Creating Awareness to the Village 1 is my effort to alert MelaMarungoor Villagers.
I hope Creating Awareness to the Village 1 will begin to work in people
“தனக்குள் இரண்டு நாய்கள் சதா சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு நாயின் பெயர் நெகடிவ் ( கோபம், பொறாமை, வெறுப்பு, பழி வாங்கும் உணர்வு,). இன்னொன்றின் பெயர் போசிடிவ் (அன்பு, தயை, பொறுமை, தொண்டு, பக்தி,..)”
“அந்த இரண்டு நாய்கள் என்னிடம் மட்டும் அல்ல, ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளது.”
எது தாத்தா ஜெயிக்கும் என்று குழந்தை ஆர்வத்துடன் கேட்டது.
“நாம் எதுக்கு தீவனம் கொடுக்கிறோமோ அதுவே ஜெயிக்கும்.”
பாலகிருஷ்ணன் மகன் ராமசந்திரனும் நானும் உரையாடல் கேட்க விரும்பினால் கீழ் உள்ள லிங்கை டாப் செய்து பார்க்கலாம், கேட்கலாம்
By MKP Pando
புத்தர், ஓஷோ, போன்றவர்கள் நமது எண்ணங்களை கூர்ந்து கவனிக்க, அதாவது விழிப்பாக இருக்க சொன்னார்கள்.
நமக்குள் இருக்கும் இரண்டு நாய்களில் எதற்கு தீனி கொடுக்குறோமோ அதுவே வாழும். மற்றொரு நாய் பலமற்று சொத்தையாகி விடும்.
“விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை”. ஆனால் விட்டுக் கொடுப்பதும், அனுசரித்துப் போவதும் தொடர்ந்தால், நமக்கும் உணர்வுகள் உண்டு என்பதையே மறந்து விடுவார்கள்.
விட்டுக்கொடுப்பது, மன்னிப்பது, நமக்குள் வாழும் நல்ல நாய் சாப்பிடும் தீனி. அதாவது போசிடிவ் நாய்.
புளியமரம், தேர்தல் போன்ற பிரச்சனைகளுக்கு 2, 3, தலைமுறையாக பகைமை என்ற தீனி, நமக்குள் உள்ள நெகடிவ் நாய் சாப்பிடும் தீனி.
நமக்குள் இருக்கும் எந்த நாய்க்கு தீனி போடுகிறோமோ அந்த நாய் கொழு கொழு என்று முடிவு எடுக்க உதவும்.
எவன் முதலீடு செய்தால் எனக்கு என்ன? எவனோ, எங்கோ இருந்து வந்து பொது தொண்டு, கோவில் கட்டுதல் செய்தால் எனக்கு என்ன?
உள்ளூரில், என் பகைவர் தலையிடுவதால், அவரை செயல் பட விடாமல் என்ன கெடுதல் செய்ய இயலுமோ அதை நான் செய்வேன்.
குழந்தைக்கு கூட தெரியும் நான் எந்த நாயை உள்ளே வளர்க்கிறேன் என்று.
தம்பி ராமச்சந்திரன் விட்டு கொடுப்பது பற்றி ஒரு ஆலோசனை சொன்னது போல், அவர் தந்தைக்கு 30 ஆண்டுகளாக சொல்லவில்லை போல்?