You are currently viewing SSV உண்மைக்கதை 8:  ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா?
அன்னதானம்

SSV உண்மைக்கதை 8: ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா?

SSV உண்மைக்கதை 8

Dec 4, 2020

ஸ்ரீ செல்வ விநாயகர்- மேல மருங்கூர் என்ற குக்கிராமத்தில் அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் – ஸ்ரீ செல்வ விநாயகர் கேட்டதை கொடுத்தாரா, கொடுப்பவரா? 

SSV உண்மைக்கதை 8

ஏன் நான் அக்கரை எடுக்க வேண்டும்? ஏன் நான் ஒதுங்க முடியாது? யாருடைய பொறுப்பு?

நான் பலமுறை யோசித்ததுண்டு, ஒரு சிறிய கோவில் கட்ட நான் ஏன் ஒரு வருடமாக வாட்சப் குழுவில் பேசவும் கத்தவும் வேண்டும்?

ஒரு மாபெரும்  காரணம் பல பல வியாபாரிகள் என்னை நம்பி பணம் கொடுத்தது

இரண்டாவது ஒரு காரணம் கிராமத்திலும் ஒருங்கிணைந்தது, நம்பி பெரும் பெரும் பணம் கொடுத்ததும் செட்டியார் குடும்பம் தலையிட்டது என்றும் கேள்விப்பட்டேன்?

தலையாய காரணமாய் இருக்க வேண்டிய ஸ்ரீ செல்வா விநாயகருக்கு அப்பாவின் நோக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க வந்தது இப்பொழுது மூன்றாவது அல்லது கடைசி முக்கியமாகி விட்டது.

(இதுவே எனது புரிதலின் நிலை. இதுவே எனது கலாச்சாரம். ) நான் இல்லாமல் கோவில் கட்ட கிராமத்தார்களிடம் பணம் இருக்காதா? செயல் படுத்தும் நபர் இல்லை மருங்கூரில்.

நிறையவே இருந்தாலும் பல பேர் 50001 முதல் மரியாதை திட்டம் விலை கொடுத்து வாங்கினாலும், எனது தொழில் எதிரி எனக்கு போட்டியாகவோ, என்னை அவமானப்படுத்தவோ முழு தொகை கோவில் கட்ட கொடுக்க முன் வந்தாலும். செயல் படுத்தும் நபர் இல்லை மருங்கூரில்.

36 ஆண்டுகள் கோவில் மட்டும் பிரச்னை இல்லை. நிர்வாகத்திலும் பிரச்னை.

செயல் படுத்துபவரை குறை மட்டுமே சொல்ல முடியும். நிர்வாகத்தை எப்படி சீர் செய்வது என்று சிந்திக்க, சீர்படுத்த ஆட்கள் இல்லை என்றே கூற வேண்டும்.

மருங்கூரில் பிறந்தது உண்மை என்றாலும், அந்த உரை, ஊர் மக்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

ஒரு ஆண்டில் பல விஷயங்கள் தெரிய வருகிறது.

ஒரு உதாரணம்:

கண்மாய் மீன் ஏலம் விடுவதில் விலை குறைவாக விடப்படுகிறது என்று ஒரு குறை இருப்பதாக மருங்கூர் நபர் ஒருவர் என்னிடம் ஒரு வருடம் முன்பு சொன்னார்.

உண்மை கண்டிப்பாக எனக்கு தெரியாது. அனால் சீர் செய்ய பல ஆலோசனை கூறினேன். சரி எப்படி செய்யலாம், யாரிடம் பேச நான் உதவமுடியும் என்று ஆர்வப்படவில்லை. குறை மட்டுமே கூற முடிந்த மனதுக்கு தீர்வு காண முயலவில்லை. செயல் ஆற்றல் இல்லை.

கண்டிப்பாக செயல் திறன் உள்ளவராக இருந்தால் எனது வருகைக்கு முன்பே தீர்வு ஏற்படுத்தி இருப்பார் அல்லது இருப்பார்கள்.

கண்மாய் மீன் மட்டும் அல்ல, மூன்று கும்பாபிஷேகம் நடத்தி முடித்து இருப்பார்கள். கோவிலில் முளைத்த செடி கொடியெல்லாம் சுத்தம் செய்து, மரமாகி கோவிலில் தெரிவேற்பட விட்டிருக்க மாட்டார்கள்.

தேவை செயல் ஆற்றல் மற்றும் தலைமைத்துவம்.

இதுவே எனது கலாச்சாரம். 

எனக்கு கோவில் கட்டும் தகுதி இல்லை என்பது உண்மைதான்.  ஆக உனக்கு தகுதி இருந்தாலும் நீ காட்டக்கூடாது. உனது தகுதி பணமாக இருக்கலாம். உனக்கு பணம் இல்லை அனால் மற்றவரிடம் வசூல் செய்யும் செல்வாக்கு உனக்கு இருக்கலாம்.

 உள்ளூர் காரனாகிய நீ கட்டி என்னை விட பெரியவன் என்ற புகழ் வரக்கூடாது. நான் உன்னை செயல்பட விடமாட்டேன்.

என்னாலும் கட்ட இயலாது. நீயும் கட்டிவிட்டு மரியாதை வாங்கி விடக்கூடாது. எனக்கு செயல் திறன் இல்லை. உன்னை செயல் பட விடமாட்டேன்.

இதுவே எனது புரிதலின் நிலை. இதுவே எனது கலாச்சாரம். 

எனக்கு வேறு வலி இல்லை,இல்லை, இல்லை….

இது போன்ற கலாச்சாரம் தெரிந்திருந்தால்  கண்டிப்பாக நான் பிறந்த ஊருக்கு வந்திருக்கவே மாட்டேன். நான் மட்டும் எனது பணம் மட்டும் ஸ்தபதியிடம் கொடுத்த உடன்,  தெரிந்திருந்தால், வசூல் செய்திருக்க மாட்டேன்.

மிக தாமதமாக தெரிந்ததால் தான் இனி ஒதுங்க இயலாது. அவசியப்பட்டால் ராணுவத்தையும் இறக்கி கும்பாபிஷேகம் செய்வதை தவிர எனக்கு வேறு வலி இல்லை,இல்லை, இல்லை….

(கிராமத்தார் புரிதலுக்கும் எனது புரிதலுக்கும் நிறைய வேற்றுமை இருக்கிறது)

ஸ்ரீ செல்வ விநாயகர் அருள் பாலிப்பார்

ஸ்ரீ செல்வ விநாயகர் கண்டிப்பாக கும்பாபிஷேகம் செய்ய அருள் பாலிப்பார். அப்பா பத்து பைசா கூட கொடுக்காமல் கேட்டதுக்கே விநாயகர் அல்லி கொடுத்தார். அப்பா குடும்பத்தை உயர்த்தி தனக்கு ஒரு கோவிலும் வாங்கிக்கொண்டவர் நமது ஸ்ரீ செல்வா விநாயகர் அல்லவா?

*******************************************************************************

குடும்ப திருவிழா பதிவு 

காதுகுத்து, பிறந்தநாள், நிச்சயதார்த்தம் போன்ற சுமார் 100 கலக்கும் திருவிழாக்களுக்கு கோவிலில் இடம் பதிவு செய்துகொள்ளலாம்.

தொடர்புக்கு:-

செயலாளர்: நிவாஷ் +91 96004 60828

சேவகர்: திரு பார்த்திபன் +91 97515 04073

Sree Selva Vinayagar Arakkattalai

Indian Overseas Bank

KalayarKovil Branch

Account No. 187201000022405

IFSC Code: IOBA001872

மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் சங்காபிஷேகம்

இந்த சங்காபிஷேகம் ஆலயத்தில் செய்து தரப்படும் – மேலமருங்கூர் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் செய்து தரப்படும்.

இந்த அறிய வாய்ப்பை, பயன் படுத்திக்கொள்ள, பக்தர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எளியோருக்கு, இது போன்ற சங்காபிஷேகம் செய்து, குடும்ப சுபிட்சம் பெற வரவேற்கப்படுகிறது.

தொடர்புக்கு கமிட்டீ:

நிவாஷ்:96004 60828

பார்த்திபன்: 97515 04073

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

இன்னும் வரும் ..

  1. SSV உண்மைக்கதை 1
  2. SSV உண்மைக்கதை 2
  3. SSV உண்மைக்கதை 3
  4. SSV உண்மைக்கதை 4
  5. SSV உண்மைக்கதை 5
  6. SSV உண்மைக்கதை 6
  7. SSV உண்மைக்கதை 7
  8. SSV உண்மைக்கதை 8

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

இன்னும் வரும் ..

Leave a Reply