இவர் சரி, தவறு, என்ற தீர்மானிப்புக்கு மேலே 1: பரிணாம வளர்ச்சி

சரியும் & தவறும் 1….. சரியும் & தவறும் 1…..சரியும் & தவறும் 1…

சரியும் தவறும் பரிணாம வளர்ச்சி என்றால் என்ன?

அதாவது சரியும் தவறும் என்று தீர்மானிக்கும் முன் இந்த தீர்மானிக்கும் முறையில் எத்தனை பரிணாம வளர்ச்சி?

உலக சரித்திரங்கள் இந்த சரியையும் , தவறையும் மாற்றி அமைத்து உள்ளது. So…

சரி தப்பு என்ற பரிணாம மாற்றத்தின் உதாரணங்கள்

உடையில் மாற்றம்

In the first place…

அன்று கிராமத்தில் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் பெண்கள் மேலாடை அனிவதில்லை. இன்று அப்படி அணியவில்லை என்றால் தவறு என்கின்றனர்.

Thus…

ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரை படத்தில் அதை பற்றிய கதை. அப்பாவி நாயகன் அடிபட்டு சாவது தான் மிச்சம்.

Similarly…

நமது அம்மத்தா, அப்பத்தா மேலாடை போடாமல் வாழ்ந்தார்கள். இன்று அது ஆபாச சின்னமாகி விட்டது.

மேலாடை போடாதது அன்று சரி என்பதற்கு வறுமை ஒரு காரணம். அதற்க்கு முன் அப்படி ஒரு ஆடை கண்டு பிடிக்க வில்லை.

as well as…

இன்று தவறு என்பதற்கு, ஆயிரம் காரணங்கள் இருக்கிறது.

நான் ஆராய்வது பரிணாம மற்றம் பற்றி மட்டுமே. சிந்தனை எத்தனை மாற்றம் என்பதை பற்றியே.

 

 

 

 

 

குரங்கிலிருந்து பரிணாம மாற்றங்கள்-சரியும் தவறும் பரிணாம வளர்ச்சி

நாம் மனித குரங்காக இருந்த போது ஆடைகள் பயன் படுத்த வில்லை.
எந்த மிருகங்களுக்கும் கொடுக்கப்படாத சிந்திக்கும் ஆற்றல், சில குறிப்பிட்ட இனங்கலான 4, 5 வகை குரங்குகளுக்கு இத் திறன் கிடைத்து உள்ளது.

அதன் பலனாக, ஏதோ ஒரு வகை தன்மான உணர்வு என்று வந்து, இடுப்புக்கு கீழ் இலை, தோல், பட்டை போன்ற பொருட்களை வைத்து மறைக்க ஆரம்பித்து, இன்று உலகத்தில் பல்லாயிர முறைகளில் ஆடைகள் உருவாகி விட்டது.

மனித பரிணாமத்தின் மிகப்பெரிய பொய்கள்

சில வருடங்கள் முன்பு, அரை டவுசர் அணிந்து, ஒரு மலேசிய அரசாங்க அலுவலகத்துக்கு சென்ற ஒரு பெண்மணியை அனுமதிக்க வில்லை.

அரை டவுசர் சீனர்கள் குடும்பத்தில், வீட்டில், 1960 களில் கூட சர்வ சாதாரணமாக போட்டு இருப்பார்கள். சமைந்த பெண்கள் உட்பட. கடுகளவும் ஆபாச உணர்வு இருக்காது.

தமிழ் திரை உலகில் அரை டவுசர் சிலுக்கு சுமிதா போட்டு வந்தது ஆபாசத்தை promote செய்ய.

சட்டம் பெரும்பகுதி நாடுகளில், பெண்கள் மேல் ஆடை இன்றி இருக்கக்கூடாது என்று முடிவுக்கு வந்து விட்டது.

அரை டவுசர் போடுவது சட்டப்படி குற்றம் இல்லை என்றாலும், தமிழ் நாட்டில் பெண்கள் போட விருப்பப்பட்டாலும், போட்டு நடக்க சமுதாயம் அனுமதிக்காது.

வைபவங்களுக்கு சென்றால் பட்டாடைகள். ஆபிஸ் சென்றால் அதற்க்கு தகுந்த ஆடை.

ஆக, தன் மானத்துக்கு உருவான ஆடை, பிறகு படி படியாக, கௌரவம், ஜாதி, பதவி, சிம்மாசனத்தில் அமரும் அரசனுக்கு, மணமக்கள் ஆடை என்று பல ரூபங்கள் எடுத்தது.

இன்னொரு பக்கம் ஆபாச தொழில்களுக்கு அதற்க்கு தகுந்த ஆடைகள்.

வெப்பம் நிறைந்த வெப்பத்தை தணிக்கும் ஆடைகள், குளிர் பிரதேசங்களில் வெப்பமாக வைத்துக்கொள்ளும் ஆடைகள் என்று எண்ணில் அடங்காதவை.

நினைவு இருக்கட்டும், நாம் ஆடைகளை பற்றி ஆராய வில்லை. ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்ட பரிணாம மாற்றம் பற்றி ஆராய்கிறோம்.

இந்த மானத்தை காக்கும் ஆடையில் இத்தனை மாற்றம் என்றாள், வாழ்வின் மற்ற முக்கிய பகுதி களான, என்ன என்ன? அதில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? இது நமது வாழ்வை எப்படி கை வைக்கிறது?

not only … but also..

நாம் குரங்கு காலத்துக்கு போக தேவை இல்லை. நாம் அவர் அவர் வயதுக்கு தக்க, சற்று கூர்ந்து கவனித்து பார்த்தல், ஒவ்வொரு 5 வருடங்களிலும் பல மாற்றங்கள் காணலாம்.

மேலை நாடுகளில் விவாகரத்து செய்தி கேட்டால், நம்ம நாட்டில், இந்தியா & மலேஷியா அப்படி கேவலமானது இல்லை என்று 80களில் பெருமை அடித்தோம். இன்று நிறைய விவாகரத்து நடக்கிறது.

KFC போன்ற பாஸ்ட் உணவு 60களில் USA நாட்டில் இருந்தது. இன்று நமது நாடுகளில் நிறைய.

பெண் மறுமணம் செய்வது நமது நாட்டில் 90க்கு முன் பார்ப்பது சுலபம் இல்லை. இன்று ரத்த உறவுகளில் பார்க்கிறோம்.

அன்றய தவறு என்றது இன்று எப்படி சரியானது? எது அன்றய தவறை இன்று சரி என்று ஒப்புக்கொள்ள வைக்கிறது?

Sapien-சரியும் தவறும் பரிணாம வளர்ச்சி

இதை புரிந்து கொள்ள முதலில் நாம் குறைந்தது இதை படிக்கும் வரையாவது ஏற்றுக்கொள்ள வேண்டும்:-

“நாம் சேபியன் இன குரங்கு இனத்தில் இருந்து வந்தவர்கள்”

பைபிலில் ஆவா, ஏவா முதல் மனித இனம் என்கிறது. மனித குலத்து தாய் தந்தை ஆவா & ஏவா என்கிறது.

இந்து மதம் மனித இனம் பிராம்மா குழந்தைகள் என்கிறது.

விஞ்ஞானம் நாம குரங்கிலிருந்து வந்தோம் என்கிறது.

இந்த ப்லோக் நாம் ஒரு குரங்கினம் என்ற அடிப்படையில், எப்படி சரியும் தவறும் உருவாகிறது என்று ஆராய எழுதப்பட்டது.

மேற்கண்ட நூலின்படி நமது மூதாதையர் ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து, பல ஆயிரம் வருடங்களாக, பல பல தலைமுறைகளாக உணவு தேடி வந்ததில் பல நாடுகளில் அடை புகுந்தோம்.

விவசாயம் என்ற கண்டு பிடிப்புக்கு/புரட்சிக்கு பிறகுதான் நாம் இடம் மாறுவது மிக குறைந்து விட்டது. நமக்கு என்று ஒரு வீடு,கிராமம், ஊர், நாடு என்றாகிவிட்டது.

விருப்பம் உள்ளவர்கள் அந்த நூலை படித்து மேற்கொண்ட தகவல் அறியலாம்.

 

 

 

 

 

வைகிங் என்ற ஒரு சீரியல்-சரியும் தவறும் பரிணாம வளர்ச்சி

வைகிங் என்ற ஒரு சீரியல். ரெம்ப பெரிய சீரியல். இது போன்ற பழைய கதைகள் மூலம் நிறைய நாம் எப்படி இன்றய நிலைக்கு வந்துள்ளோம் என்பது புரிந்துகொள்ளலாம்.

கல்கியின் பொன்னியின் செல்வன் போன்ற கதைகளில், அன்று நாம் எப்படி அன்பு, காதல், துரோகம், காமம் போன்ற உணர்வுகளை பயன் படுத்தினோம் என்பது புரியவரும்.

likewise..

இன்றும் அதே அன்றய பசி, காதல், ஆசை, காமம்,இரக்கம், வெறுப்பு,விருப்பு,ஆணவம், பணிவு, ஆக்கிரமிப்பு போன்ற மனோவியல் உணர்வுகள்  இன்றும் நம்மை எப்படி செயல் பட வைக்கிறது என்பதை ஆராயவே இந்த ப்லோக்..

இந்த மனோவியல் உணர்வுகளை, அன்று மனித குலம் எப்படி பயன் படுத்திய விதத்திலும் எத்தனை பரிணாம மாற்றங்கள், வளர்ச்சிகள்?

பசிக்கு அன்று தாவரங்களிலும், மிருகங்களை வேட்டையாடியும், பசியை தீர்த்தோம். பச்சையாக தின்றோம். பிறகு சமைக்க செய்தோம்.

விவசாயம் செய்ய கண்டுபிடித்த பிறகு, உற்பத்தி செய்து, விளைய செய்து சாப்பிட்டோம்.

இன்று பிஸ்சா, பர்கர் என்று சாப்பிடுகிறோம். மது அருந்துகிறோம். புகைக்கிறோம்.

ஒரு மிக உயிர் வாழ அத்தியாவசியமான உணவு பழக்கத்தில் இத்தனை பரிணாம மாற்றங்கள் உள்ளபொழுது, இன்னும் எத்தனை பகுதிகள் இருக்கிறது?

மொழி, உறவுகள், பொருட்களை உடமையாக்குதல், போன்ற இன்னும் நிறைய ஒவ்வொரு பகுதியாக வரும் தொடர்களில் ஆராய்வோம்.

நாம் சேப்பியன் குரங்கு இனம் என்கிறது-சரியும் தவறும் பரிணாம வளர்ச்சி

உலகத்தில் வாழும் அணைத்து மனித உயிரினத்துக்கும் ஒரு மூதாதையர் மூலத்தில் வந்தோம் என்கிறது சேப்பியன். நாம் சேப்பியன் குரங்கு இனம் என்கிறது.

நாம் அதை ஏற்றுக்கொண்டால், ஒரு அனுமானமாக நமது உணவு முறையிலிருந்து, பழக்க வழக்கத்திலிருந்து, ஆடையிலிருந்து, ஒவ்வொரு அசைவிலும் ஏன் மாறுகிறது, எப்படி பரிணாம மாற்றமும், வளர்ச்சியும் ஏற்படுகிறது என்று அனுமானம் செய்து கொள்ள இயலும்.

காமன் சென்ஸ் என்ற ஒன்றை வைத்துக்கொண்டு அனுமானிக்கலாம். நான் ஆராய்வாளோரோ, பெரும் கல்விமானோ இல்லை. எந்த தகுதியும் இல்லாவிட்டாலும், சரித்திர சீரியல், நாவல் பார்த்தது, படித்தது வைத்து சில அனுமானங்கள் உண்மையாக இருக்காவிட்டாலும், இப்படித்தான் இருந்து இருக்கும் என்ற ஒரு முடிவுக்கு வரலாம்.

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

இன்னும் வரும் ..

இவர் சரி, தவறு, என்ற தீர்மானிப்புக்கு மேலே பகுதி:-

ஒன்று