புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 11-சுயநல யுக்தி

சுயநல யுக்தி என்பது நமது ஆழ் மனதில் இருக்கும் ஒரு திறன்.

மன்னன் ஆண்ட காலங்களில் தனது வால் அணைத்து மக்களையும் பயமுறுத்தி வழிநடத்தியது. மனிதன் சர்வ சுதந்திரமாக வாழ முடியவில்லை.

மனித மனம் எப்படி யுக்தி செய்கிறது என்பதை உணர, ஆழ்ந்த புரிதலை எனக்கு நிறைய தர வைக்கிறது எது? நூல்களும், சினிமாவும், சில தரமான ஹிந்தி மற்றும் ஆங்கில சீரியல்களும்தான்.

 

Anand Neelakantan
Anand Neelakantan

இதில் இப்பொழுது நான் படிக்கும் நாவல், பாகுபலி. முதல் பகுதி தமிழில் படித்தேன். அது படித்து இரண்டு ஆண்டுகள் இருக்கும். பிறகு தமிழில் 2, 3 ம் தமிழில் அதிக நாட்களாக மொழி பெயர்க்கப்படவில்லை.

 

 

2ம் பாகம் ஆங்கிலத்தில் படித்து வருகிறேன்.

Chaturanga (Baahubali: Before the Beginning Book 2)
Chaturanga (Baahubali: Before the Beginning Book 2)

 

“நாம் அடிமை, ஆகையால் அடிமையின் கடமை எதுவோ அதை செய், பலனை எதிர்பார்க்காதே”

பாகுபலி படம் பார்ததவர்கள் (சத்யராஜ்) கட்டப்பா மீது ஒரு நல்ல அபிப்பிராயம் வரும். ஆனால் முழுமையாக புரிய வேண்டுமானால், பாகுபலி படிக்க வேண்டும்.

கட்டப்பா தம்பி நீலப்பா என்று நினைக்கிறேன், சர்வ சுதந்திரம் விரும்பி.

ஒரு முறை இளவரசன் தேரிலிருந்து இறங்கும் போது நீலப்பா இறங்கும் படியாக நாய் போல் மண்டியிட்டு இருப்பான். இளவரசன் பாரம் தாங்காமல் நீலப்பா மற்றும் இளவரசன் விழுக, பிறகு…

நீலப்பா மற்றும் கட்டப்பாவின் தந்தை தனது மகன் இளவரசனை விழுக வைத்து விட்டதால், சவுக்கால் அடிக்க வேண்டிய நிலை.

அந்த கட்டப்பா பரம்பரையே மஹிஷ்மதி நாட்டுக்கு அடிமை. கட்டப்பா தந்தை அறிவுரை சொல்லுவார், “நாம் அடிமை, ஆகையால் அடிமையின் கடமை எதுவோ அதை செய், பலனை எதிர்பார்க்காதே”

கடரிமண்டலம் கலாச்சாரம் மாற்றப்படுகிறது

 

பாகுபலி 2ம் பாகத்தில், கடரிமண்டல நாடு, மஹிஷ்மதியை ஆட்சி செய்து, இப்பொழுது மஹிஷ்மதி வலுவாக உயர்கிறது.

சிவகாமி, (ரம்யா கிருஷ்ணன்) இளம் பெண். அந்த காலக்கட்டத்தில், கடரிமண்டலத்தில் ஆண்கள் குடும்பத்தை பார்க்கவும், பெண்கள் ஆட்சி செய்வதும் வழக்கத்தில் இருந்தது.

அந்நாட்டில், பெண்கள் நிறைய கணவன் அல்லது ஆணை வைத்துக்கொள்ளலாம். இது பிறகு, அவனுக்கு பிறந்தவன் அவன், இவனுக்கு பிறந்தவன், இவன். எனது சொத்து அல்லது ராஜ்ஜியம் யாருக்கு கொடுப்பது போன்ற பிரச்னை இருந்தது.

உடனே அந்த நாட்டில் ஒரு பெண் ஒன்றுக்கு மேல் கணவனோ, அல்லது ஆணை கீப்பாக வைத்துக்கொண்டால், தலை துண்டிப்பதை சட்டமாக்கினார்கள். 100 ஆண்டுகள் காலத்து, ஓரளவு அது போன்ற பிரச்னை குறைந்தது.

இதில் நாம் தெரிய வேண்டியது, பிரச்சனை இருக்கிறது என்பதும் சட்டம் போட்டு கலாச்சாரம் மாற்றப்படுகிறது.

நமது காலத்தில் கலாச்சாரம் மாறுகிறதா?மாறுகிறது.

எனது திருமண காலத்தில், பெண்ணை மாப்பிள்ளையோ, மாப்பிள்ளையை பெண்ணோ திருமணம் முன் பார்ப்பது ஒரு கொலை குற்றமாக கருதப்பட்டது.

இன்று அப்படி இல்லை. கடின மனம் படைத்தவர்கள் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

தேவை மாறும்பொழுது கலாச்சாரம் மாறுகிறது. 80 களில், பெண் சுடிதார் போடுவது குற்றம், மோட்டார் ஓட்டுவது குற்றம்,

நமது பார்வையில் எத்தனை மாற்றங்கள், வித்தியாசங்கள்?

Anand Neelakantan
Anand Neelakantan

 

ஆனந்த் நீலகண்டன் ஒரு புரட்சிகரமான சிந்தனையாளர். அவரின் நூல் எதையும் நான்படிப்பவன்.

ஆனந்த் நீலகண்டன் ஒரு புரட்சிகரமான சிந்தனையாளர். அவரின் நூல் எதையும் படிப்பவன்.

அவர் எழுதிய கௌரவன் படித்தேன். அது மஹாபாரதம், கௌரவன் பார்வையில் எழுதப்பட்டது.

முதலில், பாண்டவர்கள் ஜெயித்தாலும், அவர்கள் யாருமே அவரின் தந்தை (மஹாராஜா வுக்கு) பிறக்கவில்லை. அந்த நாட்டு உண்மையான வாரிசு கௌரவன் தான். கௌரவன் தந்தை மூத்தவர், ஆனால் பிறவிக்குருடு, அதனால் பாண்டவர்களின் அம்மா குந்திதேவியின் கணவன் மஹாராஜாவானார்.

ஆனால் அந்த மகாராஜாவுக்கு பிறக்கவில்லை பாண்டவர்கள். ஜெயிப்பவர் ஹீரோ என்று நினைக்கிறோம்.

துரியோதனனுக்கு உதவிய தலைவர்கள், மகான்கள் பீஷ்மர், கர்ணன், துரோணாச்சாரி போன்றவர்களுக்கு அறிவே இல்லையா?

மருங்கூர் கலாச்சாரம் மாறவேண்டுமா? தேவை இல்லையா?

36 வருடங்கள் முன்பு இருந்த மருங்கூர் கலாச்சாரம் இன்று பொருந்துமா?

36 வருடங்கள் முன்பு எனக்கு தேங்காய், துண்டு, உனக்கு தேங்காய், துண்டு என்று சண்டை போட தெரிந்த மனமே உனக்கு செயல் படுத்த தெரியாதா?

அன்று, செலவும் செய்யவில்லை, கோவிலை செயல் படுத்தவும் இல்லை.

 

இன்று பூஜை,

இப்படி செயல்  படுகிறது.

இன்று செயல் படுத்துபவர்கள், துண்டையும், தேங்காயையும், தூக்கி எரிந்து விட்டு, தனது கையிலிருந்து செலவு செய்து செயல் படுத்துகின்றனர். இவர்கள் அல்லவா செயல் வீரர்கள்?

அவசியமானால், நமக்கு சுதந்திரமாக வாழ இடையூறாக இருக்கும் கலாச்சாரத்தை தீ வைத்து கொளுத்துவதும் தவறு இல்லை.

 

MKP Pando
MKP Pando

இப்படிக்கு                                             

MKP பாண்டுரங்கன்

 

 

Leave a Reply