You are currently viewing புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 12-டீ கடையில் ஒரு வீண் பேச்சு
Balakrishnan

புரிதல் பற்றிய ஒரு புரிதலும் அதன் அவசியமும் 12-டீ கடையில் ஒரு வீண் பேச்சு

டீ கடையில் வீண் பேச்சு வெட்டிப்பேச்சும் 

டீ கடையில் வீண் பேச்சு  ம் வெட்டிப் பேச்சும் பேசும் நபர்களை பொதுவாக வேலை வெட்டி இல்லாதவன் என்பார்கள்.

உண்மையில் வயதானவர்கள், குழந்தைகள் சம்பாதிக்கும் வேலை செய்வதில்லை.

குழந்தைகள் விளையாடி தன்னை வளர்த்துக்கொள்வார்கள்.

முதியவர்கள், நல்ல தரம் வாய்ந்தவர்கள் பாகவதம், ராமாயணம், போன்ற முக்தி தரும்/நோக்கும் நூல் படிப்பது, அல்லது கேட்பது போன்ற செயல்கள் செய்வார்கள்.

டீ கடையில் வீண் பேச்சு ம் வெட்டிப்பேச்சும்…..

ஒரு மனிதன் வாய் திறந்தால்தான் தரமான மனிதனா அல்லது நார மனிதனா என்று அறிந்து விடலாம்.

டீ கடையில் வீண் பேச்சு பேசும் கருத்துக்களும், விஷயங்களும் தான் பேசுபவரின்   தரத்தை வெளிப்படுத்தும்.

உருவாக்குதல் திறமையும், அலிக்கும் என்ற உருப்படாத விளங்காத திறமையும்.

டீ கடையில் உட்கார்ந்து, தனக்கு என்று ஒரு உருப்படாத கூட்டம் வைத்துக்கொண்டு, அவன் நல்லவன் அல்லது கெட்டவன்.

அவள் அழகானவள்/அழகில்லாதவள்.

அவன் அவளிடம் போனவன்/போகாதவன்.

அவன் ஆண்மை உள்ளவன்/இல்லாதவன்.

அவன் பணத்திமிர் பிடித்தவன்/பணிவானவன்.

போன்ற தீர்மானிக்கும் வேலை யாருக்கும் பயன் இல்லை. தனக்குமில்லை, மற்றவர்களுக்கும் பலன் இல்லை.

பெரிய பெரிய தொழில் கூட்டம் எங்கே நடக்கும்? 5 ஸ்டார் ஓட்டலில் நடக்கும்.

மீட்டிங் மிக முக்கியம், திருடர்களும், அயோக்கியர்களும் மீட்டிங் போட்டுத்தான் செயல் படுகிறார்கள்.

கோவில் கட்டி கும்பாபிஷேகத்தை தடுக்கவும் மீட்டிங் அவசியம் தான்.

மாபெரும் தொழில் உருவாக்க, நாட்டை நிர்வாகம் செய்ய, கோவிலை உருவாக்கவும் மீட்டிங் அவசியமாகிறது.

ஒரு நெல்லை போட்டு, பல நெல்லை உற்பத்தி செய்வது உருவாக்கம் என்ற செயல். பிள்ளைக்கு திருமணம் செய்து, பேர பிள்ளைகள் வருவது குடும்ப விருத்தி அல்லது உருவாக்கம் என்று பெயர்.

எனது தந்தை 0 முதலீட்டில் , ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கியது, உருவாக்கம் என்று பெயர்.

திருடுவது, கற்பழிப்பது, கோவிலுக்கு கெடுதல் செய்தல் என்பது அலித்தல் என்று பெயர். நாசம் செய்தல் என்று பெயர்.

பாலகிருஷ்ணன் டீ கடையில் பேசினாரா?

டி கடையில் வீண் பேச்சு

பாலகிருஷ்ணன் டீ கடையில், “இவனுங்க அடிக்கடி பூஜை போன்ற விஷயங்கள் செய்றானுங்களே, பணம் எப்படி வருகிறது? எத்தனை நாளைக்கு செய்ய முடியும்? சாவி இவனுங்களே எத்தனை நாளைக்கு வைத்துக்கொண்டு….?”

இப்படி பேசியதாக கேள்விப்பட்டேன். மலேசியாயாவிலிருந்து நான், அவர் உண்மையில் பேசியிருக்கலாம், பேசாமலும் இருந்து இருக்கலாம் என்று தான் யோசிக்க முடியும்.

தீ இல்லாமல் புகயாது என்பார்கள். சரி, அவர் பேச வில்லை என்று நான் எடுத்துக்கொள்கிறேன்.

ஆனால் வேறு யாரும் பேசி இருந்தாலும் சரி, மனத்தால் நினைத்து இருந்தாலும் சரி, அல்லது வருங்காலத்தில் பேச விரும்பினாலும் சரி.

நான் முன்கூட்டி பதில் சொல்வதற்கு கடமை பட்டுள்ளேன்.

நாடோடி மன்னன் பாட்டில் பல கருத்துக்கள் இருந்தாலும், நாம் எத்தனை பேருக்கு புரியும் என்பது கேள்விதான். இன்றய முக்கியமாக காதல் பட பாட்டு வரிகள், அந்த கட்சிக்கு கூட பொருந்தாது.

MGR பாடியது, அந்த காட்சியை தாண்டி, பல வாழ்வியல் அனுபவங்களுக்கும் பொருந்தும்.

உதாரணம் பார்ப்போம்.

“..நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்

நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் –

சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு

அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்..”

வெறும் கல்லாய் இருப்பவன் என்று பொருள்

ஆங்கிலத்தில் “adapt” என்று ஒரு வார்த்தை. இந்த கருத்துக்களை இந்த வரிகளை அடாப்ட் செய்து பார்த்தல் பல உண்மைகள் புரியவரும். அதாவது போதிய சிந்திக்கும் அறிவு இருந்தால் மட்டும்தான் புரிய வரும்.

டீ கடையில் உட்கார்ந்து வெட்டிப்பேச்சு பேசுபவனுக்கு தூங்குபவன், அல்லது வெறும் கல்லாய் இருப்பவன் என்று பொருள். அப்படி அடாப்ட் செய்தால் தெளிவாகும்.

வீண் பொழுது கழிப்பவனுக்கு, தனக்கோ, அல்லது மற்றவருக்கோ அவனால் எந்த பலனும் இருக்காது.

வாழ்வே வேண்டாம் என்பவர்கள் பலர் ஆஷ்ரமங்களில் சேர்ந்து, யோகா, பக்தி மார்க்கம் என்று மற்றவர்களுக்கு சேவை செய்கின்றனர்.

கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான்

மற்றொரு உதாரணம்:-
“..கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் “

ஒவ்வொரு மனிதனும் எது அவன் கடமை எது என்று உண்மையில் யோசிக்கிறானா?

டீ கடையில் அவன் அப்படி, இவன் இப்படி என்று தீர்மானிக்கும் முட்டாள்தனமான ஆர்வத்தை, திசை திருப்பி தனது கடமை என்ன என்று யோசிக்கின்றானா? அந்த ஆர்வத்தை, தனது முன்னேற்றத்துக்கு செலவு செய்கின்றானா?

போதிய அறிவு உள்ளவன், திருடுவது, கற்பழிப்பது, ஒரு மரத்துக்காக மற்றவனுக்கு ரத்த காயங்கள் உருவாக்குவது தனது கடமை என்று நிர்ணயம் செய்ய மாட்டான்.

மேல் உள்ளவை கிரிமினல் குற்றங்கள். கிரிமினல் அல்லாத குற்றங்கள், அதாவது கும்பாபிஷேகத்தை தடுக்க ஐயரை மிரட்டுவது, ஊரே விரும்பி சாப்பிட உட்காரும் பொழுது, மண்ணள்ளி போடுவது போன்ற செயல்களும் தனது கடமை என்று நிர்ணயம் செய்ய மாட்டான்.

தூங்காதே தம்பி தூங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே –
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே

தூங்காதே தம்பி தூங்காதே –
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே

நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக்கதவும்
சக்தி இருந்தால் உனைக்கண்டு சிரிக்கும்
சத்திரம்தான் உனக்கு இடம் கொடுக்கும்

தூங்காதே தம்பி தூங்காதே –
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே

நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கழிப்பவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன் தானும்கெட்டார் –
சிலர்அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்து விட்டு
அதிர்ஷ்டம் இல்லை என்று அலட்டிக்கொண்டார்
விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்
உன்போல் குறட்டைவிட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்

தூங்காதே தம்பி தூங்காதே –
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே

போர்ப் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான் –
உயர்பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதலிழந்தான் –
கொண்டகடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் –

சிலபொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் –
பலபொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா

தூங்காதே தம்பி தூங்காதே –
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே

பணம் எப்படி வருது?

பணம் கண்டிப்பாக, டீ கடையில், உரை பற்றியும், உலகத்தை பற்றியும், தனக்கு தெரிந்த கிணற்றுத் தவளை தனமான அறுவை வைத்து, அவன் அப்படி, இவன் இப்படி என்று பேசிக்கொண்டு இருப்பதால் கண்டிப்பாக வராதுதான்.

அதே மருங்கூரில், சிலர் அரட்டை அடிக்கும் வேலையில், பலர் பணம் தேடி, கோயம்பத்தூர், சிங்கப்பூர் என்று சென்றவர்கள் இல்லையா?

தனது அடுத்த தலைமுறை, என்னை விட நல்லா இருக்கணும் என்று தனது பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளிக்கும் சாபங்கள் பெறாமல், ஆசீவாதங்கள் பெற சொல்லிக்கொடுக்கும் தந்தையர்கள் மருங்கூரில் இருப்பதால் தான், இன்று வெளியுயூரிலும், வெளி நாட்டிலும் ஜொலிக்கின்றனர்.

புகழ், மதிப்பு என்பது கேட்டு வாங்குவது கேவலமான செயல்

நிறைய பொது உதாரணங்கள் சொல்ல முடிந்தாலும், நாம் கோவிலுக்கு வருவோம்.

புகழ், மதிப்பு என்பது கேட்டு வாங்குவது கேவலமான செயல். அது ஜெயிக்காது.

36 ஆண்டுகளுக்கு முன் எனக்கு மாலை, எனக்கு மரியாதை, என்று வாங்கி, என்ன கிழிக்க முடிந்தது? அந்த கோவிலுக்கு வருடம் ரூபாய் 2000-5000 வரை மட்டும் செலவு செய்து, ஒரு சதுர்த்தி நடந்ததாக கேள்வி பட்டேன்.

(2021) 48 நாள் பூஜை முடிந்து, அவர் பிறந்தநாள், இவர் பிறந்தநாள் என்று குறைந்தது ரூபாய் 50000/= அன்னதானம் நடந்து இருக்கிறது. இவைகள் ஜூன் முதல் இன்று வரை 3 மாத இடைவெளியில் நடந்து உள்ளது.

 2 அல்லது 3 சிறிய கும்பாபிஷேகம் செய்து இருந்து இருந்தால்

கோவில் ஸ்தாபகரை விரட்டி விட்டது கூட நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளலாம்.

டீ கடையில் வெட்டிப்பேச்சு பேசியவர்கள், ஒருங்கிணைந்து, சிறப்பாக நிர்வாகம் செய்து, மராமத்து வேலைகள் பார்த்து 2 அல்லது 3 சிறிய கும்பாபிஷேகம் செய்து இருந்து இருந்தால். முழுமையாக ஏற்றுக்கொள்ளலாம்.

இன்றய கமிட்டீ நிர்வாகிகள், புல்லை புடுங்குகிறார்கள், புது செடி வைக்கிறார்கள். செயல் படுகிறார்கள்.

நான் எந்த “ம”னாவை புடுங்கினேன் என்று ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, டீ கடையில் உட்கார்ந்து, பேசுவது குறைந்தபட்சம் நான் நாரப்பயல் இல்லை என்பதாக நிருபிக்க அமையும்.

மக்களை ஒருங்கிணைக்க முடியும்?

இன்றய நிர்வாகிகள் தன்னுடைய பட்ஜெட் அனுமதித்தால், திருவிழா நடத்துவார்கள், இல்லாவிட்டால் வசூல் செய்து நடத்துவார்கள். அதுவும் கிடைக்காவிட்டால், இருக்கிற பூவை போட்டு பூஜை செய்வார்கள்.

45 முதல் 50 லட்ச செலவில் கோவில் கட்டிவிட்டு, சாக அடிக்க மாட்டார்கள்.

அதாவது செயல் படுவார்கள், செயல் படுத்துவார்கள். அவர்கள் பேசுவதை ஊரே கேட்கிறது.

டீ கடையில் பேசுவது, டீ குடிப்பவர்கள் கேட்கலாம். அவர் பேசுவதை ஊரில் எத்தனை பேர் கேட்கின்றனர்?

எனது வீடு வடக்கு, கிழக்கு, தெற்கு,மேற்கு திசைகளில் வாழும் அனைவரும் எனக்கு ஆகாது, என்றால் எப்படி மக்களை ஒருங்கிணைக்க முடியும்?

இதெல்லாம் கேட்கவோ, பேசவோ தனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தனக்குள்ளே முதலில் கேட்டுக்கொண்டு பேசுவது நல்லது.

கும்பாபிஷேகத்தை கெடுப்பது எப்படி?  தனக்கு மரியாதை வாங்குவது எப்படி?  என்று யோசித்த மனம், எப்படி 10 நபரிடம் வசூல் கோவிலுக்கு செய்யாத மனம் கொண்ட மனிதர்களுக்கு கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இன்றய நிர்வாகிகளுக்கு இல்லைதான்.

என் எனில் மேலே ஓஷோ சொன்னதுபோல் வீண் பேச்சு பேசவே பிறந்தவர்கள் நிறைய.

மேல மருங்கூர் மக்களுக்கு ஓர் அழைப்பு

மேல மருங்கூர் மக்களுக்கு கருது சொல்ல ஓர் அழைப்பு. நானே இந்த blog எனப்படும் பகுதியில் எழுதி வருகிறேன்.

அதனால் நான் சொல்வதே எல்லாம் சரி என்று அர்த்தம் இல்லை.

மருங்கூர் மக்களை எழுத அழைக்கிறேன். எழுதுங்கள் நான் எனது blog ல் பிரசுரிக்க தயார்.

எழுதுங்கள். நான் 8 பேருடன் ஐயரை கும்பாபிஷேகம் வர விடாமல் தடுத்ததின், நோக்கம், அதன் ஞாயம் எழுதுங்கள். அது சரி என்று எழுதுங்கள். பிரசுரிக்கிறேன்.

36 ஆண்டுகளுக்கு முன் தேங்காய் சண்டையின் ஞாயத்தை பற்றி எழுதுங்கள். உலகத்துக்கு தெரியட்டும்.நான் பிரசுரிக்கிறேன்.

கீழே எழுதியவர் பெயர், தொலைபேசி எண், ஊர் முகவரி கொடுங்கள். நான் பிரசுரிக்கிறேன்.

“எந்த “ம” னாவை….” என்று மேலே எழுதியது தப்பு என்று தெரிந்து தான் எழுதியுள்ளேன். தெரிந்து செய்வதுதான் தப்பு என்று பெயர்.
அதில் ஞாயம் இல்லாமையை பற்றி எழுதுங்கள், முகவரியுடன். பிரசுரிக்கிறேன்.

அவரும், நானும் செய்த தப்புகளை சுட்டி காண்பிக்க அணைத்து மக்களையும் வரவேற்கிறேன்.

ஒரு முறை கும்பாபிஷேகம் முன்பு எனது தம்பியுடன் பாலகிருஷ்ணன் பேரன் கெட்ட கெட்ட வார்த்தைகளில் பேசி சண்டை போட்டுக்கொண்டதாக கேள்வி பட்டேன்.

பாலகிருஷ்ணன் பேரன் மற்றும் பாலகிருஷ்ணன் மகன் நிறைய எழுத நேரடியாக அழைக்கிறேன்.

எனது தம்பி செய்த தவறுகளை எழுதுங்கள். எழுதுவது அறிவு பூர்வமானது.

பாலகிருஷ்ணன் பேரன் 18 வயதுகூட இல்லை என்று கேள்வி பட்டேன். அந்த பையன் பேசிய வார்த்தைகள், அந்த பையன் மேல் எப்படிப்பட்ட மதிப்பு மற்றவரிடம் இருந்து வரும்?

எந்த மாதிரி தரத்தில் வளர்ந்தவன் என்று மற்றவர்கள் கணிப்பார்கள்.

ஒரு வேலை, இது போன்ற பையன்கள் ஆக்கிரமிக்கும் கிராமமாக இருந்தால், ஸ்ரீ செல்வ விநாயகர் எனக்கு பல கோடி லாபமாகரமாக தொழிலை வழிநடத்த முடிந்தாலும், இந்த கிராமத்தை நம்பி மறு கும்பாபிஷேகத்துக்கு கண்டிப்பாக நான் மட்டும் அல்ல, யாரும் பணம் கொடுக்க முன்வர மாட்டார்கள்.

ஸ்ரீ செல்வ விநாயகர் மிக சக்தி வாய்ந்தவர்தான். எனது தந்தை மாட்டிக்கொண்டது போல, என்னை வழிநடத்தி, தரமான ஒருங்கிணைப்பு செய்யும் திறமை உள்ளவர்களிடம் என்னை சிக்க வைத்தார்.

நான் முதல் முதல் நினைத்தது, பாலக்ரிஷ்ணனை வைத்து கோவில் கட்டி விடலாம் என்று நினைத்தேன்.

ஒரு தோலை பேசியில் பதில் பேசும் திறமை கூட இல்லாத மனிதனிடம் கொடுத்து இருந்தால் என்ன ஆயிருக்கும்.

பாலகிருஷ்ணன் பேரன் போன்ற நபர்களை நம்பி 45 லட்சம் வசூல் செய்து இருந்தால் என்ன ஆகி இருக்கும்.

இதல்லாம் புரிய, சற்று அறிவு இருக்க வேண்டும்.

எனக்கு தெரிந்து, எனது தம்பிக்கு, எனது தந்தையின் சொத்தில் ஒரு சிறிய பகுதி தவிர நிலம், விவசாயம், ஆடு, மாடு எதுவும் அவருக்கு மருங்கூரில் இல்லை.

அவர் கோவில் கட்ட அவர் பணம் மற்றும், பல வசூல் செய்து கொடுத்தது எனக்கு தெரியும்.

அவரும், நானும் செய்த தப்புகளை சுட்டி காண்பிக்க அணைத்து மக்களையும் வரவேற்கிறேன்.

எந்த அடிப்படையில் மருங்கூர் ஞாயம் செயல்படுகிறது

எனக்கு ஞாயம் ஆழமாக புரிந்து கொள்ள ஆர்வம். சுற்று வட்டார கிராமத்துக்கு நமது மருங்கூர் ஞாயத்தை நோட்டீஸ் அடித்து விளமபரம் செய்யவும் ஆர்வம்.

அக்கா மகளை கட்டுவது நமது கலாச்சார ஞாயம். இன்னொரு மாதத்தில், இது தவறு, சித்தப்பா மகளை கட்டுவது தனது கலாச்சார ஞாயம் என்கின்றனர், வின்ஞான ஞாயம் உறவே கூடாது என்கிறது.

லாயர் கூட, ஈபீகோ இதனாவது செச்டின் படி இது ஒரு குற்றச்செயல் என்று நீதி பதியிடம் பரிந்துரைப்பார்.

எந்த அடிப்படையில் மருங்கூர் ஞாயம் செயல்படுகிறது என்று அறிந்து கொண்டாலே நானும் வரம் காலங்களில் புரிந்து செயல் படலாம்.

கோவில் கட்ட சொன்னவர், கோவில் மற்றும் கும்பாபிஷேகத்தை இடையூர் பல் செய்ததை என் தம்பி கடுமையாக சாடினார். அதற்கு பாலகிருஷ்ணன் பேரன, அதாவது அந்த ஊருக்கும் சம்பந்தம் இல்லாத நபர், அந்த கோவிலுக்கும் சம்பந்தம் இல்லாத நபர், அவர் குடும்பத்தில் கேட்டு கற்றுக்கொண்ட கேட்ட வார்த்தைகளில் பேசியுள்ளான்.

அது 100% சரி என்று பாலகிருஷ்ணன் குடும்பத்தார் எழுதினால், நான் பிரசுரித்து, எனது செலவில் நோட்டீஸ் அடித்து சுற்று கிராமத்துக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்கிறேன்.

மகாத்மா காந்தி பல இன்னல்களை அடைந்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்தார். பாலகிருஷ்ணன் பேரன், பல ஆசிர்வாதம் வாங்க வேண்டிய வயதில், பலரின் சாபம் பெற்று, என்ன சாதித்து, தர முயன்றான் என்பது எனக்கு ஆழமாக புரிந்து கொள்ள மிக்க ஆர்வமாக இருக்கிறேன்.

இதல்லாம் செய்யும் காரணம்:-

1) மருங்கூர் ஞாயம் புந்துகொள்ள
2)எனது தம்பிக்கு எதிராக செயல் பட.
3)பாலகிருஷ்ணன் இடையூர் செய்ததும், அவர் பேரன் பேசியதும் 100% சரி என்று மருங்கூர் மக்களுக்கு, சுற்று கிராமத்து மக்களுக்கும் புரிய வைக்க ஏற்பாடு செய்ய விரும்புகிறேன்.

MKP Pando

இப்படிக்கு

MKP பாண்டுரெங்கன்

Leave a Reply