Mandela The Tamil Movie and What Lessons I Learnt From It?
Mandela The Tamil Movie and What Lessons I Learnt From It? Many many lessons. Psychology, Egoism, Culture, and many.
Let me explain in the Tamil language as the audience of this article might be Tamil people. The movie is a Tamil movie too.
மண்டேலா தமிழ் திரைப்படம் மற்றும் அதிலிருந்து நான் என்ன பாடங்கள் கற்றுக்கொண்டேன்?
படம் எளிமையாக எடுக்கப்பட்டது.
1) அந்த கிராமத்தில் மனிதாபிமானம் இல்லாத மக்கள்
2)ஜாதியில் பெரிது, பதவியில் பெரிது என்றால் மனிதாபிமானம் என்பது இருக்கக்கூடாதோ? காரில் ஏற்ற மறுப்பவன், ஓட்டுக்காக ஜாதி காணாமல் பூய் விட்டதோ?
3) தற்கொலை செய்து சாகவேண்டிய யோகி பாபு, இருட்டில் ஒரு பெண் வெளிக்கி போக வந்ததன் விளைவு பல மாற்றங்கள்.
4) ஊர் மக்களிடம், மேல மருங்கூரில் செருப்பு போடக்கூடாது என்று கட்டுப்பாடு செய்தது போல், வில்லன்கள் மனிதாபிமானத்தை கட்டுப்படுத்தி வைத்துள்ளனர்.
5) வில்லன் மனம் கொந்தளிக்க கொந்தளிக்க உடனே யோகி பாபுவை கொள்ள உத்தரவிடுவது, ஒரு கதாநாயகன் இரண்டு வில்லன்கள் மனதை திருப்தி எப்படி படுத்த முடியும்? கண்டிப்பாக சாவுதான்.
6) சர்வ சுதந்திரம் கொடுக்க மறுக்கும் கிராமத்து பெரிய பதவி, ஜாதி என்ற போர்வை
இன்னும் பல பல கோணங்களில் சிந்திக்க வைத்த படம். வில்லன் நடிகர்களுக்கு என் பாராட்டுக்கள். வில்லன் நடிப்பு தான் பல உண்மைகளை, சுயநல கேவலமான நடத்தை களை என்னை போன்ற வெளி நாட்டில் வாழும் நபர்களுக்கு தெளிவை கொடுக்கின்றது.
From
MKP Pando