பிள்ளைகளிடம் கூட வருடம் ஒரு முறையாவது ஸ்ரீ செல்வா விநாயகரை சென்று வழி பட கற்பிக்க வில்லை

48 நாட்கள் பூஜையை..

48 நாட்கள் பூஜையை ஒருங்கினைத்து கிராம மக்களை  வழிநடத்தி செய்யவில்லை, அதாவது கிராமத்தில் அப்பா இல்லாவிட்டாலும் தானே தலைமைத்துவம் செய்து மக்களை ஒருங்கிணைத்து செயல் படுத்த முன் வரவில்லையா அல்லது அதற்கான தகுதிகள் இல்லையா என்பது எனக்கு தெரியாது. தேங்காய் மூடிக்கும், மலைக்கும் அலைந்த  யாரும் கோவிலை நிர்வாகம் செய்ய முன் வரவில்லை. அதன் விளைவு?

கோவில் நிர்வகிக்காமல், பாழடைந்து இடியும் கட்டத்துக்கு வந்ததுதான் மிச்சம்.

நிர்வகிக்கப்படவில்லை

நிர்வகிக்கப்படவில்லை. 13 வருடம் ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை.

அனால் விநாயகர் தெளிவாக இருக்கிறார். மருங்கூறார்களால், பணம் இருந்தாலும் ஒருங்கிணைக்கும் தலைமைத்துவம் செய்யும் தகுதி இல்லை, கோவிலை மறு  வர்ணம் கூட பூச இயலாது, என்ற அடிப்படையில், என்னை ஸ்ரீ செல்வ விநாயகர் அழைப்பு விட்டு கோவிலை மீண்டும் கட்ட செய்து விட்டார்.

அதை விட முக்கியமானதாக, ஒரு கமிட்டி என் மூலம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளார் விநாயகர். எனது தந்தையாரின் மிகப் பெரிய  தவறு கமிட்டி அமைக்காமல் செய்ததுதான் என்று உணர தோன்றுகிறது.

இப்பொழுதும், மனம் விஸ்தாரம் அடையாமல், விநாயகரை மத்தியில் வைத்து செயல் பட மறுக்கும் சிலர் இருந்தாலும், பல பல நல்ல உள்ளங்கள் விநாயகரை மத்தியில் வைத்து சட்டப்படி கோவிலை நிர்வகிக்க தயாராகி விட்டனர். அதுவே எனது வெற்றியாக கருதுகிறேன்.

கும்பாபிஷேகம் செய்வதும், மறு கும்பாபிஷேகம் 13 வருடங்கள் களைத்து  செய்வதும் இனி கமிட்டியின் பொறுப்பு.

*******************************************************************************

குடும்ப திருவிழா பதிவு 

காதுகுத்து, பிறந்தநாள், நிச்சயதார்த்தம் போன்ற சுமார் 100 கலக்கும் திருவிழாக்களுக்கு கோவிலில் இடம் பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்புக்கு:-

செயலாளர்: நிவாஷ் +91 96004 60828

சேவகர்: திரு பார்த்திபன் +91 97515 04073

Sree Selva Vinayagar Arakkattalai

Indian Overseas Bank

KalayarKovil Branch

Account No. 187201000022405

IFSC Code: IOBA001872

மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் சங்காபிஷேகம்

இந்த சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும் – மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் செய்து தரப்படும்.

இந்த அறிய வாய்ப்பை, பயன் படுத்திக்கொள்ள, பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எளியோருக்கு, இது போன்ற சங்காபிஷேகம் செய்து, குடும்ப சுபிட்சம் பெற வரவேற்கப்படுகிறது.

தொடர்புக்கு கமிட்டீ:

நிவாஷ்:96004 60828

பார்த்திபன்: 97515 04073

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

இன்னும் வரும் ..

  1. SSV உண்மைக்கதை 1
  2. SSV உண்மைக்கதை 2
  3. SSV உண்மைக்கதை 3
  4. SSV உண்மைக்கதை 4
  5. SSV உண்மைக்கதை 5
  6. SSV உண்மைக்கதை 6
  7. SSV உண்மைக்கதை 7
  8. SSV உண்மைக்கதை 8

Summary of the 2nd part

Even though my father was born and raised in Marungur, and had his own house in the small Marungur Village, he did not know the subconscious intentions of many people in the village. he was not in a position to understand the villager’s real intention.

While many villagers supported my father’s idea to build the temple, a few villagers began to fight for coconuts and garlands. Their real intention was not about the Sree Selva Vinayagar. 

Their central purpose was not the temple but to feed their EGOs

As a result, my father left Marungur supporting activities. The villagers who fought for coconut could not unite all people and could not conduct the 48 days pooja, which was a vital thing after kumbabishegam.

My father did not teach his children about the temple or the importance of visiting and praying at least once a year. 

Because of all such things that happened, What were the results?

The temple was left alone and not managed by anyone.

Not managed. Once in 13 years, they cannot repaint, do some festivals, and so forth.

But Ganesha is clear on His purpose. Sree selva Vinayagar decided to call me to build the temple again. I did not have contact with the village for 3 decades, but I was pulled to the temple by Sree Selva Vinayagar.

More importantly, Ganesha has arranged for a committee to be set up for me. I realize that my father’s biggest mistake was not setting up a committee. That is what I consider my success.

So..I am setting the path to building the committee so that in the future committee will take care of the temple. I am not interested in building a temple or Kumbabishegam. I have a vision only to build a strong committee.

Leave a Reply