You are currently viewing Why Balakrishnan & Ramachandran Not Responding?
Balakrishnan

Why Balakrishnan & Ramachandran Not Responding?

ஏன் இன்னும் தக்க பதில் மேல மருங்கூரை சேர்ந்த பாலகிரிஷ்ணனும், அவர் மகன் ராமச்சந்திரனும் கூற முன் வரவில்லை.

My real concern is why Ramachandran Not Responding?

ஷியாமி (சாமி), எனக்கு ஒரு உண்மை இல்லை சில உண்மைகள் தெரிஞ்சு ஆகனும் ஷியாமி.

ஏன் இன்னும் தக்க பதில் மேல மருங்கூரை சேர்ந்த 

அவர்கள் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருக்கலாம்.

ஏன் 45 லட்ச ரூபாய் கோவில் கட்ட காரணமான எனக்கு மேல மருங்கூர் மக்கள் கூச்சமுடையவர்களிடம் கேட்டு அவர்கள் சார்பாக எனக்கு பதில் சொல்லக்கூடாது?

Balakrishnan

கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் தேவை-Ramachandran Not Responding. 

எத்தனையோ பெரியவர்கள், படித்தவர்கள், நல்ல பதவியில் உள்ளவர்கள் இருக்கும் மேல மருங்கூர் மக்களே எனக்கு உதவ மாட்டிர்களா?

கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் தேவை:

1) மு கி பாலுச்சாமி செட்டியாருக்கு பாத்தியமான சொத்தை, பாலகிருஷ்ணன் வேலு செட்டியாரை அணுகி வாங்கினார்? இதில் என்ன மோசடி நடந்தது?

சரி அவர் வாங்கிய பகுதி போக மீதத்தை மு கி பாலுச்சாமி செட்டியார் மற்ற வாரிசுகளின் அவர்கள் அனுமதி இல்லாமல் ஏன் ஆக்ரமித்துள்ளார்?

2) ஏன் கும்பாபிஷேகம் செய்யும் ஐயரை வரவேண்டாம் என்று மிரட்டினார்?

3)ஏன் போலீஸ் சென்று கும்பாபிஷேகத்தை நிறுத்த முயன்றார்?

எனக்கு நேரம் இல்லை-Ramachandran Not Responding. 

எனக்கு நேரம் இல்லை என்று பல முறை சொன்னதுண்டு. உண்மையில் எல்லோருக்கும் 24 மணி நேரம் இருக்கிறது. அதுதான் உண்மை.

நேரம் இல்லை என்றால், இதை எழுதி தொலைக்க நேரம் செலவு செய்வதை விட நான் விரும்பும் குடும்ப, தொழில், தோட்டம், படித்தல், போன்ற ஆக்கப்பூர்வ செயல்களை செய்வதில் செலவு (நேர முதலீடு) செய்வது லாபகரமானது என்று பொருள்.

பிறகு ஏன் பிரச்னையை தொலைத்து தலை முழுகாமல் மீண்டும் மீண்டும் இந்த நாசமாப்போற, விளங்காத, உருப்படாத பிரச்னையை மீண்டும் மீண்டும் எழுதி தொலைக்கிறேன்?

“நீங்கள் உருப்படவே மாட்டிங்கடா, தொலைஞ்சு போங்கடா” என்று எனது தந்தையார் போட்டு விட்டு சென்றது  36 வருடம் ஒரு புல்லை கூட புடுங்க முடியவில்லை.

எனது தந்தையார் செய்தது தவறு, தப்பு இல்லை. அந்த தவறை சரி செய்யத்தான் எழுதுகிறேன்.

கடந்த காலத்தில் யார் இடையூறு செய்தது என்பது எனக்கு முக்கியம் இல்லை.

எனது தந்தை காலத்தில் தேங்காய் மாலை இடைஞ்சல் செய்து பல இடையூறுகளை விளைவித்தது பலர் என்று சொல்லப்படுகிறது. அதில் பாலகிருஷ்ணன் தந்தையும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.

கடந்த காலத்தில் யார் இடையூறு செய்தது என்பது எனக்கு முக்கியம் இல்லை.

எனக்கு முக்கியமானது 2 விஷயம்

 

எனக்கு முக்கியமானது 2 விஷயம்:

1) பழைய கோவிலிலும் புதிய கோவிலிலும், நிர்வாக செயல்களிலோ, ஒருங்கிணைக்கும் செயல்களிலோ, அல்லது ஒரு பெரிய தொகை கொடுக்கும் தகுதி உள்ளவனோ, அல்லது ஒரு பெரிய தொகை வசூல் செய்யும் தகுதி உள்ளவனோ இடையூறு செய்யவில்லை. ஒரு தகுதியும் இல்லாதவன் தான், தேங்காய்க்கும், மாலைக்கும், தலைவன் பதவிக்கும் அலைந்தான்கள்.

2)36 வருடத்தோடு முற்றுப்புள்ளி வைப்பது எனக்கு மிக அவசியம்.

இனி இந்த கலாச்சாரம் வளராமல் தீயை வைத்து கொளுத்துவது அவசியம்.

பீஸை பிடுங்கி எரிய வேண்டியது முக்கியம்.

அடுத்த கும்பாபிஷகம் நடத்தும் போது, ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் கமிட்டி பெயரை கேட்டாலே……..அதிரவேண்டும்.

நாம் கையே நீட்டி வசூல் செய்தது

இதில் முக்கியமான பொறுப்பு, 45 லட்சம் யார் ஒருவரும் போட்டு கோவில் கட்டவில்லை. நாம் கையே நீட்டி வசூல் செய்தது. இந்த கோவிலை நிர்வகிக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு நமக்கு உள்ளது.

சாதாரண காமாட்சியிடம் கையே நீட்டினோமா, பெரிய வக்கீலிடம் நீட்டினோமா என்பது முக்கியம் இல்லை. கொடுத்தவர்கள் கோவில் செயல் படும் என்ற நம்பிக்கையில்தான் கொடுத்து உள்ளனர்.

எனக்கு தேங்காய், எனக்கு மாலை, இல்லாவிட்டால் கோவிலை செயல் பட விட மாட்டேன் என்று இடையூறு செய்யும் ஒரு பயலுக்கு பயந்து செயல் படுவது என்றால் நாம் வசூல் செய்து இருக்கக்கூடாது.

இப்படிக்கு

MKP பாண்டுரங்கன்

பழய உரையாடல் தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்:-

Leave a Reply