You are currently viewing மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது  அனுபவங்கள் பகுதி II பிப்ரவரி 2022 , அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
பணம், பற்றிய ஏமாற்றும் ஏமாறும் தத்துவம்

மாதம் ஒன்றிரண்டு வாழ்வின் எனது அனுபவங்கள் பகுதி II பிப்ரவரி 2022 , அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்

அனுபவங்கள் பகுதி II பிப்ரவரி 2022 – பரிணாம வளர்ச்சி & முன்னேற்றம்

நமது முடிவுகளில் பரிணாம முன்னேற்றமும் வளர்ச்சியும் உள்ளதா?

அனுபவங்கள் பகுதி II பிப்ரவரி 2022 – பரிணாம வளர்ச்சி & முன்னேற்றம் என்றால்?

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பது மட்டும் நினைவுக்கு சாதாரண மக்களுக்கு வருகிறது.

So…

உண்மையில் பரிணாம வளர்ச்சி என்பது நமது நடத்தை முதல் நமது முடிவுகள் எடுக்கும் திறன் வரை நுழைகிறது.

Thus…

டார்வின் தத்துவம் மனிதன் குரங்காயிருந்தான், கை கால்கள் பயன் படுத்தி நடந்தான். வால் இருந்தது. பரிணாம வளர்ச்சியின் பலன் வெறும் கால்களை பயன்படுத்தி நடக்க கற்றுக்கொண்டான்.

Additionally…

 பிறகு பல பல ஆயிரம் வருடங்கள் சென்று மனிதனுக்கு வால் என்ற பகுதி காணாமல் போனது. மறைந்து போனது.

டார்வின் கோட்பாடுகள் மேலும் தமிழில் அறிய இதை கிளிக் செய்யுங்கள்.

In truth…

நமது கலாச்சாரத்தில் பரிணாம வளர்ச்சி & முன்னேற்றம்

பசியை போக்கும் உணவு தேவைகள், மானம் காக்கும் உடைகள் தேவைகள், இயற்கை துன்பங்களையும், மற்ற உயிரினங்களின் துன்பங்களையும் தவிர்க்க இருப்பிடம். மேலும், ஆண் பெண் சேர்க்கை. (மிருகங்கள் மற்றும் மனிதன் அறிவு வரும் முன்பு இனவிருத்தி பற்றி திட்டம் போடவில்லை. இன விருத்தி இயற்கை அன்னையின் பக்காவான திட்டம்.)

மேற்கண்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி அடைந்த பின் தான் ஆன்மீக தேவை என்று மனித இனத்துக்கு மட்டுமே வருகிறது.

டார்வின் கோட்பாடுகள் மேலும் தமிழில் அறிய இதை கிளிக் செய்யுங்கள்.

அடிப்படையான பல இயற்கை அளித்த தேவைகள் தவிர, மற்றவை நமது காலத்தில் நிறைய மாறுகிறது.

மேலும் அறிய ஆராய இதை கிளிக் செய்க

உணவின் பரிணாம வளர்ச்சி நமது ஆயுளில் நிறைய பார்த்து விட்டோம். அன்றய மைசூர் பாக்கு கடிக்க கடினம். இன்று பஞ்சு போல் மாறி விட்டது.

பிஸ்சா. மற்றும் ஏகப்பட்ட உணவுகள் மனிதனின் உணவு வளர்ச்சியை காட்டுகிறது.

ஆடை அன்று அரை அம்மணம் ரோமன் நாட்டு கலாச்சாரம் முதல், நமது இந்தியா வரை இருந்தது. கௌபீனம் கட்டி 10, 15 நபர்கள் குளிப்பார்கள் மலேசியாவுக்கு பிழைக்க வந்த பழைய வியாபார மக்கள்.

 By the way…

இன்று அதை குற்றாலத்தில் கூட கட்ட அனுமதிக்கவில்லை. ஆனால், கேரள ஆயுர் வேதா மருத்துவமனையில் அது கண்டிப்பாக பயன் படுத்த வேண்டியுள்ளது.

ஹரே கிருஷ்ணா பக்தர்கள், அவசியம் அதைத்தான் உடுத்துகிறார்கள்.

இருப்பிடம் சொல்ல தேவை இல்லை. குகையில் வாழ ஆரம்பித்து, இன்று வசதிக்கு தக்க வீடுகள் கட்டிக்கொள்கிறோம்.

ஆண் பெண் சேர்க்கை. அன்று கடவுளை காரணம் சொல்லி, ஒரு மனைவிக்கு மேல் வைத்துக்கொண்ட ஆண்கள் இன்றும் உண்டு.

So…

சில நாட்டில் பாஞ்சாலி போல் பல கணவன்கள் வைத்த கலாச்சாரம் இருந்தது. ஒரு நாட்டில் சொத்தை தனது குடும்பத்தை விட்டு போய்விடாமல் பாதுகாக்க சகோதர சகோதிரி மனம் முடிக்கின்றனர்.

தமிழ் நாட்டில் அக்கா மகள், மாமன் மகள் மனம் முடிப்பதும், வேறு சில கலாச்சாரத்தில், சிற்றப்பா சித்தி மகள் மனம் முடிப்பது சரி என்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், இயற்கை அன்னை ஏற்படுத்திய அடிப்படை தேவையை மாற்ற இயலவில்லை. உதாரணங்கள், சாப்பிடாதே, தங்க இடம் கூடாது, ஆண் பெண் சேர்க்கை கூடாது போன்ற சட்டம் இயற்றினாலும் இயங்காது.

Impotantly…

சர்வ சுதந்திரம் எத்தனை அவசியம் என்று ரோமன் நாட்டு அடிமைகள் சம்பந்த சில நெட்பிலிக்ஸ் சீரியல் பார்த்தால் தெளிவாக புரிந்துவிடும்.

அந்த அடிப்படை தேவையை வைத்து, மனிதன் பல சட்டங்களும், நியதிகளை உருவாக்குகிறான்.

தனிமனிதனுக்கு உணவு இல்லையேல், ஜகத்தினை அழித்திடுவோம் என்கிறார் பாரதி.

இந்த தேவைகளை வைத்து தொழில் நிர்வாக முடிவுகள் எடுக்கப்படுகிறது.

ஒரு உதாரணம், இந்த 50, 60, 70 ஆண்டுகளில், எந்த மலேஷியா வாழும் தொழில் வளர்கிறது என்பதை ஆராய்ந்தால்?

In result…

  பழைய தொழில் இன்று குடும்பத்தை மலேசியாவில் அமைத்தோ, அல்லது பெண்ணை இறக்குமதி செய்து அமைத்துக்கொண்ட உறுப்பினர்களின்  தொழில் மட்டும் தான் வளர்கிறது அல்லது உயிர் வாழ்கிறது.

நிறைய தொழில்கள் செத்துப் போய் விட்டது. இன்னும் சில செத்துக்கொண்டு இருக்கிறது. அன்று எடுத்த முடிவுகள் பல தொழில்களை சாகடித்தது. சிலரின் அன்றய மாற்று முடிவுகள் இன்று உயிர் வாழ வைக்கிறது.

நான் சொல்வதே சரி என்ற வயது அடிப்படையில் எடுக்கும் முடிவுகளை கேட்டு நடப்பது மிக ஆபத்தானது. அது மட்டும் உண்மை.

பிப்ரவரி முதல் பகுதியை படிக்க கீழ் உள்ள லிங்க் கிளிக் செய்க

இதில் எப்படி குடும்பம் முதல் தொழில் வரை பிரச்சனைகள் உருவாகிறது? ஏன் உருவாகிறது?

ஜனவரி 2022ல் எழுதிய அனுபவங்களை படிக்க கீழ் உள்ள ஒவ்வொரு லிங்க் தனித் தனியாக கிளிக் செய்த்தால் படித்து அறியலாம்.

1, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
2, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்
3, அதை பற்றிய மனரீதியான ஒரு ஆராய்வும்