MKP Pando
Napoleon Hill Works 2 is more about my life experience.
Additionally, Napoleon Hill Works 2 elaborate, my born village people psychology.
10 வித உந்து சக்தி
நெப்போலியன் ஹில் 10 வித உந்து சக்தி பற்றி கூறியுள்ளார்.
கொலை, தாஜ் மஹால் கட்டுதல், கற்பழிப்பு, சம்பாதித்தல் போன்ற மனித செயல் எதுவாக இருந்தாலும் அவர் கூறிய 10 உந்துதலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உந்து சக்தி இயக்குகிறது.
இதெல்லாம் நாம் புத்தகத்தின் வழியாகவோ, அல்லது பல ஆயிரம் செலவு செய்து நேரடி பட்டறையிலோ, அல்லது பல ஆயிரம் செலவு செய்து தபால் வழி கோர்ஸ் எடுத்து படிக்க வேண்டிய அவசியம் என்ன?
Human activities are inspired by one or more of the following 9 basic motives:
- The Emotion of Love
- The Emotion of Sex or Sexual Urge
- The Desire for Material Gain/Financial Gain
- The Desire for Self-Preservation
- The Desire for Freedom of Body and Mind
- The Desire for Self-Expression
- The Desire for Perpetuation of Life after Death
- The Emotion of Anger/Revenge
- The Emotion of Fear
மற்றவரின் உந்து சக்தி தெரியாவிட்டால், நாம் பாலி கடாவாகி விடுவோம்.
மற்றவரின் உந்து சக்தி தெரியாவிட்டால், நாம் பாலி கடாவாகி விடுவோம்.
இது Napoleon Hill Works 2 படித்தவருக்கு தெரியும்
கற்பழிப்பு என்றால் ஒருவனின் இச்சையை தீர்க்க, பெண்ணின் அனுமதி இன்றி பலாத்காரம் செய்தல் என்று பொருள். அதற்கு அரசாங்கம் தண்டனை தருகிறது.
நான் பதவியில் பெரியவன். சாதியில் உயர்ந்தவன், எனக்கு முன் யாரும் மேலாடை மற்றும் செருப்பு பயன்படுத்த தடை விதிக்கிறேன் என்றால் என்ன? மனோவியல் ரீதியாக பலாத்காரம் போன்ற ஒரு செயல்தான்.
எனது தற்புகழ்ச்சிக்காக, எனது பெருமையை நிலை நாட்ட, மற்றவர்களை துஷ்பிரயோகம் செய்கிறேன்.




நெப்போலியன் ஹில் அவர்களின் கோட்பாடுகள் விளக்க எளிது இல்லைதான்.
7 வது உந்துதல் ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்வோம்:
பழிக்கு பழி வாங்குவதில் விருப்பம்.
அது முன்னேற்றம் அடையாத மனங்களில் இருக்கும் ஒரு உந்து சக்தி.
முன்னேறாத வீனா போன மனங்களில் இயக்கம் உந்து சக்திக்கு நாம் ஏன் பலியாக வேண்டும்?
பாலகிருஷ்ணன் மகன் சொன்ன காரணம் என்ன?
புளிய மரம் சண்டை காலத்தில் இருந்து, அரசியல் காரணம் உட்பட பல பல பகை.
அதற்க்கு பழி வாங்க கோவில் கும்பாபிஷேகத்தை நிறுத்த முயற்சி யாம்.

மற்றவர்களின் செலவில் தனக்கு மாலையும், தேங்காயும், மரியாதையும் தரப்படவேண்டும்
மற்றவர்களின் செலவில் தனக்கு மாலையும், தேங்காயும், மரியாதையும் தரப்படவேண்டும். கிடைக்காத பட்சத்தில், பலவித கெடுதல் செய்ய வேண்டும்.
பாலகிருஷ்ணன் 30000/= அதுவும், போலீஸ் ஸ்டேஷன் செலவுக்கு கொடுத்ததோடு சரி. அவர் மகன் அது கொடுக்க நினைத்தோம், இதை செய்ய நினைத்தோம். அனால்,,,
45 லட்சம் கொடுத்த அணைத்து மக்களும் நானும் அப்படி நினைத்தேன், இப்படி நினைத்தேன் என்று இன்று வரை சொல்லிக்கொண்டேயும், நினைத்துக்கொண்டேயும் இருந்து இருந்தால்?
கோவில் ஸ்தபதி கட்டி கொடுத்து இருப்பாரா?
கோவில் ஸ்தபதி கட்டி கொடுத்து இருப்பாரா? ஐயர் கும்பாபிஷேகம் செய்து இருப்பாரா?
எனது மருமகன் கும்பாபிஷேக அன்னதானம் ஏற்பாடு செய்து இருப்பாரா?
ஒருவர் மயிர்களை புடுங்கி கயிறாக திரிப்பேன் என்று நினைத்தாராம். நினைத்ததோடு சரி. முதல் படியாகிய மயிர்களை புடுங்க ஆரம்பிக்கவும் இல்லை. எப்ப கயிறாக திரிக்க முடியும்?




நீங்கள் 5 வது உந்துதலை கவனித்தால்;-
புகழ் மீதான விருப்பம்; அதிகாரத்தை பெறுவது
வாழ்வில், 99% நாம் எந்த வித உந்துதலில் செயல் படுகிறோம் என்பதை உணர்ந்து செய்வதில்லை. பேரப்பிள்ளைகளிடம் விளையாடும் போது, அன்பு ஊறுகிறது, என்று உணர்வது இல்லை. ஆனால், நல்லா இருந்தது என்று உணர்கிறோம்.
மனைவியிடம் நாம் அன்பில் ஊர்கிறோம் என்பதை விழிப்புணர்வுடன் நாம் இருப்பது அல்லது உணர்வது இல்லை.
எனக்கு அதிகாரம் வேண்டும், மாலை வேண்டும், மரியாதை வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது என்று நாம் உணர்வதும் இல்லை.
ஆழ் மன தேவை அடைய முடியாத போது, எதிராக செயல் பட உள்ளிருந்து தூண்டப்படுகிறோம்.
அனால், இனம் புரியாத உணர்வுகளால் ஆளப்பட்டு, நாம் ஐயரை மிரட்டி வரவிடாமல் தடுக்க முயல்வோம். போலீஸ் சென்று கும்பாபிஷேகத்தை நிறுத்த முயல்வோம்.
மிக சக்தி வாய்ந்த பேய்:
நெப்போலியன் ஹில் பயம் ஒரு அவசியமான உந்துதல், ஆனால், பயத்தை நிர்வாகம் செய்ய தெரியாவிட்டால், அதுவே வாழ்வை நாசப்படுத்தும் பேய்.
இது எனது வாழ்வின் அனுபவப்பூர்வமான உண்மை.
இந்த பயத்தை பயன் படுத்தி தொழிற்சாலை உரிமையாளர்கள் நிறைய சம்பாதிக்கும் யுக்தி கேள்விப்பட்டிருக்கலாம்.
என்னை பார்த்து மற்றவர் சொல்லிவிடக்கூடாது
“கேவலம், நீ போட்டு இருக்கும் அல்லது உபயோகிக்கும் ஆடை, சேலை, தொலைபேசி, ஆட்டுக்கல், கார், மோட்டர் ரொம்ப பழைய மாடல், பென்டர்ன். காரி துப்ப வேண்டும் போல் தோன்றுகிறது’
இந்த வார்த்தை என்னை பார்த்து மற்றவர் சொல்லிவிடக்கூடாது, என்று பயத்தில் அவசியம் இல்லாத பொருட்களில் செலவு செய்வோம்.
ஆழ் மன பயம் எப்படி நம்மை இயக்குகிறது என்று நமக்கு புரிவது இல்லை.
பயம் என்பது 10 உந்துதலில் (காமம் மாதிரி) ஒரு சக்தி வாய்ந்த உந்துதல். இந்தபயத்தில், ஆறு தலைமை பிரிவாக பிரிக்கின்றார்.
ஆறு வகை பயம்களில் ஒன்று:-
விமர்சனம் குறித்த பயம்
- 1) Fear of poverty. Symptoms include: indifference, doubt, worry, over-caution, procrastination.
- 2) Fear of criticism. …
- 3) Fear of ill health. …
- 4) Fear of loss of love of someone. …
- 5) Fear of old age. …
- 6) Fear of death. …
- 1) Identify your fear. …
- 2) Acknowledge your fear.
தலைமைத்துவமும் அதன் பரிராம வளர்ச்சியும்
பாலகிருஷ்ணன் கோவில் கட்ட சொல்லி, எனது இரண்டாவது மருங்கூர் பயணத்தில், நிறைய பேர் இருந்தனர்.
அன்று எனது சஷ்டிய பூர்த்தியை முன்னிட்டு மக்களுக்கு இலவசமாக சில ஆடைகள் கொடுக்க செய்தேன், ஆனால் உண்மையை சொன்னால் துணிமணி கொடுப்பது ஒரு மலிவான சாக்கு போக்கு காரணம். அவ்வளவுதான்.
அரப்பூர் காமாச்சி அம்மனின் வழிகாட்டலின் உந்துதலில் மருங்கூர் சென்றேன். கோவில் காட்டும் முன்பே ஒரு மருங்கூரில் சரியான தலைமைத்துவம் உண்டா என்ற தேடும் பணியில் ஈடு படதான் 2வதாக வந்தேன்.
முதலில் நான் எடை போட்டது பாலகிருஷ்ணன். எனது கணிப்பு தப்பானது என்று அன்றே உணர்ந்துவிட்டேன். அடுத்து மோகன் சார் என்று முடிவு செய்தேன்.
தலைமைத்துவம் என்பது பொறுப்பு என்பதை எத்தனை பேருக்கு புரியும்? வெறும் மாலை + துண்டு + தேங்காய் இல்லை என்பதை யாரும் முக்கியமாக மருங்கூரில் உணரவில்லை என்பது எனக்கு தெளிவாக புரியும்.
சரியான தலைமைத்துவம் தேடும் உந்துதலில்
சித்ரா பல முறை கோவில் எப்ப கட்ட போகிறீர்கள் என்று கேட்டபோது, மருங்கூர் மக்கள் முன் வரட்டும் முதலில் என்று சொன்னேன்.
சித்ரா மகள் முதல் முதல் பணம் தர முன் வந்தாலும், உடனே முடிவுக்கு வரவில்லை.
மோகன் சார் தலைமையில், நான் துணி மணிகள் கொடுத்தபோது, காமாச்சி, பிரச்னை செய்தபோதும் சரி, மோகன் சார் சொன்ன கணக்கை விட மேற்கொண்டு ஒன்றிரண்டு சேலை வாங்கி வந்தும், எப்படி பற்றாமல் போனது என்று மோகன் சார் இன்று வரை விளக்கவில்லை.
இங்கு சேலை செலவு கூடி விட்டது என்ற விஷயம் இல்லை. இதில் விவாதிக்கப்படுவது பொறுப்பு, தலைமைத்துவம் பற்றி.
சரியான தலைமைத்துவம் தேடும் உந்துதலில் இருந்த போது, மலர்க்கொடி அம்மா, ஆவணியில் பாலஸ்தானம் செய்வோம் என்று சொன்னார்.
அப்பொழுது அவசரப்படவேண்டாம் அவர் மனம் புண் படும்படி பேச வேண்டியதாகி விட்டது.
நெப்போலியன் ஹில் பாடங்கள், மன முன்னேற்றத்தை தருகிறது. மன முன்னேற்றம் நல்ல தலைவருக்கு இருக்க வேண்டிய தகுதி.
அந்த தகுதி அன்றே இருந்து இருந்தால், அரப்பூர் காமாச்சிக்கு என்னை அனுப்பும் வேலை இருந்து இருக்காது.
அன்று நான் துணி கொடுத்தபோது, ஒரு வீட்டுக்கு ஒரு சேலை கொடுப்பதாக வாக்கு கொடுத்தேன். மோகன் சார் கணக்கு எடுத்தார். அவர் உத்தரவின் படி வாங்கி வந்தேன்.
ஒரு வீட்டில் இரண்டு மூன்று சேலை வாங்கியவர் என்ன நினைத்திருப்பார்?
” வெளியூர் காரனுக்கு மருங்கூர் மக்களை அடையாளம் தெரியாது. வந்த வரை நம்ம வீட்டுப் பெண்களை விட்டு வாங்கி விடுவோம். உள்ளோரில் என்னை காண்பித்து கொடுத்து விடுவானா என்ன?’
மோகன் சார் மற்றும் உள்ளூர் மக்கள் என்ன நினைத்து இருப்பார்?
“அயலூர் காரன் இன்னும் சற்று நேரத்தில் போய் விடுவான். நாம் எதுக்கு காட்டி கொடுத்து, பிரச்னையை, பகையை உருவாக்க வேண்டும்?”
அன்று சேலை பற்றாமல் போனவர்கள், வண்டியில் பெட்ரோல் செலவு செய்து காளையார் கோவில் வரும் வசதி உள்ளவர்களாக இருந்தது நல்லதாகி விட்டது. ஒரு வேலை, அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு இல்லாமல் போய் இருந்தால்???
இன்னமும் நாம் நல்ல பொறுப்பான தலைமைத்துவம் பற்றித்தான் விவாதிக்கின்றோம். கேவலம் 200 ரூபாய் சேலை பற்றி விவாதிக்கவில்லை.
இன்று வரை மருங்கூர் மக்கள் ஒரு வீட்டில் இரு சேலை வாங்கினார் என்று சொன்னாலும், யார் என்று காட்டி கொடுக்கவில்லை.
நேர்மையாக சண்டை போட்டு கேட்டது காமாச்சி. காமாட்சிக்கு எனது பணிவான சல்யூட்.
தலைமைத்துவத்தின் பரிணாம வளர்ச்சி
உங்களால் தலைமைத்துவத்தின் பரிணாம வளர்ச்சியை பார்க்க முடிகிறதா?
அரசாட்சி காலங்களில், போர் கொலை, மற்ற நாடு சொத்துக்களையும், பெண்களையும் அபகரித்தல் – இதுவே வீரம், நல்ல தலைமை என்று நம்பினோம்.
அந்த மனப்பான்மை, குடும்பத்திலும், கிராமங்களிலும்,இருந்து வந்த தொழில் முதலாளி உட்பட நிறைய பேருக்கு ஆக்கிரமித்தது.
நான் பல மனைவிகள் கட்டிக்கொள்வேன், எவண்டா என்னை கேட்பது?
நான் ஜாதியில் உயர்ந்தவன், எவனும் எவளும் மேலாடை + செருப்பு போடக்கூடாது. நான் வைத்ததுதான் சட்டம்.
நிர்வாகத்தில் நான் எடுப்பதுதான் முடிவு. என்னை மீறி எவன் இருக்கிறான்.
பயம் என்ற பேயை நிர்வாகம் செய்யாதவரை, மேற்கண்ட மற்றவரின் விருப்பு, வெறுப்பின் அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும்.
வாக்கு கொடுத்தல் என்றால் என்ன?
வாக்கு கொடுத்தல் என்றால் என்ன? யாத்ரா போன்ற படங்கள் பார்த்து, நல்ல தலைவர்களின் கதைகளை படித்து அறிய வேண்டும். (எடுகூரி சந்தின்டி ராஜசேகர ரெட்டி)
இன்று கோவில் கட்டு என்பது, பிறகு கோவில் கட்ட இடையூறுகள் செய்வது.
அதுவும் 10000 ரூபாய்க்கு கூட பலன் இல்லாத புளிய மரம் சண்டையில் 60000/= போலீசுக்கும் ஜமீனுக்கு செலவு செய்து, முட்டாள் தனமான தனிப்பட்ட பகைமை காரணத்துக்கு கோவில் கும்பாபிஷேகத்துக்கு கெடுதல் செய்வது.
என்னே அறிவு?
இப்படிக்கு
MKP. பாண்டுரங்கன்