புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும்-7

கலாச்சாரம் பற்றிய ஒரு புரிதல்-எது சிறந்த அல்லது கேவலமான கலாச்சாரம்

கற்றது கைமன்னளவு கல்லாதது கடல் அளவு என்பார்கள். எனக்கு தெரிந்த ஒன்றிரண்டு கலாச்சார கருத்துக்கள் கூறும் முன் கலாச்சாரம் என்றால் என்ன என்ற ஒரு புரிதல் வேண்டும்.

கலாச்சாரம் என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட பழக்கத்தை சமுதாயம் ஏற்று அதை கடை பிடிப்பது கலாச்சாரமாக வடிவெடுக்கிறது.

தீபெத் நாட்டில் நாலு ஐந்து கணவர்களே தனது மகளுக்கு கட்டி வைப்பது தகப்பனின் கடமை. கௌரவமும் கூட. நேபாலில் சகோதர சகோதிரியை மணப்பது ஒரு முக்கிய சுயநலம் நிறைந்த கடமை.

விதவை மனைவி விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உடன் கட்டை ஏற்றி விடுவது மற்ற ஆணின் கடமையாக இருந்தது, சில இந்திய நாட்டு பகுதிகளில்.

மருங்கூரில் கீழ் சமூகத்தை சேர்ந்தவர்கள் செருப்பு போட கூடாது, சில ஊர்களில் ஆணும் பெண்ணும் மேலாடை அணியக்கூடாது என்றும் இருந்தது.

ஒரு வகையில் நான் பிறந்த ஊர் கலாச்சாரத்தை விட தீபெத் மற்றும் நேபாள கலாச்சாரம் சரியானதாக படுகிறது.

சகோதர திருமணத்தை ஏற்ற நாடக இருக்கட்டும். 4,5 கனவான்களை கட்டி வைக்கும் நாடாக இருக்கட்டும், சமுதாயம் அதை ஆமோதித்ததாள், அந்த குறிப்பிட்ட நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்தனர்.

அது சரி தப்பு என்று தீர்ப்பு சொல்ல நாம் யார்? நமக்கு அந்த தகுதி இல்லை.

அந்த நாட்டு சமுதாயத்தில் கூட ஏற்றுக்கொள்ள முடியாத நமது மருங்கூர் கலாச்சாரத்தை பற்றி ஆராய்வோம்.

ஏற்றுக்கொள்ள முடியாத கலாச்சாரங்கள்

ஒரு சில பழக்கங்களை சமுதாயம் புறக்கணித்தால், அது தண்டனை கொடுக்கும் சட்டமாக மாறுகிறது. உதாரணம் திருடுவது, கற்பழிப்பது,போன்ற செயல்களை 5 கனவன்கலை கட்டிக்கொள்ளும் நாட்டில் கூட ஏற்பது இல்லை.

பம்பாய் பெகும்ஸ் என்ற ஒரு ஹிந்தி நாடகம் பார்த்தால் வாழும் விபச்சாரி கூட கற்பழிப்பு, பொய் சொல்லுதல் போன்ற செயல்கள் ஏற்கவில்லை என்பது தெளிவாக புரியவரும்

https://en.wikipedia.org/wiki/Bombay_Begums

https://www.filmibeat.com/television/web-series/bombay-begums-web-series-review-alankrita-shrivastava-pooja-bhatt-netflix-show-310865.html?utm_source=FBDB&utm_medium=NewsWidget&utm_campaign=NewswidgetMovieDB&story=3

பார்த்திபன் சார் கலாச்சாரம்

நான் கோவில் கமிட்டீ அமைக்க சொல்லி, அவர் ஆரம்பிக்க வில்லை. அவர் கிராமத்தில் அவர் என்ன நினைப்பாரோ, இவர் என்ன நினைப்பாரோ போன்ற எண்ணத்தில் 2020 ஜூலை மாதம் வரை, அதாவது பழைய கும்பாபிஷேகம் வைத்த தேதி வரை அது பற்றி யோசிக்கவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

(நீ மேலாடை அணிய கூடாது, நீ உடன் கட்டை ஏற வேண்டும் போன்ற

1)சட்டம் போடுபவர்,

2)சட்டத்தை கடை பிடிக்கும், ஏன் என்ற கேள்வி கேட்காமல் கடைபிடிக்கும் நபர்

இரண்டு குழு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்,)

அனால் இன்று கமிட்டீ மட்டுமே கோவிலை காப்பாற்றி உள்ளது என்பதும் குறிப்பிட தக்கது.

நான் பிறந்த ஊரின் பெருமையும் கலாச்சாரமும்

எனக்கு அவசியம் இல்லாத ஊரில், எனக்கு அவசியம் இல்லாத கோவிலை கட்ட சொன்னது மருங்கூர்  பாலகிருஷ்ணன்,

அதே பாலகிருஷ்ணன் ஐயரிடம் சென்று 8 நபர்களுடன் சேர்ந்து கும்பாபிஷகத்தை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் என்ன நினைப்பாரோ அவர் என்ன நினைப்பாரோ என்று பாடாவதி கலாச்சாரத்தை கடைப்பிடித்த பார்த்திபன் சார் இன்று வரை இப்படி ஒரு மட்டமான கலாச்சாரத்துக்கு அடிமை யாகி இருந்தது நினைத்து வருத்தம் கூட கூறவில்லை.

அடுத்து போலீசில் 8 பொய் கையெழுத்து பெற்று புகார் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. எனது கேள்வி உண்மையில் பொய் கையெழுத்தா? ஆதரவே இல்லாமலா அவரே பொய் கையெழுத்து போட்டார்?

சரி, ஏன் அந்த 8 பேரில் கடுமையாக பொய் கையெழுத்து போட்டவர்  மேல் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் கடுமையான மறுப்பு கூறவில்லை?

நிறைய விஷயங்கள் என்னிடம் மறுக்கப்படுவது, எனக்கு ஒரு அனுமானமாக, வடிவேலுவின் குத்து மதிப்பாக தெரியும்.

பார்த்திபன் சார் க்கு நிர்வாக முடிவுகள் வேறு, அவரின் கலாச்சாரம் வேறு என்று புரியவில்லை

எனக்கு தலைவர் பதவி கொடு. செட்டியார் நினைத்தால் கோவிலே அவர் செலவில் கட்டலாம். செய்து விட்டு சொல்லி காண்பிப்பது கேவலமான செயல்.

இது போன்ற பல கருத்துக்கள், நிர்பந்தங்கள், எதிர்பார்ப்புக்கள், நிறைந்த இடத்தில பார்த்திபன் சார் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்பதில் தெளிவு உள்ளதா என்பதை நான் புரியாமல் செயலில் இறங்கியது எனது தவறுதான்.

வீட்டில் எனது மனைவி தான் தலைவி. தொழில் நிர்வாகத்தில் முதலீடு செய்தவர்கள் தான் தலைவர்.

தீபெத் நாட்டு 5 கணவன் கலாச்சாரத்துக்கு தலைவணங்குகிறேன். அந்நாட்டு சமுதாயம் ஏற்றுக்கொள்ள பட்டது. அந்நாட்டு பெண்மட்டும் அல்ல, மஹாபாரத பாஞ்சாலி சமுதாயத்தில் மதிப்புடன் வாழ்க்கை நடத்தினாள். 5 கணவர்களுடன் சேர்ந்தே வெளியில் சென்றாள்.

நான் 1% கூட போட வக்கில்லாமல் போலீசில் புகார் செய்தேன், ஐயரிடம் சென்று கும்பாபிஷேகத்தை தடுக்க முயன்றேன் என்று பாஞ்சாலி, தீபெத் பெண் போல் பெருமையாக பேச முன்வருவார்களா?

( நீ மேலாடை அணிய கூடாது, நீ உடன் கட்டை ஏற வேண்டும் என்ற நீ சட்டம் போட உனக்கு என்னடா தகுதி உள்ளது?)

பழைய கோவிலில் ஒரு ம. ணாவை (ம. அதாவது மரத்தை) கூட புடுங்க முடியாதவன் போடும் சட்டத்தை மருங்கூர் எந்த திசையில் உள்ளது என்று அறியாத வர்கள் கட்டுப்பட வேண்டுமா?

ஒரு ரகுபதி 275000 ரூபாய் கோவிலுக்கு முதலீடு செய்துள்ளார். போலீசில் புகார் செய்தவனுக்கும், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

4000000 லட்ச ரூபாய் செலவில் கட்டும் கோவிலுக்கு 1% கூட கொடுக்காதவன்கள் தான் நிறைய பேசினார்கள். 1% கூட கொடுக்க முடியாதவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற அவர்களின் விருப்பு மற்றும் வெறுப்பை அடிப்படையை வைத்து நிர்வாக முடிவுகள் எடுத்தால் எப்படி விளங்கும், நிர்வாகம்?

ஸ்தபதி க்கு கொடுக்க வேண்டிய பணம்

இரண்டு நாள் முன்பு ஸ்தபதிக்கு கொடுக்க பணத்துக்கு பெரும் பாடு பட்டு, கொடுக்கப்பட்டது.

களப்பணி, நிர்வாகப்பணி, இறங்கி செய்யாத, உதவாத , 1% கூட கொடுக்காத கூட்டம், இவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், நான் சொன்ன காமீட்டீ அமைப்பதில் தாமதம். இறுதியில் ஸ்ரீ செல்வ விநாயகர் பெயரில் வங்கி கணக்கு திறப்பதில் தாமதம்.

பார்த்திபன் சார் பதில் சொல்வீர்களா? வரும் காலங்களில் இப்படித்தான் முடிவுகள் எடுப்பீர்களா?

https://mkppando.com/புரிதல்-பற்றிய-ஒரு-5/

நிர்வாக முடிவுகள் எப்படி எடுக்கப்பட வேண்டும்

ஒரு உதாரணம்:

நான் காளையார் கோவிலில் ஒரு தங்கும் விடுதி கட்டி, பார்த்திபன் சாரை நிர்வகிக்க சொல்கிறேன். அவர் சம்பளத்துக்கோ அல்லது நட்பு அடிப்படையிலோ நிர்வாகம் செய்ய ஆமோதிக்கிறார்.

ஆமோதிக்காமல் இருக்கலாம், ஆமோதிக்கலாம், அது அவர் சுதந்திரம். ஆமோதித்து விட்டால், முதலீட்டாளன் சொல்வதை புரிந்து முடிவுகள் எடுக்க வேண்டும்.

நான் முதலீடு செய்த விடுதிக்கு, மற்றவர் என்ன நினைக்கிறார் என்பது எனக்கு அவசியமே இல்லாத ஒன்று. எனது வாடிக்கையாளர் என்ன எதிர்பார்க்கிறார், அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லலாம்.

காளையார் கோவில் அம்பலாளர் என்ன நினைக்கிறார் என்பது கண்டிப்பாக எனக்கு அவசியம் இல்லை என்றாலும், பார்த்திபன் சார்க்கு அம்பலாளர் நினைப்பது அவருக்கு ஒரு முக்கியம் என்றால், அவரின் முடிவுகள் அம்பலாளர் என்ன நினைக்கிறார் என்ற மையத்தை வைத்து முடிவுகள் அமைந்தால், அவர் நிர்வாகத்துக்கு தகுதி இல்லை என்று பொருள்.

எங்கள் தொழிலில் இது போன்ற தகுதியற்றவர்களை என்ன விலை கொடுத்தாவது ஒதுக்கி விடுவோம்.

தேவர் மகன்

அந்த படம் என்னை பொறுத்தவரை, ஒரு மாபெரும் தலைமைத்துவ பாடங்கள். அது ஒரு கல்வி, தலைமைத்துவ பயிற்சி – பொழுது போக்கும் சினிமா அல்ல.

எது சரி என்ற மையத்தை வைத்து முடிவுகள் எடுப்பதிலும், யார் சரி என்ற மையத்தில் வைத்து முடிவுகள் எடுப்பதிலும் நிறைய வேற்றுமைகள் இருக்கும்.

கோவில் நிர்வாகம்

யார் சரி என்ற மையம் – சார்ந்த முடிவுகள் (நீ சொல்வது சரி இல்லை நான் சொல்வதுதான் சரி)

கமிட்டீ அமைப்பதில் அவர் கருது என்ன? பாலகிருஷ்ணன் கருத்து என்ன? சின்ன ஊருக்கு கமிட்டீ  தேவை இல்லை. இது யார் சரி என்ற மையத்தை வைத்து முடிவுகள் எடுப்பது.

எனது தந்தையார் இந்த வேற்றுமை தெரியாமல் செய்தது கட்டிய கோவில் பாழ் அடைந்தது. நிர்வாகம் மற்றவரை செய்ய விடவும் இல்லை, நிர்வாகம் தானும் செய்யவில்லை. என்னால் செய்யும் தகுதி இல்லை ஆனால் மற்றவனை நான் செய்ய விட மாட்டேன். மதிப்பும் மரியாதையும் அவனுக்கு பொய் விட கூடாது என்பது மருங்கூர் மக்களின் மையம்

அரப்பூர் கோவிலை டாக்டர் ராமச்சந்திரன் (பெரியவர்) 3,4,5 கும்பாபிஷேகம் அவர் தலைவராக இருந்து செய்தார். மருங்கூர் மாதிரி (சில நிமிட இன்ப சுகத்துக்கு வாழ்நாளை வீண் அடிப்பது போல்) ஒரு தேங்காய் மூடிக்கு நானா நீனா என்ற போட்டியில் 36 வருடம் ஒரு கும்பாபிஷேகமும் பண்ண முடியாதவர்கள் தனது ஆணவத்துக்கு தீனி போட்டுக்கொண்டனர்.

ஒரு வேலை எனது தந்தை தலைவராக இருந்து இருந்தால், அவர் மரு கும்பாபிஷேகம் செய்ய இல்லா விட்டாலும் அவர் வாரிசுகளுக்கு ஒரு வழி காண்பித்து இருப்பார். வாரிசுகள் செய்து வைத்து இருப்பார்கள்.

எது சரி (கோட்பாடுகளை சார்ந்த முடிவுகள்). நீ சொல்வதும், நான் சொல்வதும் முக்கியம் இல்லை, ஒவ்வொரு முடிவும் நாம் பொறுப்பேற்கும் தொழில், விடுதி, கோவிலை மேம்படுத்துமா?

சின்ன வீடு சினிமாவில் தனக்கு பிடிக்காத மனைவியிடம் இறக்கப் பட்டு அணுகிய பிறகு மனைவி அழுவாள். மனைவி மேல் ஆசை, அன்பு, காமம் தணிக்க வந்தால் கூட பெருமை. கேவலம் இறக்கப்பட்டு வந்தது மனம் வலிக்கிறது என்று ஒரு காட்சி வரும்.

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81

இதில் ஆழமாக புரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு செயலுக்கு பின் சரியான நோக்கம் உள்ளதா என்பதுதான்.

என்ன மாதிரி நோக்கம் அல்லது குறிக்கோள் உள்ளது?

கோவில் கட்டு என்று ஆரம்பித்து வாய்த்த பாலகிருஷ்ணன் பின் நோக்கம் என்ன?

சரியான நோக்கத்தை அடிப்படையாக உள்ளதா அல்லது பிள்ளையார் நாசமாக போனாலும் பரவாயில்லை, எனக்கு உள்ள மதிப்பும் பதவியும் வரவேண்டும் என்ற நோக்கமா?

உழைப்பு, பணம் போன்று கொடுக்கும் குணத்தை விட கெடுக்கும் குணம் இருக்கிறதா?

பார்த்திபன் மற்றும் கமிட்டீ மீது நம்பிக்கை – நிர்வாக மையத்தில் முடிவுகள் வருங்காலங்களில் எடுப்பார்களா? தனது ஊர் காரர்களை திருப்தி படுத்தும் மையத்தில் முடிவுகள் செய்வார்களா?

ஒரு வருடம் முன் எனது அன்பு சகோதரன் ஞான குரு என்னிடம் ஒரு உரையாடலில், “யாருங்க இவர் (சிவஞானம்)? எனக்கு இவர் யாருமே தெரியாதுங்க….” என்று கூறினார்.

அவர் எவராக இருந்தாலும் தெரிந்து கொள்ள அவசியம் இல்லைதானே. மலர்க்கொடி அம்மா, தனபாலன் ஐயா, தனசேகரன் ஐயா போன்றோர்கள் வேலை இல்லாதவர்கள். அவர்கள் அன்று பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தி தெரிந்து கொண்டார்கள்.

சிவஞானத்தை தெரிந்து கொள்வதால் நமக்கு என்ன பலன்? சிவஞானத்துக்கு தெரிந்தவர்கள் மணிகூண்டுக்கும், ரூம் கட்டவும், வங்கியில் பணம் போடுகிறார்கள்.

கேவலம் நான் போஸ்ட் செய்த விஷயத்தை சிவஞானம் ஷேர் செய்ததின் பலநாள், 25/3ல் ஒரு 10000 ரூபாய் கோவிலுக்கு ஒருவர் கேவலம் சிவஞானத்தை நம்பி பணம் போட்டு விட்டார்கள். அதை விட கேவலம் சிவஞானம் ரசீது கூட கொடுக்கவில்லை.

நமது மருங்கூரில், ரசீது புத்தகம் வாங்கினவர் பணம் கொடுங்கள் என்று குழுவில் பல முறை சொன்னது போல் சிவஞானம் சொல்லவில்லை. கேவலம் ஒரு முகநூல் போஸ்ட் பார்த்து தானே முன்வந்து கொடுக்கின்றார்.

மலேஷியா மக்கள் பிள்ளையாரை நம்புகின்றனர். அவர்களின் மையம் பிள்ளையார். மருங்கூர் எந்த திசையில் இருக்கிறது என்று தெரியாமல் 275000 கொடுத்த ரகுபதி எங்கே? கட்ட சொல்லி விட்டு. பேசிய பணம் கொடுக்காமல் ஐயரிடமும், போலீசிலும் கெடுதல் முயற்சி செய்த்தவர் எங்கே?

நம்பிக்கை

கோவில் பணத்தை ஆட்டையை போட்டு வீடு காட்டுகிறார் என்று கேவலமான சந்தேகம் எனக்கு வந்தது இல்லை.

தனது ஊர் காரர்களை திருப்த்தி படுத்தவும், அவர்கள் மனம் கோணிவிட கூடாது, போன்ற பின்னணி நோக்கத்தை வைத்துக்கொண்டதால் தான், சென்ற கும்பாபிஷேக தேதி வரை, கமிட்டீ அமைக்க முயற்சிகள் நடக்கவில்லை. இன்று வரை கோவில் வங்கி கணக்கு எண் வரவில்லை. இன்னும் முக்கிய நிர்வாக முடிவுகள் பற்றி ஆலோசிக்க வில்லை.

விளம்பரம், முகநூல், வங்கி, கமிட்டீ,கலப்பணி போன்ற நிர்வாக சம்பந்தமான அலுவல்களில் ஈடுபட ஆதரவு கொடுக்காதவர்களை புறக்கணித்துவிட்டு, வருங்காலங்களில் பிள்ளையாரையும், கோவில் நிர்வாகத்தையும் மையமாக வைத்து செயல் படும் திறன் இருக்குமா?

40 லட்ச ரூபாய் செலவு செய்து கோவில் கட்டி, எனது தந்தையார் செய்த அதே தவறு நடந்து விடாமல் இருக்குமா? 

எங்களை நம்பி பணம் கொடுத்தவர்கள், கோவில் சரியாக நிர்வகிக்கப்படும் என்ற ஆழமான நம்பிக்கையில் தருகின்றனர்.

கும்பாபிஷேகம் பெரிய விஷயம் இல்லை. தொடர்ச்சியான சிறப்பாக நிர்வகிப்பதே சிரமமான விஷயம்.

Leave a Reply